ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 79
கீதையில் சில சொற்றொடர்கள் - 79
मूढोऽयं नाभिजानाति माम् । (अध्याय ७ - श्लोक २५)
மூடோயம் நா பி ஜானாதி மாம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 25)
Moodhoyam NaaBhiJaanaathi Maam ... (Chapter 7 - Shloka 25)
அர்தம் : மூடர்கள் என்னை அறிவதில்லை ...
மூடர்கள் என்னை அறிவதில்லை ... என்னை அறியாதவர்கள் மூடர்கள் ...
உலகம் மூடன் என்று சொல்வது யாரை ? உலகத்து விஷயங்களை அறியாதவன் மூடன் . ஸம்பாதிக்கத் தெரியாதவன் மூடன் . பள்ளி , கல்லூரி படிப்பில் ஈடுபடாதவன் மூடன் ... உலக வ்யவஹாரங்கள் அறியாதவன் மூடன் ... உலகத்து மூடன் எப்படியோ வாழ்ந்து விடுகிறான் ... அவனுக்கேற்ற வட்டம் அவனுக்கும் சேர்கிறது . அவன் அறிந்த ஏதோ ஒன்றை வைத்து அன்றாட சோற்றை ஸம்பாதித்து விடுகிறான் . ஒரு நாள் இறந்து போகிறான் . அவனுக்கும் , உலகத்தில் பெரும் ஸாதனை செய்ததாக தன்னையே மெச்சிக் கொள்ளும் அறிவாளிகளுக்கும் பெரிதாக வித்யாஸம் ஏதுமில்லை . அரஸியல்வாதிகள் , ஸமூஹ சீர்திருத்தவாதிகள் , விஶேஷ கலைத் திறன் கொண்ட கலைஞர்கள் , மெத்தப் படித்த டாக்டர்கள் , எஞ்ஜினியர்கள் , ஆடிடர்கள் , பெரும் தொழில்அதிபர்கள் , வ்யாபாரிகள் , திறமையாக தொழில் பழகி பணம் ஸம்பாதிக்கும் வகீல்கள் , தரகர்கள் , கட்டிடங்கள் கட்டுபவர்கள் , போன்ற பலரும் பணத்தைத் தம்மிடம் வரவழைக்கும் கலையைப் பயிற்சி செய்து , வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . அவ்வளவுதானே ? இவர்கள் பெரும் பணம் ஸம்பாதித்து , செலவழிக்கிறார்கள் . சொத்து சேர்க்கிறார்கள் . மூடன் குறைவான பணம் .சேர்க்கிறான் இவர்களைச் சுற்றி அதிகக் கூட்டம் கூடுகிறது . மூடனை சுற்றி சிறிய கூட்டம் சேர்கிறது . இவர்களின் பெயர் பத்ரிகைகளில் வருகிறது . முகம் டீவியில் தெரிகிறது . கொஞ்ஜம் போராடி சில பதவிகளை அடைகின்றனர் இவர்கள் . மூடனுக்கு இவை கிடைப்பதில்லை . மூடன் என்று கருதப் படுபவனும் குடும்பம் சேர்க்கிறான் . குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான் . இறுதியில் அறிவாளி , பெரும் ஸாதனையாளன் , பணக்காரன் , படிப்பில் முதலிடம் வந்தவன் , ஃபெயில் ஆனவன் , மூடன் , வாழ்க்கையில் எதுவுமே செய்யாதவன் ... அனைவரும் எல்லாவற்றையும் இங்கு விட்டு விட்டு செத்துப் போகின்றனர் . சில நாட்களில் அவன் வாழ்ந்ததற்கான எந்த சுவடும் இல்லாது போகிறது .
உலகத்தில் வாழ்வதற்கு , வயிற்றை நிரப்புவதற்கு , அவரவர் திறமைக்கு ஏற்ப எதையோ செய்யுங்கள் . அதல்ல முக்யம் . அவனை அறிய முயலுங்கள் . அதுவே நாம் செய்யக்கூடியது . அதுவே புத்திஶாலித்தனம் . இதைச் செய்யாதவர்கள் மூடர்கள் . செய்ய வேண்டியதை விட்டு விட்டு , வேறு ஏதேதோ செய்பவன்தானே மூடன் . இதுதான் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது .
மநுஷ்யன் இந்த திஶையில் ஏன் முயற்சிகள் செய்வதில்லை ? உலகக் கவர்ச்சிகளே காரணம் . பணம் , பெயர் , புகழ் , பதவி , செல்வாக்கு , பரிஸு , பாராட்டு , போன்ற வெற்று விஷயங்கள் , அல்ப விஷயங்கள் பெரும் கவர்ச்சிகரமாகத் தெரிகின்றன . பளபளப்பாக மின்னிடும் இவ்வுலகம் கண்களைக் கூஸ வைக்கிறது . அக்கண்களுக்கு வேறெதுவும் தெரியாது . கவர்ச்சிகள் சிந்தனையை மழுங்க அடிக்கிறது . சிந்தனை இழந்த இவன் ஒரு வகை போதையில் வாழ்க்கையைக் கழித்து விடுவான் . இவனையே மூடன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments
Post a Comment