ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 90
पुनरावर्तिनः ... (अध्याय ८ - श्लोक १६)
புநராவர்தினஹ ... (அத்யாயம் 8 - ஶ்லோகம் 16)
Punaraavartinah ... (Chapter 8 - Shloka 16)
அர்தம் : அனைத்தும் மீண்டும் மீண்டும் வருவதே ...
ஸ்ரீ க்ருஷ்ணனின் அத்புத வாக்குமூலம் . இந்த வாக்யத்தையே ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்லி இருப்பார் .
ரெண்டு சிந்தனைகள் வழியாக உலக அநுபவங்களைப் பார்க்கலாம் . நேர்க்கோடு என்றிடும் சிந்தனை ... வட்டம் என்றிடும் மற்ற சிந்தனை ...
முதல் வகை அனைத்தையும் நேர்க்கோடாகப் பார்க்கிறது . இது அனைத்திற்கும் ஒரு ஆரம்பம் மற்றும் முடிவை இணைத்திடும் . அநுபவங்கள் அனைத்தும் , 'இந்த ஒரு முறைதான்' என்ற முத்ரையுடன் வரும் . "இதை நீ நழுவ விட்டால் , மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது" . எனவே , அநுபவத்துடன் பரபரப்பு இருந்திடும் . அநுபவத்தை இழக்கும்போது ஏமாற்றம் , ஶோகம் மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவை இருந்திடும் . குறுகிய நோக்கு , அறியாமை மற்றும் ஒருங்கிணைந்த பார்வை இல்லாததால் பிறந்தது இந்த சிந்தனை . மேற்கத்திய தேஶங்களில் இந்த சிந்தனையின் தாக்கம் பரவலாக உள்ளது . இன்று , சில சிந்தனையாளர்கள் , விக்ஞானிகள் மற்றும் ஆன்மீக வாதிகள் இதன் பிடியில் இருந்து மெதுவாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் .
மற்றது ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடுவது . வட்டமாகப் பார்ப்பதற்கு இந்த சிந்தனையே ஆதாரம் . இதன் படி அநுபவங்கள் அனைத்தும் ஒரு வட்டத்தைப் போல ஆதியும் அந்தமும் அற்றவை . மீண்டும் மீண்டும் வருபவை . எனவே , இந்த முறை இழந்தால் , இழப்பும் இல்லை . மீண்டும் வரும் . காலம் ஒரு வட்டப் பாதையில் உள்ளது . நம் வாழ்க்கை ஒரு வட்டப் பாதை . அநுபவங்களும் வட்டப் பாதையில் மீண்டும் மீண்டும் நிகழக் கூடியவை . அமைதி , பொறுமை , வருவதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது , புரக்ஷி கரமான கண்ணோட்டம் இல்லாமை , பரபரப்பு மற்றும் பதட்டம் இல்லாமை ஆகியவை இந்த சிந்தனையின் விளைவுகள் . உலகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தேஶங்களில் , குறிப்பாக பாரத தேஶத்தில் இந்த சிந்தனையின் தாக்கம் ப்ரதானமாக உள்ளது .
'அனைத்தும் வட்ட மயமானவை' என்பதே ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது . நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் , பல அநுபவங்கள் பல முறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருப்பதைக் காணலாம் . நாம் பேசும் வார்த்தைகளும் அவையே மீண்டும் மீண்டும் . நான் உரை நிகழ்த்தச் செல்லும் இடங்களுக்கு என்னுடன் எவராவது வந்தால் , இதை உணரலாம் . அதிகம் படித்தவர் வெவ்வேறு விஷயங்கள் பேசினாலும் , அவர் திரும்பத் திரும்பப் பேசுவது குறைவாக இருந்தாலும் , இது உண்மை . புழுக்கள் அன்றாடம் பிறக்கும் . ஹிரண்யகஶிபு அல்லது ராவணன் யுகங்களில் ஒரு முறை பிறந்திடுவான் . ஸாதாரணமானவை அடிக்கடி நிகழ்ந்திடும் . விஶேஷமானவை அரிதாக நடந்திடும் . அனைத்தும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திடும் என்பதே ஸத்யம் .
நமது நினைவு குறுகிய கால நினைவு . நமது வாழ்க்கையும் குறுகியதே . அதனால் நாம் மறந்து விடுகிறோம் . காலம் வட்டமய ப்ரயாணத்தில் உள்ளது . அதனால் ஜன்மமும் மரணமும் மீண்டும் நிகழ்பவை . மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல . கமா தான் . மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கைத் தொடரும் .
பாரதத்தில் ஹிந்துக்கள் மத்தியில் முனைப்புடன் புதிய முயற்சி செய்யும் தன்மை குறைவாகக் காணப்படுவதற்கு இந்த சிந்தனையே காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது . இது உண்மையாக இருக்கலாம் . ஆனால் , அனைத்தும் வட்டமயம் , மீண்டும் மீண்டும் நிகழ்பவை என்பது ஸத்யம் . ஸத்யத்திற்கு எதிராக போராடுவது வ்யர்தமானது . வெற்று முயற்சி .
Comments
Post a Comment