ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 91
सहस्र युग पर्यन्तम् अहर्यद्ब्रह्मणः । (अध्याय ८ - श्लोक १७)
ஸஹஸ்ர யுக பர்யந்தம் அஹர்யத்ப்ரஹ்மணஹ ... (அத்யாயம் 8 - ஶ்லோகம் 17)
Sahasra Yuga Paryantham Aharyad Brahmanah ... (Chapter 8 - Shloka 17)
அர்தம் : ப்ரஹ்மனின் பகல் நமக்கு ஓராயிரம் யுகங்கள் ... ப்ரஹ்மனின் ஒரு ராத்ரீயும் நமது ஆயிர யுகங்கள் ...
ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வாக்யம் , காலத்தைப் பற்றி ஹிந்துக்களின் அறிவை ப்ரகடனப் படுத்துகிறது . வேத காலத்திலேயே நாம் காலத்தைப் பற்றி ஆழமாக அறிந்திருந்தோம் .
கீழே , நமது கால கணனத்தைக் கொடுக்கிறேன் . இது கீதையின் நான்காம் அத்யாயத்தில் விரிவாக சர்சை செய்யப் பட்டுள்ளது . இன்றைய விஷயத்துடன் ஸம்பந்தம் உள்ளதால் இங்கு கொடுக்கிறோம் .
நமது காலக் கணக்கில் ‘த்ருடி’ மிகச் சிறியது . ‘கல்பம்’ மிக நீண்டது .
100 த்ருடி = 1 தத்பரம்
60 தத்பரம் = 1 பரம்
60 பரம் = 1 விலிப்தம்
60 விலிப்தம் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழி
60 விநாழி = 1 நாழி
60 நாழி = 1 நாள் (24 மணி நேரம்)
(பகலும் ராத்ரீயும் 30 நாழிகள்)
7 தினங்கள் = 1 ஸப்தாஹம்
(வாரம் . துவங்குவது ஞாயிறு அன்று . திங்கள் அல்ல .)
சாந்த்ரமான கணக்கில் அமாவாஸ்யைக்கு அடுத்த நாள் (ப்ரதமை) முதல் அடுத்த அமாவாஸ்யை வரை ஒரு மாஸம் . ஜைனர்களின் மாஸம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அடுத்த பௌர்ணமி வரை) . பக்ஷம் என்பது அரை மாஸம் . ரெண்டு பக்ஷங்கள் உண்டு . க்ருஷ்ண பக்ஷம் - பௌர்ணமி முதல் அமாவாஸ்யை வரை ... ஶுக்ல பக்ஷம் - அமாவாஸ்யை முதல் பௌர்ணமி வரை ...
சைத்ர , வைஷாக , ஜ்யேஷ்ட , ஆஷாட , ஶ்ராவண , பத்ரபாத , அஶ்வின் , கார்திக , மார்கஷீர்ஷ , புஷ்ய , மாக , ஃபால்குன ... இவை சாந்த்ரமான மாஸங்கள் . சாந்த்ர மாஸம் ஸௌர மாஸத்தை விட ஏறக்குறைய ஒரு நாள் சிறியது என்பதால் , மூன்று வர்ஷங்களுக்கு ஒரு முறை சாந்த்ர மான வர்ஷத்தில் ஒரு அதிக மாஸம் சேர்க்கப் படுகிறது . இது ஹிந்துக்களின் வான ஶாஸ்த்ர ஞானத்தை பளிச்சென்று அறிவிக்கும் சுடர் விளக்கு .
ஸௌர காலக் கணக்கில் ஒரு மாஸம் ஸங்க்ராந்தி முதல் அடுத்த ஸங்க்ராந்தி வரை . பூமி ஸூர்யனைச் சுற்றி ப்ரயாணிக்கும் வட்டப் பாதையை 12 கோணங்களாக வகுத்து , ஒவ்வொன்றும் ஒரு ஸௌர மாஸமாக கணக்கிடப் படுகிறது . இவை ஸூர்ய ராஶியாகவும் அறியப் படுகின்றன . இது வட்டக் கணக்கு . பூமியை மையமாக வைத்து , ஸூர்யனின் நேர்க்கோட்டுப் பாதையை 12 ராஶிகளாகப் பிரிப்பதும் ஒரு முறை .ஸௌர மாஸம் ஸங்க்ராந்தி அன்று , (ஸூர்யன் அடுத்த ராஶிக்குள் ப்ரவேஶிக்கும் தினமே ஸங்க்ராந்தி) . மேஷ , ர்ஷப , மிதுன , கடக , ஸிஹ்ம , கன்னி , துலா , வ்ருஶ்சிக , தனுர் , மகர , கும்ப , மீன .. இவை 12 ஸௌர மாஸங்கள் . ஸௌர வர்ஷம் ஆரம்பிப்பது மேஷ ஸங்க்ராந்தி அன்று . மகர ஸங்க்ராந்தியான பொங்கல் தினம் நாம் அனைவரும் அறிந்ததே .
அயனம் என்பது அரை வர்ஷம் . கடக ஸங்க்ராந்தி (ஆடி மாஸப் பிறப்பு) முதல் மகர ஸங்க்ராந்தி (தை மாஸப் பிறப்பு) வரை உள்ள அரை வர்ஷம் தக்ஷிணாயணம் என்றும் மகர ஸங்க்ராந்தி முதல் கடக ஸங்க்ராந்தி வரை உள்ள அரை வர்ஷம் உத்தராயணம் என்றும் அறியப் படுகின்றன . ஸூர்யனின் வடக்கு - தெற்கு திஶை ப்ரயாணத்தை மையமாகக் கொண்டது அயனக் கணக்கு .
யுகம் என்பது அடுத்த கால அளவு . நான்கு யுகங்கள் உள்ளன . ஸத்ய யுகம் அல்லது க்ருத யுகம் 17,28,000 வர்ஷங்கள் , த்ரேதா யுகம் 12,96,000 வர்ஷங்கள் . த்வாபர யுகம் 8,64,000 வர்ஷங்கள் மற்றும் கலி யுகம் 4,32,000 வர்ஷங்கள் கொண்டவை . இவை நான்கும் சேர்ந்த சதுர் யுகம் 43,20,000 வர்ஷங்கள் .
43,20,000 வர்ஷங்கள் = 1 சதுர் யுகம்
71 சதுர் யுகம் = 1 மன்வந்தரம்
14 மன்வந்தரம் = 1 கல்பம்
1 கல்பம் = ப்ரஹ்மனின் அரை நாள் (பகல் / ராத்ரீ)
720 கல்பங்கள் = ப்ரஹ்மானின் ஒரு வர்ஷம்
100 ப்ரஹ்ம வர்ஷங்கள் = 1 மஹா கல்பம் (ப்ரலயம்) (311,040,000,000,000 மநுஷ்ய வர்ஷங்கள்)
(ஒரு ப்ரஹ்மனின் முடிவு ... மற்றொரு ப்ரஹ்மனின் ஆரம்பம் ...)
காலம் ஆஶ்சர்யகரமானது . காலத்தைப் பற்றிய ஞானம் பரமாத்மாவை அறியத் தூண்டிடும் . நமது வாழ்நாள் மிகக் குறுகியது . கால ப்ரவாஹத்தில் சிறு துளி . காலம் ஆதியும் அந்தமும் அற்றது . அதனால் காலம் தெய்வமாகவே போற்றப் படுகிறது . யமராஜனே காலதேவன் . ஶிவன் அல்லது மஹாகாலன் காலத்திற்கு அப்பாற்பட்டவன் , அகாலன் . (உலகம் இன்று அழிந்து விடும் , ஸெப்டெம்பர் 23 அன்று அழிந்து விடும் .. டிஸம்பர் 31 அன்று அழிந்து விடும் என்று கிளப்பப் படும் க்றிஸ்தவ புரளி எல்லாம் டுபாக்கூர் ...)
காலம் நித்யமானது . காலம் எதையும் ஸாராதது . அதே ஸமயம் சூழ்நிலை , மனநிலை மற்றும் இடத்தை ஸார்ந்தது . ஒருவருக்கு நீண்ட காலமாக உள்ளது மற்றவருக்கு குறுகிய காலமாகத் தோன்றும் . ஒரு இடத்தில் குறுகியதாகத் தோன்றும் காலம் வேறொரு இடத்தில் மிக நீண்டதாகத் தோன்றிடும் . உத்ஸாஹமாக ஒரு கார்யத்தில் ஈடுபடும் போது காலம் வேகமாக ஓடும் . மனஸ் லயிக்காமல் , அலுப்புடன் ஒரு கார்யத்தில் ஈடுபடும் போது காலம் மிக மெதுவாக ஓடிடும் . புதன் க்ரஹத்தில் காலம் வேகமாக ஓடும் . ஶனி கிரஹத்தில் மெதுவாக ஓடும் . நினைவிலும் கனவிலும் ஒரு சில க்ஷணங்களில் பல வர்ஷங்கள் ஓடி விடும் .

ஒரு புழு தன்னுடைய எல்லா கார்யங்களையும் அதாவது , பிறந்து , வளர்ந்து , உண்டு , பெண் இனத்துடன் கூடி , அடுத்த தலைமுறையை படைத்து , ... கடைஸியில் இறந்து ... எல்லாம் தன் ஒரு நாள் வாழ்க்கையில் முடித்து விடுகிறது . மற்ற ம்ருகங்கள் ஒரு சில வர்ஷங்களில் முழு வாழ்க்கையை வாழ்ந்து விடும் . மநுஷ்யன் அதே கார்யங்களை எழுபது எண்பது வர்ஷங்களில் செய்து முடிக்கிறான் .
தேவ லோகத்து ஒரு பகல் அல்லது ஒரு ராத்ரீ , பித்ரு லோகத்தில் ஒரு பக்ஷம் (பதினைந்து தினங்கள்) , மநுஷ்ய லோகத்தில் ஒரு அயனம் அல்லது ஆறு மாஸங்கள் . இங்கு உத்தராயனம் என்பது பித்ரு லோகத்தில் ஶுக்ல பக்ஷம் , தேவ லோகத்தின் பகல் . இங்கு தட்சிணாயனம் என்பது பித்ரு லோகத்தில் க்ருஷ்ண பக்ஷம் மற்றும் தேவ லோகத்தில் ராத்ரீ . நமக்கு ஒரு சில லக்ஷ வர்ஷங்கள் ப்ரஹ்மனுக்கு ஒரு தினமே .

Comments
Post a Comment