ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 92
अव्यक्ताद्व्यक्त यः सर्वाः प्रभवन्त्यहरागमे ... रात्र्यागमे प्रलीयन्ते । (अध्याय ८ - श्लोक १८)
அவ்யக்தாத் வ்யக்த யஹ ஸர்வாஹ ப்ரபவந்தி அஹராகமே ... ராத்ர்யாகமே ப்ரலீயந்தி (அத்யாயம் 8 - ஶ்லோகம் 18)
Avyaktaad Vuakta Yah Sarvaah Prabhavanti Aharaagame ... Raathryaagame Praleeyante ... (Chapter 8 - Shloka 18)
அர்தம் : ப்ரஹ்மனின் பகல் துவங்கும் போது , ஸுப்தமாக இருந்த நிலையில் இருந்து , அவ்யக்தமாக , வெளிப்படாமல் இருந்த நிலையில் இருந்து , அனைத்து உயிர்களும் வ்யக்தம் ஆகின்றன ... வெளிப்படுகின்றன ... ப்ரஹ்மனின் ராத்ரீ ஆரம்பிக்கும் போது , உயிர்கள் அனைத்தும் மீண்டும் லயம் ஆகி விடுகின்றன ... ஸுப்தமாகி விடுகின்றன .
மூன்று நிலைகளில் இந்த வாக்யத்தின் பாவத்தை உணர்ந்து கொள்ளலாம் .
ஒன்று : - நமது அன்றாட பகலும் ராத்ரீயும் ... பகல் வந்தால் நாம் நித்ரையில் இருந்து விழிக்கிறோம் . நித்ரையில் நாம் நமக்குள் ஒடுங்கி இருந்தோம் . லயமாகி இருந்தோம் . நாம் மாத்ரம் தனியாக , ஸுப்த நிலையில் இருந்தோம் . தேஹ உணர்வு அழிந்திருந்தது . நம்மைச் சுற்றி ஒரு உலகமும் அதில் உயிர்களும் உள்ளன என்ற உணர்வை இழந்து விடுகிறோம் . நித்ரை ஒரு வகையில் மரண நிலையே . மலையாளத்தில் காலையில் விழிப்பதற்கு 'உணருன்னு' என்ற வார்தை உபயோகப் படுகிறது . உணர்வற்ற நிலையிலிருந்து , தேஹம் பற்றிய உணர்வு , உலகம் பற்றிய உணர்வு , மேலோட்டமான 'அஹங்காரத்துடன் இணைந்த நான்' என்ற உணர்வு இழந்த நிலையில் இருந்து , வெளிப்படுகிறோம் . விழித்துக் கொள்கிறோம் . ராத்ரீ வரும் போது மீண்டும் லயம் ஆகி விடுகிறோம் . ஒடுங்கி விடுகிறோம் . உணர்வற்ற நிலையை எய்து விடுகிறோம் .
ரெண்டு : - மரணம் , புனர்ஜன்மம் என்ற அந்த நிலை . மரணம் வரும்போது , ஸுப்த நிலைக்குச் சென்று விடுகிறோம் . ஸுப்த நிலையில் இருந்து புனர்ஜன்மம் எடுத்திடும் போது , மீண்டும் வ்யக்த நிலையில் , வெளிப்படுகிறோம் . மரணம் நம் அன்றாட நித்ரையைப் போன்றது . தேஹ உணர்வு கிடையாது . (தேஹம் கிடையாது .) உலக உணர்வு கிடையாது . (உலகத்தை உணர வேண்டும் என்றால் , இந்த்ரியங்கள் வேண்டும் . தேஹம் வேண்டும் .)
மூன்று : ஸ்ருஷ்டி - லயம் என்ற அந்த நிலை ... ப்ரஹ்மனின் பகல் வரும் போது நாம் , படைப்பில் உள்ள அனைத்து உயிர்களும் , லய நிலையில் இருந்து , வெளிப்படுகின்றன . வ்யக்தம் ஆகின்றன . ப்ரஹ்மனின் பகல் முடிந்து ராத்ரீ பிறக்கும் போது , அனைத்து உயிர்களும் மீண்டும் லயமாகி விடுகின்றன . விஸர்ஜனம் ஆகி விடுகின்றன . அடுத்த பகலின் ஆரம்பத்தில் மீண்டும் வெளிப்படுகின்றன .
மூன்று நிலைகளிலும் அதே உயிர்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்றன . ஒடுங்குகின்றன .

Comments
Post a Comment