ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 103
யாந்தி தேவவ்ரதா தேவான் , பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதாஹ ... பூதாநி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோsபி மாம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25)
Yaanti DevaVrataa Devaan Pitroon Yanti PitruVrataah .. Bhootaani Yanti Bhootejyaa Yanti Madyaajino(a)pi Maam ... (Chapter 9 - Shloka 25)
அர்தம் : தேவர்களை பூஜிப்பவர்கள் தேவத்வத்தை அடைகின்றனர் . பித்ருக்களை பூஜிப்பவர்கள் பித்ரு பாவத்தை அடைகின்றனர் . பூத ப்ரேதங்களை பூஜிப்பவர்கள் அதே பாவனையை அடைகின்றனர் .. என்னை பூஜிப்பவர்கள் என்னை அடைகின்றனர் .
நாம் எதை நாடுகிறோமோ , அதுவே நமக்குக் கிடைக்கும் . அல்ப விஷயங்களை நாடினால் அல்ப விஷயங்களே கிடைக்கும் . உயர்ந்த விஷயங்களை நாடினால் உயர்ந்த விஷயங்கள் கிடைக்கும் .
நாட்டம் எவ்வாறு ஏற்படுகிறது ? அவரவர் ஸ்வபாவத்திற்கு ஏற்ப ... ஒரு IAS அதிகாரி . மந்த்ரியிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்திட என்னிடம் கெஞ்ஜுவதைப் பார்த்தால் , "இவர் ஒரு IAS அதிகாரியா , கார்யாலய வாஸலில் நிற்கும் வாச்மேனா என்று ஸந்தேஹம் வரும் . இவ்வாறு கூறும் போது வாச்மேனைத் தாழ்த்துவதல்ல என் நோக்கம் . அல்ப நாட்டங்கள் இல்லாத ஸாதாரண மநுஷ்யர்கள் பலரை நான் அறிவேன் . நம்முடைய ஒரு தாரணையை , நாம் நம்பிடும் ஒரு கருத்தை , தவறான கருத்தை highlight' செய்யவே இந்த ஒப்பிடுதல் ..
ஸமீபத்தில் , "சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற தலைப்புடன் ஒரு படமோ அல்லது ஏதோ ஒரு படத்தில் இந்த வசனமோ பேசப்பட்டது . முற்றிலும் அபத்தமான கருத்து . ஆனால் , இத்தகைய பல கருத்துக்கள் நம்மில் பெரும்பாலோர் மனங்களில் பதிந்துள்ளன . "தனவந்தன் அல்பமாக (பேச்சு மொழியில் சொல்ல வேண்டுமானால் - பக்கியாக) இருக்க மாட்டான்" . (நாம் விமானங்களில் பஃபே என்ற பார்ட்டிகளிலும் காணும் காக்ஷிகள் இக்கருத்துக்கு மாறானவை .) "படித்தவன் கோழையாக இருக்க மாட்டான்" ; (என்னுடன் படித்தவர்கள் பலரை மிக அருகில் இருந்து பார்க்கிறேன் . எல்லாம் இருந்தும் தொடை நடுங்கிகளாக , தவறு என்று தான் கருதிடும் விஷயத்தை எதிர்க்க முடியாதவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன் .) "பதவியில் இருப்பவன் குழைபவனாக , கூழ் கும்பிடு போடுபவனாக இருக்க மாட்டான்" ; கட்சியின் அதிபர் தயவால் கிடைத்த பதவியைக் காத்துக் கொள்வதற்காக கூன் முதுகுடன் வாழ்பவர்கள் எத்தனை எத்தனை !! "வயஸு முதிர்ந்தவன் குழந்தைத்தனமாக , மூடனாக இருக்க மாட்டான்" ; (முக்கால் நிஜாரை அணிந்து கொண்டு , தலை மயிறுக்கு ஸாயம் பூசிக் கொண்டு , வாஸனை த்ரவ்யங்களைத் தெளித்துக் கொண்டு , குழந்தைத்தனமான பேச்சுக்களில் நேரத்தைக் கழித்திடும் எத்தனை 60 , 70 , ஏன் 80 வயஸு நபர்களை நாம் காண்கிறோம் .)
முன்னொரு காலத்தில் இவை ஸத்யமாக இருந்திருக்கலாம் . ஆங்க்லக் கல்வி , ஸுக போகத்திற்கு அளிக்கப் படும் மஹத்வம் , இவை காரணமாக இன்று பெரும்பாலும் இக்கருத்துக்கள் பொய்யானவை . ஒருவன் சிறியவனா பெரியவனா , படித்தவனா படிக்காதவனா , பெரிய பதவியில் இருப்பவனா ஸாதாரண பதவியில் இருப்பவனா , தனவந்தனா தரித்ரனா , சிவப்புத் தோல் உள்ளவனா கறுப்புத் தோல் உள்ளவனா என்பதெல்லாம் பொருட்டல்ல . அவன் ஸ்வபாவம் , ஸ்வபாவத்திற்கு ஏற்ற அவனது நாட்டம் எத்தகையது என்பதுதான் முக்யம் . எதை நாடுகிறானோ, அதுவும் தீவ்ரமாக நாடுகிறானோ , அதுவே அவனுக்குக் கிடைத்திடும் . வேறொன்றும் கிடைத்திடாது .
நாட்டத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா ? ஸ்வபாவத்தை Finetune செய்து கொள்ள முடியுமா ? பொதுவாக , முடியாது என்பதுதான் என் அநுபவம் . "விரலைச் சூப்பிக் கொண்டு இவ்வுலகத்தில் வருபவன் விரலைச் சூப்பிக் கொண்டே ஶ்மஶானத்திற்குச் செல்கிறான்" என்று ஸ்ரீ ரஜனீஷ் சொல்வார் . மாற்றப் பட அவஶ்யம் உள்ளது என்பதை உணர்வதும் இல்லை . மாற்றிக் கொள்ள விரும்புவதும் இல்லை . மாற்றிக் கொள்ள முயல்வதும் இல்லை .
மாற்றிக் கொள்ள முடியவே முடியாதா ? முடியும் , மிக அரிதாக . மிகக்கடும் முயற்சிகளின் விளைவாக . தன்னைக் காணுதல் , தன் செயல்களை , பேச்சை , சிந்தனையை புடம் போடுதல் , தன்னை அறிதல் , நல்லோரின் துணை நாடுதல் (ஸத்ஸங்கம்) போன்ற பல முயற்சிகள் , தொடர் முயற்சிகள் மூலம் ஸ்வபாவத்தை , வாழ்க்கையில் தனது நாட்டத்தை finetune செய்து கொள்ள முடியும் . இந்த ஜன்மத்தில் முடியவில்லை என்றாலும் வரும் ஜன்மங்களிலாவது முடியும் .

Comments
Post a Comment