Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 95


கீதையில் சில சொற்றொடர்கள் - 95


वेदेषु यज्ञेषु तपःसु दानेषु यत् पुण्य फलं प्रदिष्टं  ..  अत्येति तत् सर्वं विदित्वा  ... योगी परम् स्थानम् उपैति  .. (अध्याय ८ - श्लोक २८)
வேதேஷு யக்ஞேஷு தபஹ்ஸு தானேஷு யத் புண்ய ஃபலம் ப்ரதிஷ்டம்  ,,,  அத்யேதி தத் ஸர்வம் விதித்வா யோகி பரம் ஸ்தானம் உபைதி  ...  (அத்யாயம் 8 - ஶ்லோகம் 28)
Vedheshu Yagnyeshu Tapassu Daaneshu Yat Punya Phalam Pradishtam ... Atyeti TatSarvam Viditvaa Yogi Param Sthaanam Upaiti ...  (Chapter 8 - Shlokam 28) 

அர்தம் :  வேதம் படிப்பது , யக்ஞம் செய்வது , தபஸ் இருப்பது , தானம் செய்வது .. இவற்றால் கிடைக்கக் கூடிய புண்ய ஃபலன்களைத் தாண்டி ... யோகி பரம ஸ்தானத்தை அடைகிறான் .

வேதங்கள் புனிதமானவை .  பரமனின் குரல் .  வேத படனம் நம்மை பரமனுடன் இணைத்திட வேண்டும் .  வேதம் படித்திடும் போது பரமனின் ஸ்பர்ஶத்தை நம்மால் உணர முடியணும் .  "முடிகிறதா ?" என்பதே கேள்வி .  இது ஒரு புண்ய கார்யம் என்று கருதி நாம் வேதங்களைப் படிக்கிறோம் .  ப்ராஹ்மணானாக ஜன்மம் எடுத்த எனது கடமை இது என்று நினைத்துப் படிக்கிறோம் .  வேத படனம் இவ்வுலகத்தில் அடுத்த உலகத்திலும் உயர்ந்த ஃபலன்களைக் கொடுத்திடும் என்பது நிஶ்சயம் .  சிலர் இந்த ஃபலன்களைப் பற்றுடன் எதிர்ப்பார்த்து வேத படனம் செய்திடுவர் .  வேதங்கள் பரமனின் ப்ரகடனம் என்ற ஶ்ரத்தை இருக்கிறதா ?  அவனை அறிந்திட வேண்டும் , அவனுடன் இணைந்திட வேண்டும் என்ற தாஹம் நம்முள் இருக்கிறதா ?

கீதை பஞ்சம வேதம் , ஐந்தாவது வேதம் எனப்படுகிறது .  ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற ரூபத்தில் ஸ்ரீ பரமனாலேயே பேசப்பட்டது .  கீதை ஶ்லோகங்கள் அவனது மதுர அதரங்களை ஸ்பர்ஶித்த படி வெளி வந்துள்ளன .  அம்ருதத்திற்கு ஒப்பானவை .  ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையின் பதினெட்டாம் அத்யாயத்தில் , "கீதையை அத்யயனம் செய்பவன் , ஶ்ரத்தையுடன் கேட்பவன் , கீதையை என் பக்தர்களிடம் விளக்குபவன் ஆகிய இவர்கள் எனக்கு மிக ப்ரியம் ஆனவர்கள்" என்கிறான் .  கீதையைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் பேசும் போதும் நாம் இவ்வாறு உணர்கிறோமா என்பதே கேள்வி ?  இது ஒரு ஸத்கர்மம் என்று கருதுகிறோம் .  ஸத் கர்மத்திற்கான புண்ய ஃபலன்கள் கிடைத்திடும் .  ஸ்ரீ க்ருஷ்ணன் கிடைத்திட மாட்டான் .

பெரும்பாலோர் யக்ஞங்களை வெற்று ஷடங்காகவே செய்கிறோம் .  சிலர் ஆழ்ந்த ஶ்ரத்தையுடன் செய்வர் .  ஆயின் ஃபலன் மீது பற்று வைத்தே .  ஃபலனைத் தனக்காக நாடாமல் இருக்கலாம் .  லோக க்ஷேமத்திற்காக யக்ஞங்களைச் செய்திடலாம் .  அதனால் இஹ லோகத்திலும் பர லோகத்திலும் புண்ய ஃபலன்கள் கிடைத்திடலாம் .  ஃபலன்களுடன் இணைந்திருப்பதால் , யக்ஞங்களும் பரமனைக் காட்டிடாது .

தானம் ஒரு ஸத்கர்மமே .  புண்ய ஃபலன்கள் கொடுக்கக் கூடியதே .  ஆனால் , தானம் கொடுப்பவரை பிறரிடம் இருந்து பிரித்து விடும் .  "நான் கொடுக்கிறேன் .  நான் இவர்களது கஷ்டங்களைத் தீர்க்கிறேன்" என்ற உணர்வுடன் தனியே நிற்பார் .  நான் என்ற இந்த உணர்வு பரமனுடன் இணைப்பிற்குத் தடையானது .

ஒரு ஸங்கல்பத்தை ஏந்தி , கட்டுப்பாடுகள் விதித்து , எதிர் வரும் எதிர்ப்புகள் , இடர்கள் , கஷ்டங்கள் ஆகியவற்றால் கலங்கிடாமல் உறுதியாக முயற்சி செய்வதே தபஸ் ஆகும் .  தபஸ் தெய்வங்களை ஸந்தோஷப் படுத்தி , வரங்களைப் பெற்றுத் தரக்கூடியவை .  ஆனால் , பரமாத்மனை நோக்கி நம்மை இட்டுச் செல்லாது .  ஏனென்றால் ஸங்கல்பத்தின் ரூபத்தில் ஃபலன்கள் மீது பற்று தபஸின் அங்கம் .  ஃபலன்கள் கிடைத்திடும் ,  பரமன் கிடைக்க மாட்டான் .  ஸங்கல்பமும் பற்றும் பரமனின் பாதையில் தடைக்கற்கள் .  நாளடைவில் , கட்டுப்பாடுகள் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் , மேலும் மேலும் உக்ரமான கஷ்டங்கள் , இவை ப்ரதானம் ஆகி விடும் .  தபஸின் நோக்கமாக எடுத்த ஸங்கல்பத்தை விட , கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பதே நோக்கம் ஆகி விடும் .  அதிக கஷ்டம் என்றால் உயர்ந்த தபஸ் என்றாகி விடும் .  கஷ்டம் மீது , வலி மீது பற்று ஏற்பட்டு விடும் .  ஸுகம் மீது பற்று எவ்வாறு பந்தப் படுத்துமோ , து:கத்தின் மீது பற்றும் அதே அளவு பந்தப்படுத்தும் .

ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் மீண்டும் மீண்டும் , "யோக யுக்தோ பவ" ...  "தஸ்மாத் யோகீ பவ" என்கிறான் .  நீ யோகீ ஆகி விடு என்கிறான் .  யோகீ ஃபலன்களுக்கு அப்பால் யோஜனை செய்பவன் .  ஃபலன்களின் கவர்ச்சியில் மயங்கி விடாமல் முன்னேறுபவன் .  பரமனை அடைந்து விடுபவன் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...