ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 97
परम्भावं अजानन्तो अवजानन्ति मां मूढा ... (अध्याय ९ - श्लोक ११)
பரம் பாவம் அஜானந்தோ அவஜாநந்தி மாம் மூடா ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 11)
ParamBhaavam Ajaananto avajaananti Maam Moodhaa ... (Chapter 9 - Shlokam 11)
அர்தம் : எனது பரம பாவனையை அறிந்திடாத மூடர் , என்னை அவமதிக்கின்றனர் ...
என்னை அறியாதவர்கள் மூடர்கள் என்கிறார் . எனது பரம பாவனையை அறியாத மூடர்கள் என்கிறார் . எனது அவதார மஹிமையை அறியாத மூடர்கள் என்கிறார் .. எனது ஆகாரத்தில் நிராகாரத்தை , உருவத்தில் அருவத்தை , ப்ரக்ருதியில் ப்ரஹ்மனைக் காண முடியாதவரை மூடர் என்கிறார் .
நாம் தேஹம் எடுத்து பூ லோகத்திற்கு வந்திருப்பது நம் பூர்வ ஜன்ம வாஸனைகளைக் கழித்திட . அவ்வாஸனைகளுக்கு ஏற்ற தேஹம் நமக்குக் கிடைக்கிறது . வாஸனைகளை அநுபவிக்க ஹேதுவான சூழ்நிலை நமக்குக் கிடைக்கிறது . வாஸனைகளுக்கு ஏற்ப ஸுக து:கங்களை அநுபவித்தவாறு வாழ்க்கையைக் கழிக்கிறோம் . நாம் ப்ரக்ருதியின் வஶத்தில் இருக்கிறோம் . ப்ரக்ருதி நம் வஶத்தில் இருப்பதில்லை .
தெய்வ மநுஷ்யர்கள் , அவதாரங்கள் ப்ரக்ருதியைத் தம் வஶப் படுத்தி , மநுஷ்ய ஸமூஹத்தின் மீது கருணை கொண்டு , தேஹம் எடுத்து , பூ லோக வாஸம் செய்திட , இறங்கி வருகின்றனர் . அவர்களது அந்த பரம பாவனையை அறிந்திடாது , அவர்களை தேஹத்துடன் கூடிய ஸாதாரண பிற மநுஷ்யர்களாகக் கருதிடுவோரை மூடர்கள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .
ஸ்ரீ க்ருஷ்ணன் , 'மூடர்கள்' என்று சொல்வது நம் அனைவருக்கும் பொருந்திடும் . நமக்கு அருகில் இருப்போரின் தெய்வீகத் தன்மையை அறிந்திடாது , அவரை நம் தாயாகவும் , தனயனாகவும் , புதல்வனாகவும் , வேலைக்காரனாகவும் , வேறு ஏதோ பந்தமாகவும் பார்க்கிறோம் . இதையே மூடத்தனம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .
எனது பரம பாவத்தை அறிந்திடாது என்னை அவமதிக்கின்றனர் , என்கிறாரே ஸ்ரீ க்ருஷ்ணன் ? அபமானப் படுத்தப் படுவதில் அவருக்கு மன வருத்தமா ? மநுஷ்ய ஸமூஹத்தின் மீது கருணை கொண்டவர் அல்லவா அவர் ? தன்னை உயர்த்திக் கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பினைத் தவற விடுகின்றனர் என்பதே அவர் வருத்தம் . எவ்வாறு ???
"இவரும் தன்னைப் போலவே தேஹம் தரித்து வந்த ஸாதாரண மநுஷ்யன் , குறைகளுடன் கூடிய மநுஷ்யன் , தவறுகள் இழைத்திடும் மநுஷ்யன் அல்ப ஸுக - து:கங்களைத் துரத்தி ஓடும் ஒரு மநுஷ்யனே" என்று கருதி , தன்னுடைய குறைகளை , தவறுகளை , ஸுக - து:க நாட்டத்தை மன்னிப்பதன் மூலம் தன் உயர்வைத் தடுத்துக் கொள்கிறான் .
இவனைக் கவர்ந்து , தன் காலடியில் விழ வைத்திட , தன்னை ஒரு அவதாரமாக , தெய்வீக மநுஷ்யனாக ஏற்க வைத்திட , தன் படத்தையும் கை கால்களையும் பூஜை செய்ய வைத்திட , மாயா ஜாலங்களைக் காட்டி , பெரும் கூட்டங்களைக் கூட்டி , ப்ரமிக்க வைத்திடும் அலங்காரங்கள் செய்து கொண்டு , கவர்ச்சிகரமான வசனங்கள் பேசி , பல்வேறு வேஷங்களில் வரும் போலிகளின் பின்னால் ஓடும் போதும் தன் உயர்விற்கான பாதையை மூடி விடுகிறான் . ஸ்ரீ க்ருஷ்ணனின் வருத்தம் இதுவே .

Comments
Post a Comment