ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 104
पत्रं पुष्पं फलं तोयम् यो मे भक्त्या प्रयच्छति यो मे भक्त्या प्रयच्छति ... तदहं भक्त्युपह्रुतम् अश्नामि प्रयतात्मनः ... (अध्याय ९ - श्लोक २५)
பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி .. ததஹம் பாக்த்யுபஹ்ருதம் .. அஶ்நாமி ப்ரயதாத்மனஹ ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25)
Patram Pushpam Phalam Toyam Yo Me Bhaktyaa Prayachchati ... Tadaham Bhaktyupahrutham Ashnaami Prayaataatmanah ... (Chapter 9 - Shlokam 26)
அர்தம் : ஒரு இலை , ஒரு புஷ்பம் , ஒரு பழம் அல்லது ஒரு துளி ஜலம் என்று எனது பக்தன் எதை அளித்தாலும் ... பக்தி நிறைந்த தூய மனஸை ஏற்கிறேன் ... (தூய மனஸினால் அளிக்கப் படுவதை ஏற்கிறேன் .. என்றும் அர்தம் கொள்ளலாம் ..)
பக்தியின் வழிமுறை .. ஸ்ரீ பகவான் தன் வாயால் சொல்லிடும் வழிமுறை ...
எல்லாவற்றிலும் புறம் உண்டு அகம் உண்டு . தின்பண்டங்களின் புறம் அவற்றின் வடிவமும் நிறமும் . ருசி , ஆரோக்யத்தின் மீது தாக்கம் அவற்றின் அகம் . வஸ்துக்களின் தோற்றம் அவற்றின் புறம் . உபயோகம் அவற்றின் அகம் . பேசப்படும் வார்தைக்கு ஶப்தமே புறம் . அதன் அர்தம் தான் அகம் . கார்யங்களுக்கு அவற்றின் நோக்கமே அகம் .
நாம் ஸாதாரண மநுஷ்யர்கள் புறத்தை மாத்ரம் பார்ப்பவர்கள் . அகத்தைப் பார்த்திடும் ஆற்றல் நமக்குக் கிடையாது . புறத்தைக் கண்டு மதிப்பிடுகிறோம் . புறம் அநுகூலமாக இருந்தால் அதிக மதிப்பெண்கள் . புறம் ப்ரதிகூலமாக இருந்தால் , நம் மனஸிற்கு ஹிதமாக இல்லை என்றால் குறைவான மதிப்பெண்கள் .. மநுஷ்யர்களை ஆடையை வைத்து மதிப்பிடுகிறோம் . அவர்களிடம் உள்ள வீடு , வாஹனம் போன்றவற்றை வைத்து மதிப்பிடுகிறோம் . அதனால் , பெரும்பாலான மநுஷ்யர்கள் வெளி ஆடை அலங்காரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் அளித்திடும் மஹத்வத்தை அகத்தின் பூஷணங்களான குணங்களுக்கு அளிப்பதில்லை . கவர்ச்சியான புறத் தோற்றத்தையும் விளம்பரங்களையும் வைத்து பொருட்கள் மற்றும் ஸேவைகளை அதிக விலைக் கொடுத்து வாங்குபவர்கள் நம்மில் அநேகர் . ஸமூஹ , அரஸியல் அமைப்புகளில் , ஏன் குடும்பங்களிலும் கூட புற விஷயங்களே உறவுகளை த்ருடப் படுத்துவதால் , உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் , டம்பம் , நடிப்பு , பொய் , ஆகியவை ஸஹஜமாகி விட்டன .

நமக்கு அகத்தைக் காணும் ஆற்றல் இல்லை . காணும் விருப்பமும் இல்லை . ஸ்ரீ க்ருஷ்ணன் அகத்தை மாத்ரம் காண விரும்புகிறான் . அகத்திற்கு மாத்ரம் மதிப்பளிக்க விழைகிறான் . அகத்தில் உள்ளதை மாத்ரம் ஏற்க விரும்புகிறான் . புற அலங்காரங்களை வைத்து , அலங்கார மதுர மொழியை வைத்து அவனை ஏமாற்ற முடியாது . "நீ அளிப்பது எதுவாக இருந்தாலும் ... ஒரு இலையோ , ஒரு புஷ்பமோ , ஒரு பழமோ அல்லது ஒரு சொட்டு ஜலமோ , அளித்திடும் உன் மனஸை , அதில் நிலவிடும் பக்தியை , தூய்மையை ஏற்கிறேன் . அதை வைத்து , நீ அளிப்பவற்றை ஏற்கிறேன்" என்கிறான் .
த்ரௌபதி , யானை கஜேந்த்ரன் , ஶபரீ மற்றும் விதுரன் ஆகிய நால்வர் ஸ்ரீ பரமனுக்கு முறையே பத்ரம் , புஷ்பம் , பழம் , நீர் இவற்றை அளித்து ஸ்ரீ பரமனின் பூர்ண அருளைப் பெற்றவர்கள் . த்ரௌபதி ஒரு துண்டு கீரையை , அதுவும் சாப்பிட்டு முடித்து , அலம்பி வைத்த பாத்ரத்தில் ஒட்டி இருந்த துண்டுக்கீரையை , ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு அளித்தாள் . ஸ்ரீ கஜேந்த்ரன் என்ற யானை ஒரே ஒரு தாமரை புஷ்பத்தை ஸ்ரீமன் நாராயணனுக்கு அளித்தது . ஶபரீ பழத்தை , அதிலும் தான் கடித்துப் பார்த்த எச்சில் பழத்தை ஸ்ரீ ராமனுக்கு அளித்தாள் . அரண்மனையில் வாழும் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு , அரண்மனை விருந்தை புறக்கணித்து விட்டு வந்த ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு , ஸ்ரீ விதுரன் தன் குடிசையில் இருந்த கூழை அளித்தார் . இவர்கள் அளித்த விஷயங்கள் காரணமாக இவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த அருளில் குறை வைக்கவில்லை . அளித்தவர்களும் தான் அளித்தவற்றின் மதிப்பை கருதவில்லை . ஏற்றவனும் அவற்றின் மதிப்பைக் கணக்கிடவில்லை . ஆனந்தமாகக் கொடுத்தனர் . அவனும் ஆனந்தமாக ஏற்றான் . கொடுக்கும் விஷயங்கள் அல்ல , கொடுத்திடும் மனஸ் , அதில் உள்ள பாவனை தான் மஹத்வமானது .
Comments
Post a Comment