ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 107
अनित्यम् असुखम् लोकम् ... (अध्याय ९ - श्लोक ३४)
அநித்யம் அஸுகம் லோகம் ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 34)
Anithyam Asukham Lokam ... (Chapter 9 - Shlokam 33)
அர்தம் : இந்த உலகம் நித்யம் இல்லாதது . ஸுகம் அற்றது .
கீதையில் மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டிருக்கும் ஸில கருத்துக்களில் இதுவும் ஒன்று . இந்த ஜகத் நித்யம் அற்றது , ஸுகம் அற்றது . மீண்டும் மீண்டும் சொல்லப் பட வேண்டிய அவஶ்யம் என்ன ? ரெண்டு காரணங்கள் . இது ஒரு ஸம்வாதம் என்பது ஒன்று . அர்ஜுனனுக்கும் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் இடையில் நடந்த ஸம்வாதம் . திட்டம் இடப்பட்டு , கோர்வையாக தயார் செய்யப் பட்ட உரை இல்லை . ஸம்வாதத்தில் கேள்வி கேட்பவரின் கேள்விகளுக்கு ஏற்ப , மன நிலைக்கு ஏற்ப பேச வேண்டியது அவஶ்யம் . எனவே , அதே விஷயம் மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது . அர்ஜுனன் ஒரு நரன் , நம்மைப் போன்ற ஒரு ஸாதாரண மநுஷ்யன் என்பது ரெண்டாவது காரணம் . மாட்டிற்கு ஒரு சூடு , மநுஷ்யனுக்கு ஒரு சொல் என்று ஒரு பழமொழி உண்டு . ஆனால் , அது மிகச் சிலருக்கே பொருந்தக் கூடியது . அர்ஜுனன் விதி விலக்கல்ல . (நேர்மாறாக , க்ஷணச் சித்தம் , ஶ்மஸான வைராக்யம் போன்ற வார்தைகளும் உண்டல்லவா !!)
அர்ஜுனன் ஒரு ஸாதாரண மநுஷ்யனே . (நம்மிடம் உள்ள ஒரு குறை இங்கு வெளிப்படுகிறது . ஒரு துறையில் மிக விஶேஷமான ஆற்றல் கொண்டவர்களை நாம் மிக உயர்வாக , ஒரு அஸாதாரண மநுஷ்யனாகக் கருதி விடுகிறோம் . ஒரு சிறந்த நடிகன் , சிறந்த பேச்சாளன் அல்லது எழுத்தாளன் அந்தந்தத் துறையில் மாத்ரமே நிபுணன் . வாழ்க்கையின் மற்ற துறைகளில் , கண்ணோட்டங்களில் அவன் ஒரு மிக ஸாதாரண மநுஷ்யனாகவே இருந்திடுவான் .) பதினெட்டு அத்யாய கீதை சொல்லி முடித்த பிறகும் , "நான் நிலையானேன் , மோஹம் அழிந்து என் நினைவு திரும்பியது , நீ சொன்ன படி நான் செய்கிறேன்" என்று அர்ஜுனன் சொன்ன பிறகும் பதினோரு நாட்கள் யுத்தம் நடந்த பின் , அபிமன்யூ கொல்லப்பட்ட நாளில் , அர்ஜுனன் 'தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று புலம்பவில்லையா ? குருக்ஷேத்ர யுத்தம் முடிந்த பிறகு , ராஜ்ய ஸபையில் பஞ்ச பாண்டவர்கள் அமர்ந்திருக்கும் போது , அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் , "க்ருஷ்ணா , அன்று யுத்தத்தில் நான் ஒரு விஶேஷ மன நிலையில் இருந்தேன் . அதனால் , நீ சொன்ன கீதை எனக்கு முழுமையாகப் புரியவில்லை . இங்கு , நாம் அனைவரும் அமைதியான மன நிலையுடன் அமர்ந்திருக்கும் போது , மீண்டும் ஒரு முறை கீதையைச் சொல்வாயா ?" என்று கேட்டான் அல்லவா ?

ஒரு வார்தையை ஒரே ஒரு முறை சொல்லி விட்டால் , அதன் முழுமையான அர்தம் புரிந்து விடும் என்பது ஸாதாரண மநுஷ்யர்களுக்கு ஸாத்யம் இல்லை . அதே கருத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய அவஶ்யம் இருக்கிறது . மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் . மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் .நம் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் , வெவ்வேறு வயஸில் படிக்கப் படும் அதே கருத்து , வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்ளப் படுகிறது .
உலகம் பொய் என்று சொல்லவில்லை ஹிந்து தர்மம் . உலகத்தை மறுக்கச் சொல்லவில்லை ஹிந்து தர்மம் . உலகத்தை மித்யா என்கிறது . மாயை என்கிறது . அதாவது , இல்லாதது இருப்பது போலத் தோன்றும் . நித்யம் அற்றது , நிரந்தரம் போலத் தோன்றும் . ஸுகமானது போலத் தோன்றும் . து:கமும் கலந்தே வரும் . அதில் மயங்கி விடாதே என்கிறது ஹிந்து தர்மம் . வாழ்க்கையின் அறியாமை கலந்த குழந்தைப் பர்வம் , இயலாமை கலந்த வயோதிகப் பர்வம் , நோய்க்காலம் ஆகியவை மொத்த வாழ்நாளில் பெரும் இழப்புதான் என்றாலும் , தவிர்க்க முடியாத இழப்பு . எஞ்ஜுவது மிக அல்ப காலமான யௌவனப் பர்வம் மாத்ரமே . இது செயல் துடிப்புள்ள பர்வம் . உத்ஸாஹம் நிறைந்த பர்வம் . மோஹம் என்னும் வலையில் சிக்கி , நிரந்தரம் இல்லாத உலக ஸுகங்களின் பின்னால் ஓடி , விலைமதிப்பிட முடியாத இந்த யௌவனத்தை , மீண்டும் பெற முடியாத இந்த யௌவனப் பர்வத்தையும் இழந்து விடாதே என்று எச்சரிக்கிறது ஹிந்து தர்மம் .
Comments
Post a Comment