ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 108
கீதையில் சில சொற்றொடர்கள் - 108
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ... (अध्याय ९ - श्लोक ३४)
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ... (அத்யாயம் 9 - ஶ்லோகம் 34)
Manmanaa Bhava MadBhakto Madyaajee Maam Namaskuru ... (Chapter 9 - Shlokam 34)
அர்தம் : மனஸை என்னில் வைத்திடு . என்னிடம் பக்தியைச் செலுத்திடு . எனக்காக யக்ஞம் செய்திடு . என்னை நமஸ்கரித்திடு .
இது ஒரு Formula சொற்றொடர் . பரமனை கேந்த்ரமாக வைத்து வாழ்வதற்கான Formula . மனஸை என்னில் லயிக்க வைத்திடு . பக்தியை என்னில் செலுத்திடு . எனக்காக யக்ஞங்களைச் செய்திடு . என்னை நமஸ்கரித்திடு .
மனஸை ஸ்ரீ பரமனது பாவனையால் நிறைத்திடு . அத்தகைய மனஸ் லோகாயத கார்யங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் , அவனையே கேந்த்ரமாகக் கொண்டிருக்கும் . உலகக் கவர்ச்சிகளில் மூழ்கி விடாது . ஸ்வயமும் ஆனந்தத்தில் திளைத்திருந்து , ஸுற்றி உள்ளோருக்கு ஆனந்தத்தின் ஊற்றாக இருந்திடும் .
ஸ்ரீ பரமன் மீதே பக்தி கொண்டிடு . Devotion only to God . பக்திக்கான ஒரே திஶை ஸ்ரீ பரமாத்மனே . பொதுவாக உலக வாழ்க்கையில் இருப்பவரின் விஶ்வாஸம் , பக்தி , நம்பிக்கை பல திஶைகளில் சிதறியதாக இருக்கிறது . பாதுகாப்பு அளித்திடும் ராஜா மற்றும் ராஜ்ய அதிகாரிகள் , பண வரவிற்குக் காரணமான யஜமான் , ஶரீரத்தின் உபாதைகளைத் தீர்த்து வைக்க முயன்றிடும் வைத்யர் , மனஸை ஸந்தோஷப் படுத்திடும் நடிகன் , ஸங்கீதக் கலைஞன் அல்லது மற்ற துறைக் கலைஞன் போன்ற பலர் நம் பக்திக்கு பாத்ரம் ஆகிறார்கள் . உலகத்தை ப்ரதானமாகக் கருதி வாழ்பவனின் நிலை இது . ஸ்ரீ பரமனைக் கேந்த்ரமாகக் கொண்டவனின் பக்தி ஒரு முகமாக இருக்கிறது . அவனால் தேஶத்து ராஜாவையும் , தன்னுடைய யஜமானனையும் , வைத்யரையும் , நடிகனையும் ஸ்ரீ பரமானது ரூபமாகவே பார்க்க இயலுகிறது . அவனது உலக வாழ்க்கை பாதிக்கப் படுவதில்லை . அதே ஸமயம் அவன் உலகத்தில் சிக்கி , மூழ்குவதும் இல்லை .
லௌகீக ஸுகங்களையும் வஸதிகளையும் பெறுவதற்காக , முயற்சிகளையும் த்யாகங்களையும் யக்ஞங்களையும் செய்வோருக்குப் பஞ்ஜம் இல்லை . 'இவற்றை எனக்காகச் செய்திடு' என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் . இத்தகையவன் வெளிப்படையாக லௌகீக விஷயங்களில் ஈடுபட்டிருப்பது போலத் தோன்றினாலும் , அவன் ஸ்ரீ பரமனில் மூழ்கி இருக்கிறான் என்பது தான் உண்மை .
"என்னை நமஸ்கரித்திடு" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற நிலை இது . "வாடா காலா ! உன்னை காலால் எட்டி உதைக்கிறேன் என்று பாரதி சொன்ன நிலை இது . நமஸ்காரம் அவனுக்கு மாத்ரமே . பணிதல் அவன் தாளில் மாத்ரமே . வேறு எந்த ஶக்தியும் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது . இத்தகைய ஸாதுக்களை கொடூர இஸ்லாமிய ராஜ்யத்தாலும் பணிய வைக்க முடியவில்லை .
மன்மனா பவ மத்பக்தஹ ... மத்யாஜீ மாம் நமஸ்குரு ... அவனன்றி வேறொன்றும் இல்லை . அவன் மாத்ரமே ...

Comments
Post a Comment