Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 111


கீதையில் சில சொற்றொடர்கள் - 111


भजतां प्रीति पूर्वकम  ...  (अध्याय १० - श्लोक १०)
பஜதாம் ப்ரீதி பூர்வகம்  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 10)
Bhajataam Preeti Poorvakam  ...  (Chapter 10 - Shlokam 10)

அர்தம் :  ஆனந்தமாக  பரமனின் சிந்தனையில் மூழ்கி இருத்தல் ...

ஆனந்தமாக மூழ்கி இருத்தல் ...  தன்னையும் மறந்து , ஸுற்றி உள்ளோரை மறந்து , ஸுற்றுச் சூழலையும் மறந்தால் ஆனந்தம் .  நிகழ் காலத்தில் ஆனந்தமாக இருக்கிறேன் , ஆனந்தத்தை அநுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது .  (அந்நிலை மாறிய பிறகு ஆனந்தமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்) .  தூய்மையான மனஸ் கொண்ட பாக்யஶாலி ஆனந்த நிலையை எய்திடுவான் .  மனஸில் எதிர்ப்பார்ப்பு ஏந்தியவன் , அழுக்குகளை ஸுமந்தவன் , திறமைஶாலியாக இருக்கலாம் .  ஆனந்தத்தில் மூழ்க முடியாது .

நம் ஹிந்து பாரம்பர்யத்தில் ப்ரசாரம் என்பது கிடையாது .  கலைத் துறைகளில் உன்னத ஸாஹித்யங்களைப் படைத்தவன் , யுகங்களைத் தாண்டி நின்றிடும் சிறந்த ஆலயங்களையும் கட்டடங்களையும் எழுப்பியவன் , வேத உபநிஷத ர்சாக்களை வெளிப்படுத்தியவன் , விக்ஞான ஆஶ்சர்யங்களைக் கண்டு பிடித்தவன் , ஶ்ரேஷ்டமான காவ்யங்களை வடித்தவன் , ஆன்மீக ரஹஸ்யங்களைக் கண்டறிந்தவன் ,  மற்ற பல்வேறு துறைகளில் சிறந்த படைப்புகளில் பங்காற்றியவர் ... என்ற இவர்களில் எவரும் அந்தந்த படைப்புடன் தத்தம் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை .  ஆனந்தமாக மூழ்கினர் .  அத்புதமான படைப்புகளை வெளிப்படுத்தினர் .  காலத்தைத் தாண்டி நின்றன அவர்களது படைப்புகள் .

பாராட்டப் பட வேண்டும் , தன் பெயர் சொல்லப் பட வேண்டும் , கூட்டம் சேர வேண்டும் , ஜய கோஷம் எழுப்ப வேண்டும் , தன் கருத்திற்கு எண்ணிக்கை பலம் சேர வேண்டும் , போன்ற விருப்பங்கள் மனஸில் துளிர்த்து விட்டால் , படைத்தலை விட , நான் படைத்தேன் என்பதை ப்ரகடனம் செய்வதில் அதிக கவனமும் ப்ரயத்னமும் இருந்திடும் .  ஆனந்தத்தில் மூழ்குதல் மறைந்து விடும் .

அதிலும் , ஸ்ரீ பரமாத்மனை பஜிப்பதில் ப்ரசாரம் என்பதற்கு லவலேஶமும் இடம் கிடையாது .  தனது இறை அநுபவங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளல் ஆகாது என்று தடுக்கிறது தர்ம ஶாஸ்த்ரம் .  இந்தத் துறையில் ப்ரசாரம் புகுந்து விட்டால் போட்டி , பொறாமை , சதி , வஞ்ஜகம் , ஹிம்ஸை , மற்றவரைத் தம் வழிக்கு மாற்றிட பலவந்த முயற்சிகள் , மாற மறுப்போரை ஒழித்துக் கட்ட சதித் திட்டங்கள் , என்று அனைத்து விதமான கொடும் செயல்களும்  உடன் வந்து விடும் .  இறை ஆனந்தத்தில் , பரமானந்தத்தில் , பரவஶ நிலையில் திளைப்பது என்ற அநுபவம் கிடைத்திடாது .  க்றிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றி பல நூற்றாண்டுகளில் உயர்ந்த மஹான்களை பிறப்பிக்கவில்லை .  காரணம் அவற்றைப் பின்பற்றுபவர்கள் இறைத் தேடலில் , இறை ஆனந்தத்தில் மூழ்கவில்லை .  மாறாக ப்ரசாரத்தில் மூழ்கினர் .  அதே போல , மஹான் ஒருவர் கூறிய வழியில் நடப்பதற்காக நிறுவப்பட்ட அமைப்புகளும் பண பலத்தில் ப்ரசாரம் செய்கின்றன .  கூட்டங்கள் போடுகின்றன .  பிரஸுரங்களை விநியோகம் செய்கின்றன .  பெரும் ஶப்தத்தை எழுப்புகின்றன .  போஸ்டர்கள் , தோரணங்கள் மூலம் உலகத்துக் குப்பையில் மேலும் குப்பை சேர்க்கின்றன .  ஆனால் , அந்த மஹானுக்கு ஸமமான மற்றொரு மஹானை உருவாக்குவதில்லை என்பது ஸத்யம் .

பக்தன் ஆனந்தத்தில் மூழ்குகிறான் .  பரமானந்த நிலையில் ஸ்ரீ பகவானை பஜிக்கிறான் . 

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...