ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 117
गिरामस्मि एकमक्षरम् ... (अध्याय १० - श्लोक २५)
கிராமஸ்மி ஏகமக்ஷரம் ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 25)
Giraamasmi Ekam Aksharam ... (Chapter 10 - Shlokam 25)
அர்தம் : மந்த்ரங்களில் ஏகாக்ஷர மந்த்ரமான ஓம்காரம் நானே ...
ஏகாக்ஷரம் என்பது ஓம் ... ப்ரணவ மந்த்ரம் . அ , உ , ம என்ற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு ஓம் . வேதங்களின் ஸாரம் த்ரிபத காயத்ரீ (மூன்று பதங்கள் கொண்ட காயத்ரீ) மந்த்ரம் . காயத்ரீயின் ஸாரம் மூன்று ஶப்தங்களின் தொகுப்பான ஓம் . ஓம் என்ற மந்த்ரத்தில் வேதம் முழுவதும் அடங்கும் . அனைத்து ஸாஹித்யங்களும் புஸ்தகங்களும் வேதத்தினுள் அடங்கும் . எனவே , ஓம் என்ற மந்த்ரம் க்ஞானத்தின் ஸாரம் .
படைப்பில் முதலில் தோன்றியது ஶப்தம் . ஶப்தங்களின் ஸாரம் ஓம் எனும் மந்த்ரம் . பூமியும் மற்ற க்ரஹங்களும் ஸுற்றும் பொழுது எழும்பும் பேரிரைச்சல் ஓம் என்று இருப்பதாகச் சொல்கிறார்கள் .
படைப்பில் அனைத்தும் பொருட்களே . எடையும் ரூபமும் கொண்ட பொருட்கள் . பொருட்களின் ஆதார தாது பொருளே , அணு என்ற வடிவத்தில் . இதுதான் ஸமீப காலம் வரை விக்ஞானத்தின் விஶ்வாஸம் . ஆனால் , ஸமீப காலத்தில் பொருளின் (மேடர் - Matter) ஆதார ரூபம் ஆற்றல் கொண்ட அலைகள் என்று விக்ஞானிகள் கருத ஆரம்பித்துள்ளனர் . ஹிந்துக்கள் ஆதி காலம் முதல் ஶப்த அலைகளின் மஹத்வத்தை உணர்ந்திருந்தனர் . இதையே மந்த்ர ஶக்தி என்றனர் . ஶப்த அலைகளின் துணையால் பதார்தங்களான அக்னீயையும் மழையையும் உருவாக்க முடியும் என்று அறிந்து அதற்கான வழி முறையையும் அறிந்திருந்தனர் .
ஓம் என்ற ப்ரணவ மந்த்ரம் பாரதத்தில் தோன்றிய அனைத்து மதங்களுக்கும் , உபாஸனை வழிகளுக்கும் ஆதாரமானது .
ஓம் என்ற மந்த்ரத்தின் உச்சாரமும் , ஓம் என்ற மந்த்ரத்தில் த்யானமும் நம் ஶரீரத்தின் மீதும் , மனஸின் மீதும் , புத்தியின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மஹத்வமானவை .
மந்த்ரங்களில் ஏகாக்ஷர ஓம் நானே .

Comments
Post a Comment