Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 118

ॐ

கீதையில் சில சொற்றொடர்கள் - 118


यज्ञानां जप यज्ञो(s)स्मि ...  (अध्याय १० - श्लोक २५)
யக்ஞானாம் ஜப யக்ஞோ(அ)ஸ்மி ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 25)
Yagyaanaam Japa Yagyo(s)mi ...  (Chapter 10 - Shlokam 25)

அர்தம் :  யக்ஞங்களில் நான் ஜப யக்ஞம்  ...

ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் ...  என்று மூன்றாம் அத்யாயத்தில் கூறி , ப்ரஹ்மம் நிலையாக வாஸம் செய்திடும் இடம் யக்ஞம் என்றார் .  யக்ஞம் ப்ரஹ்மத்தின் வஸிப்பிடம் .  யக்ஞம் ப்ரஹ்மத்தின் வெளிப்பட்ட ஸ்வரூபம் .  யக்ஞம் ப்ரஹ்மத்தின் வழிபாட்டிற்கான விக்ரஹ ஸ்வரூபம் ... யக்ஞம் ப்ரஹ்மத்தை நோக்கி வழி நடத்திடும் பாதை .

யக்ஞங்களில் ஜப யக்ஞம் ஸுலபமானது .  விலை மிக்க த்ரவ்யங்களோ , விஸ்தாரமான ஏற்பாடுகளோ , க்லிஷ்டமான வழிமுறைகளோ அவஶ்யம் இல்லை .  நம்மிடம் அருளப்பட்ட நமது வாக் மற்றும் மனஸ் என்ற ரெண்டு கரணங்கள் போதுமானவை .  இவற்றை உபயோகப் படுத்தி ஜப யக்ஞம் செய்ய முடியும் .  லிகித ஜபத்தில் நம்மிடம் உள்ள கை மற்றும் மனஸ் போதுமானவை .  பாராயண ஜபத்தில் கண்களும் மனஸும் அவஶ்யமானவை .  ஶ்ரவண ஜபத்தில் காதும் மனஸும் அவஶ்யமானவை .  ஆக , எந்த வகையிலும் மனஸின் ஈடுபாடும் பங்காற்றலும் அவஶ்யமானது .  மனஸில்லாமல் , யந்த்ர ரீதியாக செய்யப்படும் ஜபயக்ஞம் ஃபலன் அற்றது .

யந்த்ர ரீதியாக செய்யப்படுவதைத் தவிர்த்திட , மனஸ் ஜபத்தில் நிலைத்து இருந்திட ஒரு உபாயம் சொல்லப் பட்டிருக்கிறது .  உதடுகளை அஸைத்து , வெளியில் கேட்டிடும் ஶப்தம் எழுப்பி , ஜப மந்த்ரத்தை உச்சரிப்பது அதமம் .  கீழ்த்தரமானது .  உதடுகளை அஸைத்து , நாக்கை அஸைத்து (வெளியே ஶப்தம் கேட்கலாம் , கேட்காமல் இருக்கலாம் ...) ஜப மந்த்ரத்தை உச்சரிப்பது மத்யமம் .  உதடுகளையும் அஸைக்காமல் , நாக்கையும் அஸைக்காமல் , ஜப மந்த்ரத்தை மனஸால் உச்சரிப்பது உத்தமம் .

ஜப யக்ஞத்தில் 27 லக்ஷம் என்ற எண்ணிக்கை ஒரு மைல்ஸ்டோன் .

ஜபம் செய்யச் செய்ய அந்த மந்த்ரம் ஶரீரத்தின் அணு அணுவில் இருந்து ஒலிபரப்பு ஆகிடும் .  ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் ரோம ரோமமும் 'ராம் ராம்' என்று ஶப்தத்தை வெளிப்படுத்தும் என்கிறது ஸ்ரீ ராமாயணம் .  ஜனாபாய் என்ற விட்டல பக்தை தட்டி வைத்த வறட்டியும் விட்டல விட்டல என்று ஒலித்ததாம் .  அடுத்த வீட்டுப் பெண்ணுடன் 'என் வறட்டி ..  உன் வறட்டி' என்ற சச்சரவு ஏற்பட்டது .  ஜனாபாயி தட்டி வைத்த வறட்டிகள் விட்டல விட்டல என்ற ஶப்தம் எழுப்பின .  கடந்த நூற்றாண்டில் , ஸ்வாமி விவேகானந்தரைப் போலவே அமெரிக தேஶத்திற்குச் சென்று , அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்வாமி ராமதீர்த என்ற மஹான் ராத்ரீயில் உறங்கி இருக்கும் போது , மூச்சு ஶப்தத்துடன் , ராம் ராம் என்ற நாம ஶப்தமும் ஒலித்திடுமாம் .  RSS என்ற அமைப்பை ஸ்தாபித்த Dr ஹெட்கேவார் என்பவர் கடும் ஜ்வரத்தில் பிதற்றிய போதும் , "பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம்" என்றே பிதற்றினாராம் .

ஆரம்பத்தில் ஜபத்தை நாம் செய்திடுவோம் .நாளாக நாளாக அது நம்முள் தன்னால் நடந்திடும் .  விழிப்பு நிலையிலும் உறக்க நிலையிலும் உள்ளே தொடர்ந்து ஜபம் நடந்து கொண்டிருக்கும் .  கீதை எனக்கு இத்தகைய அநுபவங்களைக் கொடுத்திருக்கிறது .

ஜபமும் ஜபத்தில் மூழ்கிய ஸாதகரும் ஸுற்றி உள்ள இயற்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் அதி அத்புதமானது .  ர்ஷ்யஶ்ருங்க ர்ஷீ செல்லும் இடங்களில் மழையும் அதன் விளைவாக செழித்திடும் வளமையும் ஏற்படுமாம் .  நான் கீதை நிகழ்ச்சிக்காகச் சென்ற இடங்களில் அந்த மூன்று ஐந்து தினங்களில் ஒரு தினமேனும் மழை பொழிந்திடும் .பல வர்ஷங்கள் மழையைக் காணாத அரபு தேஶத்திலும் இது நடந்தது .  (இதில் பெருமை எனக்கல்ல .  ஜபத்தின் மாஹாத்ம்யம் இது .)

"யக்ஞானாம் ஜப யக்ஞோ(அ)ஸ்மி" .. யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம் .

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...

PHRASES IN THE GITA - 173

ॐ PHRASES IN THE GITA - 173 जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् ।।  (अध्याय १३ - श्लोक ८) ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி து:க தோஷாநுதர்ஶனம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 8) Janma Mrutyu Jaraa Vyaadhi Duhkha DoshaanuDarshanam ..  (Chapter 13 - Shloka 8) Meaning :  To think of misery and defects in birth , death , old age and disease again and again .. To think of misery and defects in Birth , Death , Old age and disease .. Birth is miserable ..  The months in mother's womb .. hanging inverted , immersed in water , surrounded by suffocating smell ..  Miserable to the mother too ..  Extreme pain and risk of death to the mother while delivering the child ..  Death is miserable too ..  Apart from the body pain while dying , pain of leaving all those collected so passionately , wife and children , house , bank balance , assets , vehicle , posts and positions , reputation , public influence , etc .. Jara or old age is ...