ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 120
अश्वत्थः सर्व वृक्षाणाम् ... (अध्याय १० - श्लोक २६)
அஶ்வத்தஹ ஸர்வ வ்ருக்ஷாணாம் ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 26)
Ashvatthah Sarva Vrukshaanaam ... (Chapter 10 - Shlokam 26)
அர்தம் : வ்ருக்ஷங்களில் நான் அஶ்வத்த மரம் ...
வ்ருக்ஷங்களில் , மரங்களில் நான் அஶ்வத்த மரம் ... கடோபநிஷத் அஶ்வத்த மரத்தை ஸம்ஸாரத்திற்கு ஒப்பிடுகிறது . கீதையின் 15 வது அத்யாயத்தில் அஶ்வத்த மரத்தின் வேர் ஸ்ரீ பரமாத்மனாகவும் மரம் மற்றும் கிளைகளை ஸம்ஸாரமாகவும் வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் . இங்கு அஶ்வத்த மரத்தில் என்னைக் காணலாம் என்கிறார் .
நமக்கு ஏதாவது வகையில் ஃபலன் தரும் மரம் அல்லது செடி பயிர் செய்யப் படுகிறது . அதனால் அந்த ஸ்தாவரம் (Specie) ரக்ஷிக்கப் படுகிறது . பஸிக்குக் காயும் பழமும் வேரும் கொடுக்கும் மரங்களும் மருந்திற்குப் பூவும் பட்டையும் கொடுக்கும் மரங்களும் வாஸனைக்காக உணவில் சேர்க்கப் படும் இலைகளைக் கொடுக்கும் மரங்களும் கூரைக்காகவோ உணவுத் தட்டுக்காகவோ இலையைக் கொடுக்கும் மரங்களும் பூஜைக்காகவும் அலங்காரத்திற்காகவும் புஷ்பங்களைக் கொடுக்கும் மரங்களும் விஶேஷ ப்ரயாஸை இன்றி ரக்ஷிக்கப் படுகின்றன . அஶ்வத்த மரத்தின் புஷ்பமோ இலையோ காயோ பழமோ பட்டையோ மநுஷ்யனுக்கு எந்த வகையிலும் நேரடியான ஃபலன் தராதவை . ஆனால் , இயற்கைக்கு பல வகைகளிலும் உபயோகமான மரம் . வாயு மண்டலத்திற்கு அதிக அளவில் ப்ராண வாயுவை அளிக்கக் கூடிய மரம் . விஶாலமாக வளர்வதால் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கும் வண்டினங்களுக்கும் உறைவிடம் அளிக்கக் கூடிய மரம் . அஶ்வத்த மரத்தின் (அரஸ மரத்தின்) பழங்கள் சிறியவை . விஶேஷமான ருசி இல்லாததால் மநுஷ்யன் போட்டிக்கு வராததால் பறவைகளுக்கும் அணில் வகை ப்ராணிகளுக்கும் ஆஹாரம் . அஶ்வத்த மரம் உயரமாக வளர்வதால் மழையை ஆகர்ஷிக்கும் ஆற்றல் படைத்தது .
ஹிந்துவின் பார்வை அலாதியானது . பொதுவாக மநுஷ்யன் தனக்கு நேரடியாக ஃபலன் தராத ஒன்றைப் பராமரிக்க மாட்டான் . ஆனால் , அரஸ மரமோ இயற்கைக்கு மிக அதிக ஃபலன்களை அளிக்கக் கூடியது . எனவே , பாதுகாக்கப் பட வேண்டியது . அஶ்வத்த மரம் தெய்வ ஸ்வரூபமாக போற்றப் படுகிறது . இம்மரத்தின் ஸருகுகள் வைதீக ஹோமத்திற்கு த்ரவ்யம் ஆகிறது . அஶ்வத்த மர ப்ரதக்ஷிணம் வெகு விஶேஷமாகக் கருதப் படுகிறது . அஶ்வத்த மரத்தின் அருகாமை கர்பத்தைக் காத்திடும் . போஷித்திடும் . அஶ்வத்த மரத்தின் அடி பாகம் ப்ரஹ்மனாகவும் மத்யம் மஹாவிஷ்ணுவாகவும் ஊர்த்வ பாகம் (மேல் பகுதி) ஶிவனாகவும் போற்றப் படுகிறது . மூன்றின் ஐக்ய தெய்வமான தத்தாத்ரேயனாக அஶ்வத்த மரம் பூஜிக்கப் படுகிறது .
இயற்கையைப் போஷித்திடும் அஶ்வத்த மரம் மநுஷ்ய முயற்சியால் அல்லாமல் இயற்கையாகவே வேர் பிடித்து வளர்கிறது . அரஸ மரத்தின் விதை ஸுவற்றிலோ கூரையிலோ கோபுரத்திலோ எங்கு விழுந்தாலும் அங்கு துளிர்த்து விடும் . திரு ஆனைக்கோயில் ஸ்ரீ ஶங்கர மடத்தில் வேப்ப மரத்தின் அடிமரத்தின் மேல் வேப்ப மரத்திற்கு இணையாக வளர்ந்துள்ள அஶ்வத்த மரத்தைக் காணலாம் .
இயற்கையைப் படு வேகமாக அழித்து விட்டு , ஸமீப காலத்தில் மேற்கத்திய தேஶங்களில் , "Save the Earth" , "Conserve Nature" , "Save Bio - Diversity" என்றெல்லாம் பேஸத் தொடங்கி உள்ளனர் . நாம் ஹிந்துக்கள் இயற்கையை அன்னையாக , படைப்பில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் பரமனின் ஸ்வரூபமாக வேத காலத்தில் இருந்து கருதி வருகிறோம் .
பைபிளைப் பின் பற்றிய மேற்கத்திய தேஶங்களில் பெண்ணையே ஒரு ஜீவனாக நூறு வர்ஷங்கள் முன்பே ஏற்றுக் கொண்டுள்ளனர் . அவர்களைப் பொருத்த வரையில் பெண் ஆணை ஸந்தோஷப் படுத்த , ஆணின் விலா எலும்பில் இருந்து உருவாக்கப் பட்ட ஒரு ஜடம்தான் . இன்றும் மேற்கத்திய ஸமூஹம் பெண்ணை ஒரு போகப் பொருளாகத்தான் கருதுகிறது . போகப் பொருளாகப் பயன் படுத்துகிறது . அவளும் அதற்கு உடன் படுகிறாள் . நாம் ஹிந்துக்கள் பெண்ணை அர்த நாரியாக படைப்பில் ஸமப் பங்கு உள்ளவளாகக் கருதி வந்திருக்கிறோம் . அதையும் தாண்டி , மேற்கத்திய விக்ஞானிகள் கூட ஸமீப காலம் வரை ஜடம் என்று கருதிய மரங்களையும் தெய்வ ஸ்வரூபங்களாகவே கருதி வணங்கி , போஷித்து வந்திருக்கிறோம் .
அஶ்வத்தஹ ஸர்வ வ்ருக்ஷாணாம் ... வ்ருக்ஷங்களில் நான் அஶ்வத்த மரம் ...
Comments
Post a Comment