ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 121
रामः शस्त्र भृतामहम् ... (अध्याय १० - श्लोक ३१)
ராமஹ ஶஸ்த்ர ப்ருதாமஹம் ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 31)
Ramah ShastraBhrutaamaham ... (Chapter 10 - Shlokam 31)
அர்தம் : ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன் ..
ஆயுதம் ஏந்தியவர்களில் ராமன் ... ராமன் , வெறும் ராமன் இல்லை .. எப்பொழுதும் கோதண்ட ராமனே .. கோதண்டம் இல்லாமல் ராமன் கிடையாது . ராமன் என்றால் அமைதியே உருவானவன் ... அன்பு மயமானவன் ... உண்மை தான் . அவன் கையில் தான் ஆயுதம் ஶோபிக்கிறது . பணிவு நிறைந்தவனிடம் கல்வி ... அஹங்காரம் / மதம் இல்லாதவனிடம் பதவி மற்றும் அதிகாரம் ...ஸேவை பாவம் நிறைந்தவனிடம் செல்வம் ...அதுதான் அழகு .
ஆயுதம் வேண்டாம் , யுத்தம் வேண்டாம் என்று ப்ரசாரம் செய்பவன் யார் என்று பாருங்கள் ... ஜபானில் அணு குண்டு வீஸியவன் ... வியட்நாமிலும் ஈராகிலும் தனது ஆதிக்ய வெறியை நிலை நாட்ட , தனது ஸேனையை அநுப்பி , பல வர்ஷங்கள் அந்த தேஶங்களை ஆக்ரமித்து , பல்லாயிர உயிர்களைக் கொன்று குவித்தவன் ... பல தேஶங்களிலும் எண்ணற்ற அரஸியல் கொலைகளைச் செய்யத் தூண்டியவன் , பொருளாதார ரீதியாக ஏழை தேஶங்களின் இயற்கை வளங்களை ஸுரண்டி , தனது தேஶத்தின் பொருளாதாரத்தை வளமாக்க முயல்பவன் ... வகை வகையான ஆயுதங்களைத் தயார் செய்து , ஆயுத மார்கெட் உருவாக்கி , உலகத்தில் பல்வேறு தேஶங்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத தேஶங்களுக்கும் விற்றுப் பணம் பண்ணுபவன் ... அந்த அமெரிகன் சொல்கிறான் ஆயுதம் வேண்டாம் என்று ...
ரெண்டாயிரம் மைல் வரை ஒரு எதிரியும் இல்லாத அமெரிகனின் ஶரீரம் எங்கும் ஆயுதங்கள் , தன்னை ஸுற்றி நான்கு திஶைகளிலும் எதிரிகளே உள்ள பாரதீயனிடம் ஆயுதம் .. ஆயுதம் எங்கு பொருந்துகிறது ? ஜனித்த நாள் முதல் (15 ஆகஸ்ட் 1947) பயங்கரவாதம் ஒன்றையே ஜபித்து , நம் தேஶத்தில் பயங்கரவாதிகளை அநுப்பி வைத்து , அநுதினமும் குண்டு வெடிப்பும் ரக்தக் கிளறியும் செய்து வரும் பாகிஸ்தானி கையில் ஆயுதம் , சென்ற பத்தாயிர வர்ஷ வரலாற்றில் எந்த தேஶத்தின் மீதும் படை எடுக்காத , எந்த தேஶத்து வளங்களையும் ஸுரண்டாத , எந்த தேஶத்தையும் அடிமைப் படுத்தாத ஹிந்துவில் கையில் ஆயுதம் ... ஆயுதம் எங்கு பொருந்துகிறது ?
நம் தேஶத்திலும் பௌத்த மதத்தின் தாக்கம் மற்றும் காந்தியின் கருத்தின் தாக்கம் காரணமாக , "பாரதம் ஸேனை வைத்துக் கொள்ளக் கூடாது , ஆயுதங்கள் வாங்கக் கூடாது , ஆயுத ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் இறங்கக் கூடாது" போன்ற சிந்தனை பேசப் .படுகிறது இது அபத்தமான சிந்தனை . ஆபத்தான சிந்தனை . ஜனங்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் . அதற்கேற்ற வகையில் தேஶ சூழ்நிலை ஏற்படுத்துவது தான் ராஜ்யத்தின் கடமை . இதற்குத் தடங்கலாக வரும் எந்தக் கொள்கையையும் ஆள்பவர் மற்றும் ஆக்ஷி நிராகரிக்க வேண்டும் .
ஆயுதம் ஏந்தியோரில் ஸ்ரீ ராமன் நானே ஸ்ரீ க்ருஷ்ணன் . ஆயுதங்கள் பற்றிய எவ்வித தயக்கமும் ஸந்தேஹமும் அவனுக்குக் கிடையாது . ஆயுதானாம் அஹம் வஜ்ரம் என்றான் . இங்கு ராமஹ் ஶஸ்த்ர ப்ருதாமஹம் ... என்கிறான் .
Comments
Post a Comment