ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 136
प्रणम्य शिरसा .. कृताञ्जलिः .. (अध्याय ११ - श्लोक १४)
ப்ரணம்ய ஶிரஸா க்ருதாஞ்ஜலி .. (அத்யாயம் 11 - ஶ்லோகம் 14)
Pranamya Shirasaa ... Kruthaanjali ... (Chapter 11 - Shlokam 14)அர்தம் : ஶிரஸைத் தாழ்த்தி ... கைகளைக் குவித்து ...
பணிவின் ரெண்டு புற அடையாளங்கள் ... நமஸ்காரத்தின் ரெண்டு வெளிப்படையான சின்னங்கள் .. ஶிரம் தாழ்த்துதல் ... கைகளை இணைத்துக் குவித்தல் ... உலகத்திற்கு ஹிந்துக்கள் அளித்த மிக அரிய பொக்கிஷம் ..
ஶிரஸ் ... நிமிர்ந்து நிற்கும் மநுஷ்ய ஶரீரத்தின் உச்சியில் இருப்பது .. ஶிரஸ் .. மநுஷ்யனின் அறிந்திடும் ஆற்றலான புத்தியும் அதற்கான கருவியான மூளையும் இருக்கும் இடம் .. ஶிரஸ் .. நான் என்று உணர்த்திடும் அஹங்காரமும் அதன் விளைவாக முளைத்திடும் மதம் அல்லது ஆணவமும் உறையும் இடம் ..
விறைப்பு அந்யருக்கும் தனக்கும் வலி ஏற்படுத்துகிறது .. விறைப்பு வீழ்ச்சிக்குக் காரணமாகிறது .. விறைப்பு நட்புக்களையும் பந்தங்களையும் தூர விலக்குகிறது .. விறைப்பு அந்யர் மேல் அந்யாயங்கள் , அக்ரமங்கள் , அநீதிகள் செய்யத் தூண்டுகிறது .. கீதை ஶரீரத்தின் விறைப்பை ஸ்தப்த என்று பெயரிட்டு அதை தாமஸத்தின் அடையாளம் என்கிறது .. புத்தியின் விறைப்பையும் "மூட க்ராஹேணாத்மனா" அல்லது விறைப்புடன் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு" .. தனக்கும் பிறர்க்கும் கஷ்டம் கொடுத்திடும் என்று வர்ணிக்கிறது .. அஹங்காரத்தின் விறைப்பான மதம் (dha) என்பது மநுஷ்ய மனஸின் ஆறு எதிரிகளில் ஒன்று என்பது நாம் அறிந்ததே ..
விறைப்பு மறைய வேண்டும் என்றால் விநயம் மலர வேண்டும் .. ஶரீரத்தில் விறைப்பு மாற , ஶரீரம் வளைய வேண்டும் .. குனிய வேண்டும் .. புத்தி மற்றும் அஹங்காரத்தின் விறைப்பு மாறிட , அவை ஸமர்பணமாகிட வேண்டும் .. ஶிரஸைத் தாழ்த்துவது இந்த திஶையில் அத்புதமான ஒரு முயற்சி .. காலால் உதைப்பது , ஶிரஸைத் தாழ்த்துவது .. இவ்விரண்டு செய்கைகள் எதிர்மறையான பாவனைகளை வெளிப்படுத்துகின்றன .. ஒன்று விறைப்பைக் காட்டுகிறது .. திமிர் நிறைந்த மனஸை வெளிப் படுத்துகிறது .. பிந்தையது பணிவை , ஸமர்பணத்தை வெளிப் படுத்துகிறது ..
ரெண்டு கைகளையும் சேர்த்துக் குவித்தல் .. ஸமத்வத்தைக் குறிக்கும் சின்னம் .., உணர்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் இடையில் உள்ள ஸமத்வம் .. சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே ஸமத்வம் .. (இன்றைய விக்ஞான மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வலது மூளை , இடது மூளைக்கு இடையே ஸமத்வம் ..) ஸித்தமாக உள்ளதை வெளிப்படுத்தும் சின்னம் இது .. ஒத்தைக் கையால் நமஸ்காரம் செய்வதை மறுக்கின்றன நம் ஶாஸ்த்ரங்கள் .. கை குலுக்குவதற்காக முன்னே நீட்டுதல் , "நான் உனக்கு ஸரிஸமம்" என்று உரக்கச் சொல்கிறது என்றால் .. கைகளைக் குவிப்பது , "நான் பணிகிறேன்" என்ற அழகான செய்தியைச் சொல்கிறது ..
கைகளைக் குவித்தால் போதாது .. ஶிரஸும் தாழ வேண்டும் .. ஶிரஸ் தாழ்ந்தால் போதாது .. மனஸில் "விநயம்" "அஹங்காரம் இன்மை" "ஸமர்பண பாவம்" மலர வேண்டும் .. முதல் ரெண்டு செய்கைகளும் வெளியில் தெரிந்திடும் செயல்கள் .. மற்றவர் மனங்களில் நம்மைப் பற்றிய கருத்தை ஏற்படுத்தும் .. மூன்றாவது , அதாவது மனஸில் மலர்ந்திடும் விநயம் நமக்கு மாத்ரமே தெரிந்திடும் .. நம்மைப் பற்றி , நாம் மாத்ரமே அறிந்த நிஜ ஸ்வய ரூபம் .. மற்றவர் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து நமக்கு பரிஸுகளையும் பாராட்டுக்களையும் வாங்கித் தரலாம் .. ஆனால் , நம் நிஜ ஸ்வய ரூபம் நம்மை உயர்த்திடும் .. இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும் ...

Comments
Post a Comment