ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 137
त्वं वेदितव्यम् ... (अध्याय ११ - श्लोक १८)
த்வம் வேதிதவ்யம் ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 18)
Tvam Veditavyam .. (Chapter 11 - Shlokam 18)அர்தம் : அறியத் தகுந்தவர் தாங்களே ...
அவ்யம் என்ற கூட்டெழுத்து , "பட வேண்டியது" அல்லது "படத் தகுந்தது" என்ற அர்தத்தில் வெவ்வேறு செயல்களுடன் இணைகிறது .. கர்தவ்யம் என்றால் செய்யப் பட வேண்டியது .. தாதவ்யம் என்றால் கொடுக்கப் பட வேண்டியது .. கந்தவ்யம் என்றால் சென்றடையப் பட வேண்டியது .. வேதிதவ்யம் என்றால் , "அறியப் பட வேண்டியது" ..
மரம் போன்ற ஸ்தாவர ஜீவன்கள் அறிந்திருக்கின்றன .. மண்ணில் இருந்து ஸத்தை உறிஞ்ஜுவது எவ்வாறு என்று அறிந்திருக்கின்றன .. அந்த ஸத்தை புஷ்பமாகவும் காயாகவும் பழமாகவும் மாற்றுவது எங்ஙனம் என்பதை அறிந்திருக்கின்றன .. ஆனால் , இது அறியத் தகுந்தது என்று உணர்வதில்லை .. உணர்ந்து அறிய முற்படுவதில்லை .. அவற்றிடம் காணப் படுவது fixed and embedded knowledge ..அதாவது அளவான க்ஞானம் .. அவற்றின் உள்ளே பதிக்கப் பட்ட க்ஞானம் ..
மற்ற வகை ப்ராணிகள் காலத்திற்கு ஏற்ற புதிய விஷயங்களை அறிகின்றன .. மாறிய சூழலுக்கு ஏற்ற புதிய விஷயங்களை அறிகின்றன .. ஒரு காக்கை குச்சிகளைச் சேர்த்து கூடு கட்டி வந்திருக்கிறது .. ஆனால் இன்று இரும்புக் கம்பி , சணல் கயிறு , ப்லாஸ்டிக் தாள் ஆகியவற்றை உபயோகப் படுத்தி கூடு காட்டுகிறது .. ஒரு ஆடு முன்னங்கால்களைத் தூக்கி , ஸுவற்றில் பதித்து , பின்னங்கால்கள் மேல் நின்று கொண்டு போஸ்டரைத் தின்கிறது .. யாத்ரை ஸ்தலங்களில் ஒரு குரங்கு மோடார் பைக்கின் பை ஸிப்பைத் திறந்து , உள்ளே வைக்கப் பட்டிருக்கும் தின்பண்டப் பையை எடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறது .. காலத்திற்கு ஏற்ற புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றன என்பது ஸத்யம் .. ஆனால் , இது அறியப் பட வேண்டியது என்று உணர்ந்து கற்றுக் கொள்ளவில்லை .. புதிய சூழலில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற விஷயத்தைக் கற்றுக் கொள்கிறது ..
இது அறியப் பட வேண்டியது என்று உணரக் கூடிய ஒரே ஜீவன் மநுஷ்யன் மாத்ரமே .. உணர்ந்து விட்ட பின்னர் அறிவதற்கு ஏற்ற முயற்சி எடுத்திடும் ஆற்றல் கொண்டவனும் அவனே ..
அறியப் பட வேண்டியது எது ? இன்றைய இளைஞனிடம் இக்கேள்வியைக் கேட்டால் , "கம்ப்யூடர்" என்று பதில் அளிப்பான் .. ஆங்க்ல பாஷை , அதுவும் அமெரிக பாணியில் என்பான் .. ஏனடா என்று கேட்டால் , "அதுதான் சோறு போடும்" என்பான் .. "ஏனடா தமிழ்ப் பாடத்தை கற்க எடுத்துக் கொள்ளவில்லை" என்று கேட்டால் "தமிழ் சோறு போடுமா ?" என்று பதில் கேள்வி கேட்பான் .. (நம் தேஶத்தின் பெரும்பாலான ஸ்வ-பாஷா வகுப்பறைகள் காலியாக இருப்பதைக் காண்கிறோம் அல்லவா ??) இவன் அந்த காக்கை , ஆடு , குரங்குக்கு ஸமமான தளத்தில் தான் இருக்கிறான் .. வாழ்வதற்கு எது போதுமோ அதே அறியத் தக்கது ..
சோற்றை ஸம்பாதிக்க எதையோ அறியட்டும் .. ஆனால் , அது போதுமா ?? "இனி சோற்றைப் பற்றி கவலை இல்லை" என்ற நிலையில் வேறு ஏதேனும் அறிந்திருக்க வேண்டாமா ? வாழ்க்கை முழுமை அடைந்திட அறியத் தக்கது வேறு ஏதேனும் இருக்கிறதா ?
இங்கு அர்ஜுனன் பரமனை .. "நீ அறியத் தக்கவன்" என்கிறான் .. எதை அறிந்து விட்டால் வேறு எதையும் அறிய வேண்டிய அவஶ்யம் இருக்காதோ , அந்த பரம தத்வமே அறிய அர்ஹதை உள்ளது .. அறியப் பட வேண்டியது என்கிறான் ... ஆம் !! பரம தத்வம் அறியத் தகுந்தது .. நம் முயற்சிகளுக்குப் பின்னால் , உலகத்தின் நிகழ்ந்திடும் பலவற்றையும் நிகழ்த்துபவன் .. நம் ஆற்றல்களுக்கு ஆற்றல் அளிப்பவன் , நம் அழிவிற்கும் காரணமானவன் .. அந்த பரமனை , அந்த பரம தத்வமே அறியத் தகுந்தது ..
Comments
Post a Comment