ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 138
स्व तेजसा विश्वम इदं तपन्तम् ... (अध्याय ११ - श्लोक १९)
ஸ்வ தேஜஸா விஶ்வம் இதம் தபந்தம் ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 19)
Swa Tejasaa Vishvam Idam Tapantam .. (Chapter 11 - Shlokam 19)
அர்தம் : இந்த உலகம் தங்களது தேஜஸில் தஹிக்கிறது ..
அழிவும் இயற்கையின் ஒரு அம்ஶமே என்பதை ஏற்றுக் கொள்ளாத ஒரு மனஸ் இவ்வாறு பேசுகிறது . தங்களது தேஜஸில் உலகம் தஹிக்கிறது .. தங்களது கோபாக்னியில் உயிர்கள் சிக்கித் தவிக்கின்றன .. கோர தாண்டவம் ஆடுகிறாய் .. அழிவின் தர்ஶனம் கிடைக்கும் போதெல்லாம் மநுஷ்யன் இவ்வார்தைகளைப் பேசுகிறான் .. இயற்கையின் அழிக்கும் ஆற்றல் முன் தனது இயலாமையை உணர்ந்து இவ்வார்தைகளைப் பேசுகிறான் .
அழிவில் சிறிய - பெரிய என்றெல்லாம் உண்டா ? மரத்தில் இருந்து ஒரு இலை பிரிந்து விழுந்தாலும் அழிவு தான் .. ஒரு கொஸு , ஒரு மீன் , ஒரு கோழி , ஒரு ஆடு , என்று எந்த ஜீவன் இறந்தாலும் அழிவுதான் .. வயஸானவன் ஒருவன் இறப்பதும் சிறுவன் இறப்பதும் வெவ்வேறு வகையான அழிவு இல்லை .. ஆனால் , மநுஷ்ய மனஸ் அழிவை வகைப் படுத்துகிறது .. சிறிய அழிவு , பெரிய அழிவு , ஸாதாரண அழிவு , பயங்கர அழிவு , மஹா பயங்கர அழிவு ..இவனுடைய மனஸிற்கு சிறிய அழிவு , ஸாதாரண அழிவு என்று இவன் கருதும் அழிவுகள் உறைப்பதில்லை .. அதிக எண்ணிக்கையில் உயிர்கள் செத்தால் , இவன் கணக்கில் அதிக முக்யத்வம் வாய்ந்த உயிர் செத்தால்தான் இவன் அழிவை தர்ஶிக்கிறான் .. ஸுக போகத்தில் மூழ்கி இருப்பதால் , ஸுகங்கள் கிடைத்து விடும் என்ற கனவில் மூழ்கி இருப்பதால் , ஸம்ஸார மாயையின் பிடியில் சிக்கி இருப்பதால் , மநுஷ்ய மனஸ் ஒரு வகையில் போதையில் , ஸ்வய உணர்வற்ற நிலையில் இருக்கிறது .. உண்மையைப் பார்த்திட விரும்பாத பலஹீன நிலையில் இருக்கிறது .. இந்த போதையைத் தாண்டி இவனை உலுக்க வேண்டும் என்றால் , அழிவு பெருஸாக , கோரமாக , மஹா பயங்கரமாக இருந்தால் மாத்ரமே , அதிக எண்ணிக்கையில் ஜீவன்கள் இறந்தால் மாத்ரமே , இவன் உலுக்கப் படுகிறான் .. அதுவும் குறுகிய காலத்திற்கு .. பின்னர் மீண்டும் ஸுக போதையில் மூழ்கி விடுகிறான் ..
நான் அறிந்த ஒருவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times Of India) என்ற ப்ரபல பத்ரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான் .. முதல் நாள் , ப்ரதான ஶாலையில் நடந்த ஒரு விபத்துச் செய்தியை எடுத்து வந்தான் .. பத்ரிகை ஆசிரியர் செய்தியைப் படிக்காமல் , "எத்தனை பேர் செத்தனர் ?" என்று கேட்டார் .. "கடவுள் அருளில் எவரும் சாகவில்லை" என்று பதில் அளித்தான் இவன் .. "இதெல்லாம் ஒரு செய்தியா ?" என்று இவன் எழுதியதை வீசி எறிந்து விட்டார் .. அதிர்ச்சி அடைந்த இவன் , "யாராவது செத்தால் தான் எனக்குச் சோறா ? (ஸம்பளமா)" என்று கேட்டு வேலையை விட்டு விலகினான் .
ஸுநாமி வந்த போது , ஒரு கடற்கரை க்ராமத்தில் நின்றிருந்தேன் .. ஒருவர் வண்டி நிறைய ஸாமான்களும் ஸில லக்ஷ ரூபாய்களும் எடுத்து வந்தார் .. க்ராமத் தலைவர் ஸுநாமியை வர்ணித்தார் .. எல்லோரும் சிதம்பர ஆலயத்திற்குச் சென்று விட்டதால் அதிக மரணம் இல்லை , ரெண்டு உயிர்கள் தான் போயின என்றார் . (அவர் சொல்வது மநுஷ்ய உயிர் மாத்ரம் ..) உதவி எடுத்து வந்த நபர் , என்னைத் தனியாக அழைத்து , "அருகில் அதிக மரணம் நிகழ்ந்த ஊர் இருந்தால் சொல்லுங்கள் .. அங்கு கொடுக்கலாம்" என்றார் . அழிவைப் பற்றி அவரது அளவுகோல் இது ..
ஆக்கமும் , வாழ்தலும் போல அழிவும் இயற்கையின் ஒரு அம்ஶமே .. இல்லை .. ஆக்கமும் அழிவும் மாத்ரமே .. ஆக்கம் ஆன அன்றே அழிவு ஆரம்பித்து விடுகிறது .. நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை .. ஆக்கம் , நம் கண்களுக்கு அழிவு தென்படும் நேரம் .. ரெண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை "வாழ்தல்" என்று நாம் கருதிக் கொள்கிறோம் ..
அழிவை அறிவது அவஶ்யமா ? அழிவை அறிந்தால் வாழ்க்கையின் ருசி குன்றி விடுமா ? ஸத்யம் ஸத்யமே .. நாம் அறிவதாலும் , அறிய மறுப்பதாலும் , அறிய இயலாமல் இருப்பதாலும் ஸத்யம் மாறி விடாது .. அறிவதும் அறியாததும் நம் ஸ்வபாவப்படி நிகழ்ந்திடும் .. அறிந்தால் வீணான ஆஶைகளும் வெற்று முயற்சிகளும் வீணான எதிர்ப்பார்ப்புகளும் மறைந்து விடும் ..

Comments
Post a Comment