ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 140
स्वस्तीस्त्यक्त्वा महर्षी: ... (अध्याय ११ - श्लोक २१)
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷீஹி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 21)
Swasteestyuktvaa Maharsheeh ... (Chapter 11 - Shlokam 21)அர்தம் : மஹர்ஷீகள் மங்கலம் நேரட்டும் என்ற ஸ்வஸ்தி வசனத்தைக் கூறிய படி உள்ளனர் ..
அர்ஜுனனின் வர்ணனையை கவனியுங்கள் ... மநுஷ்யர்கள் தம் இயலாமையை வெளிப்படுத்திய படி , ஸ்ரீ பரமனின் விராட ரூபத்தின் அகன்று திறந்த வாயில் ப்ரவேஶிக்கின்றனர் ... அவரது கோரப் பற்களால் அரைக்கப் படுகின்றனர் .. தேவர்கள் பயந்து கை கூப்பிய படி அவனை ஸ்துதி பாடுகின்றனர் .. மஹர்ஷீக்கள் மங்கல வசனங்களைப் பாடி ஸ்ரீ பரமனை வாழ்த்துகின்றனர் . (ஸ்வஸ்தி வசனங்கள்)
ர்ஷீ , மஹர்ஷீ என்பவர்கள் பாரத தேஶத்தின் விஶேஷம் .. ஹிந்து ஸமுதாயத்தின் பெருமை மிகுந்த முன்னோர்கள் .. மநுஷ்யருள் ஜ்வலித்திடும் மாணிக்யங்கள் .. க்ஞானத்தில் ஶிகரங்கள் .. தர்மத்தின் உறுதியான ஆதார ஸ்தம்பங்கள் . தபஸில் வானளாவிய மேருக்கள் .. குணங்களின் , பண்புகளின் உச்ச கோடி உதாஹரணங்கள் .. ஸ்வய நலம் , அறியாமை , ஒழுக்கக்கேடு , இல்லாததால் ராஜா , மஹாராஜா , சக்ரவர்தி என்ற எவருக்கும் பயப் படாதவர்கள் .. ராஜா மஹாராஜாக்களால் இவர்களும் மதிக்கப் பட்டனர் .. இவர்களது அபிப்ராயமும் மதிக்கப் பட்டது .. இத்தகைய மிகையான அதிகாரம் இருந்தும் , ஒழுக்கம் ஓங்கி இருந்ததால் , அதிகாரத்தின் ஆணவம் தம் தலைக்கு ஏற அநுமதிக்காதோர் ர்ஷீ , மஹர்ஷீக்கள் ..
மஹர்ஷீ ஸந்ந்யாஸீ இல்லை .. குடும்பஸ்தர்கள் .. இவர்கள் தத்தம் மனைவியின் பெயருடன் இணைந்தே அறியப் படுகின்றனர் .. வஶிஷ்ட - அருந்ததி , அத்ரி - அநஸூயா , கவுதம - அஹல்யா , அகஸ்த்ய - லோபமுத்ரா , ..
பாரதத்தின் தர்ம மய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் ர்ஷீக்கள் , மஹர்ஷீக்கள் .. பாரத ஜனங்களில் காணப்படும் க்ஞான தாஹம் , அறுபடாத க்ஞான பாரம்பர்யம் இவற்றுக்கு இங்கு வாழ்ந்த லக்ஷோப லக்ஷ ர்ஷீ களே காரணம் ..
ர்ஷீக்கள் , மஹர்ஷீக்கள் என்றோ வாழ்ந்தவர்கள் .. ஆயிரம் ஆயிரம் வர்ஷங்கள் முன்னர் வாழ்ந்தவர்கள் .. அவர்களது ஈடிணையற்ற தேஜஸின் ஆதாரத்தில் இன்று வரை பாரதம் பாரதமாக இருக்கிறது .. இஸ்லாமிய வெறித் தாக்குதல்கள் , க்றிஸ்தவ மத மாற்ற சதிகள் , போக வாதம் , கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறை ஆகிய புயல்களில் சிக்கிச் சிதறி , பாரதம் சின்னா பின்னமாகவில்லை என்றால் அதற்கு ர்ஷீ மஹர்ஷீக்களின் மஹோன்னத வாழ்க்கையே காரணம் .. (ஸ்ரீ பரமாசார்யர் சொல்வார் .. முன்னோர்கள் நிறைய பெடல் அழுத்தி விட்டனர் .. இன்று நாம் பெடலை அழுத்தாமலே நம் ஸைகில் ஓடுகிறது .. ஆனால் அதிக தூரம் ஓடாது .. நாம் நம் பங்கிற்கு பெடல் போட வேண்டும் .. அப்பொழுதுதான் அடுத்த தலைமுறைக்கு ஓடும் ஸைகிளை கொடுத்துச் செல்லலாம் .. ) மீண்டும் பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ர்ஷீக்களும் மஹர்ஷீக்களும் உருவாக வேண்டும் .. மீண்டும் க்ஞானமும் தர்மமும் ஒழுக்கமும் தபஸும் ஜ்வலிக்க வேண்டும் .. அந்த ஒளி உலகம் முழுவதும் பரவ வேண்டும். உலகத்தை இருளில் இருந்து விடுவிக்க வேண்டும் ..
Comments
Post a Comment