ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 141
प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च ... (अध्याय ११ - श्लोक २४)
ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி ஶமம் ச ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 24)
Pravyathitaantaraatmaa Dhrutim Na Vindaami Shamam Cha ... (Chapter 11 - Shlokam 24)அர்தம் : என்னுடைய பயந்த உள் மனஸ் தைர்யம் மற்றும் ஶாந்தி அடையவில்லை ..
இங்கு அர்ஜுனன் அடிப்படையான ஒரு ஸத்யத்தைப் பகர்கிறான் .. ஒரு காக்ஷி பயங்கரமாக இருப்பதால் நாம் பயம் கொள்வதில்லை .. ஒரு ஶப்தம் பயங்கரமாக இருப்பதால் நாம் பயம் கொள்வதில்லை .. நம் மனஸ் பயந்த ஸ்வபாவம் கொண்டதாக இருப்பதால் , நாம் பயம் கொள்கிறோம் .. அதனால்தான் காக்ஷி இல்லவே இல்லை என்றாலும் , ஶப்தம் இல்லவே இல்லை என்றாலும் , வெறும் ப்ரமை அடிப்படையில் கூட பயம் கொள்கிறோம் ..
காக்ஷி பயங்கரமானது என்பது universal இல்லை .. அவ்வாறு இருந்தால் அதைப் பார்க்கும் அனைவரும் பயம் கொள்ள வேண்டும் .. உண்மை நிலை அவ்வாறு இல்லை .. ஒரு காக்ஷி அல்லது வேறு எந்த அநுபவமும் அனைவருக்கும் பயம் ஏற்படுத்துவதில்லை .. பயம் கொள்வோரும் ஸம அளவில் பயம் கொள்வதில்லை .. ஒரு காக்ஷி அல்லது வேறு ஒரு அநுபவம் ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு தாக்கம் ஏற்படுத்துகிறது .. அவரவர் ஸ்வபாவம் , நம்பிக்கைகள் , மனஸின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து இந்தத் தாக்கம் இருக்கிறது .. இதையே அர்ஜுனன் சொல்கிறான் .. என்னுடைய பயந்த மனஸ் தைர்யம் அடையவில்லை என்கிறான் ..
பயந்த மனஸை வளர்ப்பது ஸரியா ? தவறு செய்ய பயம் (ஹ்ரீ) ஒரு தெய்வத் தன்மை என்கிறது கீதை பதினாறாம் அத்யாயத்தில் .. ஆனாலும் பயத்திற்கு ஒரு எல்லை உண்டு .. ஒரு நிலைக்குப் பிறகு பயம் வற்றி விடும் .. பயமுறுத்தி ஒரு தவறைத் தடுத்து விட முடியாது .. ஸிகரெட் பாக்கெட் மீது மண்டை ஓடு வரைந்து விட்டால் , ஸிகரெட் பிடிப்பதைத் தடுத்து விட முடியுமா ? டீ வியில் மது பானக் காக்ஷி வரும் போது , "மது பானம் ஆரோக்யத்தைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கை எழுதி விட்டால் குடிப்பதைத் தடுத்து விட முடியுமா ? பயம் ஓரளவிற்கு வேலை செய்யும் .. புரிய வைக்கும் முயற்சி வேண்டும் .. தவறிழைத்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ... அத்துடன் பயம் காட்டுதலும் வேண்டும் ..
Comments
Post a Comment