ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 143
नरलोकवीरा विशन्ति तवामि वक्त्राण्यभिविज्वलन्ति ... (अध्याय ११ - श्लोक २८)
நரலோகவீரா விஶந்தி தவாமி வக்த்ராணி அபிவிஜ்ஜ்வலந்தி ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 28)
NaraLokaVeeraa Vishanti Tavaami Vaktraani Abhibijjwalanthi .. (Chapter 11 - Shlokam 28)அர்தம் : நர லோகத்து வீரர்கள் தங்களது ஜ்வலிக்கும் வாய்களில் ப்ரவேஶம் செய்கின்றனர் ...
விராட தர்ஶனத்தில் அர்ஜுனன் பார்க்கும் காக்ஷி இது .. பீஷ்மரும் த்ரோணரும் கர்ணனும் யுத்த க்ஷேத்ரத்தில் நிற்கும் மற்ற வீரர்களும் பரமனின் அகன்று திறந்திருக்கும் வாயினுள் , ஜ்வலித்திடும் வாயினுள் வேகமாக ப்ரவேஶிக்கின்றனர் .. மாபெரும் பற்களுக்கு இடையில் அரைபட்டு சூர்ணம் ஆகின்றனர் ..
பூமியில் பிறந்து மரணத்தை நோக்கி ப்ரயாணிப்பது தான் வாழ்வா ? ஆம் . பிறந்த அந்த க்ஷணமே இந்த ப்ரயாணம் ஆரம்பித்து விடுகிறது .. நமக்குப் பிடித்திருக்கிறதா ? நமக்கு ஹிதமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி ஸத்யத்திற்குக் கவலை இல்லை .. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் நம் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளலாம் . ஆனால் , அந்நிலையிலும் நாம் அமர்ந்திருக்கும் அந்த கன்வேயர் பெல்ட் (Conveyor Belt) .. மரணத்தை நோக்கி நகர்ந்திடும் அந்த பெல்ட் நின்று விடப் போவதில்லை ..
நதிகள் எவ்வாறு ஸமுத்ரத்தை நோக்கி ஓடி , ஸமுத்ரத்தில் கலந்து , கரைந்து அழிந்து விடுகின்றனவோ அவ்வாறு என்கிறான் அர்ஜுனன் .. ஈஸல்கள் ப்ரகாஶமான தீப ஜ்யோதியை நோக்கி , வேகமாக பறந்து , அதில் விழுந்து அழிந்து விடுகின்றனவோ , அவ்வாறு என்கிறான் .. கொஸு ஒன்று மநுஷ்யக் கையில் வந்து அமர்கிறது .. ஒரு க்ஷணம் .. அடுத்த க்ஷணம் அவன் கையால் அடிபட்டு , நஶிங்கி சாகிறது .. சாவதற்கே வருகிறது .. உட்காருகிறது ..செத்து விடுகிறது .. ஆனால் அந்த ஒரு க்ஷணத்தில் ஒரு சொட்டு ரக்தத்தை உறிஞ்ஜு எடுத்து விடுகிறது .. அதுதான் அந்த கொஸுவிற்கு வாழ்க்கை .. வாழ்க்கையின் ஸாதனை .. கொஸுவிற்கு ஒரு க்ஷணம் .. மநுஷ்யனுக்கு சில வர்ஷங்கள் .. அவ்வளவு தான் வித்யாஸம் ..
பரமன் உணர்ச்சி அற்ற ஒரு யந்த்ரமா ?? உயர்ந்த தன்மை உள்ள ஒரு ஜீவனை அவனுக்குப் பிடித்திருக்கலாம் .. லோக க்ஷேமம் நாடி உழைக்கும் ஒரு ஜீவன் அவனுக்கு ப்ரியமானவனாக இருக்கலாம் .. ஆனால் .. ஆனால் .. உயர்ந்தவன் , நல்லவன் என்பதால் அவனுக்கு மரணம் கிடையாது என்று அறிவிக்க பரமனுக்கே அதிகாரமில்லை .. பிறந்தவை இறக்கும் .. இறந்தவை பிறக்கும் .. இது யந்த்ர கதியில் நடைமுறைப் படுத்தப் படும் இயற்கையின் ஒரு விதி .. இதில் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..
அனைவரும் பரமனது வாயில் விழுந்து அரைபட்டு சூர்ணம் ஆகிறார்கள் என்கிறான் அர்ஜுனன் .. ஆனால் , தன்னை அவன் அங்கு காணவில்லை .. அதுதான் விஶேஷம் .. மநுஷ்யனுக்குத் தன் மரணம் தெரிவதில்லை .. அவன் தன்னை ஸ்தூல ஶரீரமாகக் கருதிக் கொண்டால் , ஸுகங்களை விரும்பி நாடுவதால் , ஸுகங்கள் விலகுவதை விரும்பாததால் , மரணம் ஸுக அநுபவத்தலின் முடிவு என்று அறிந்திருப்பதால் , தன் மரணத்தைக் காண மறுக்கிறான் .. அதைப் பற்றி நினைக்கவும் விரும்புவதில்லை .. மநுஷ்யனுடைய நிஜ ஸ்வரூபம் ஶரீரம் இல்லை .. ஆத்மா .. அதி சூக்ஷ்மமான ஆத்மா நித்ய பரப்ரஹ்மமான பரமாத்மாவின் அம்ஶம் ஆனதால் , அது நித்யமானது .. ஶாஶ்வதமானது .. அதற்கு அழிவு இல்லை .. மரணம் இல்லை .. இது ஸத்யம் .. அவன் அறியா விட்டாலும் அவனுள் ஆழப் புதைந்து இருக்கும் ஸத்யம் .. அதனால் மநுஷ்யனால் ஸ்வயத்தின் மரணத்தைக் காண முடிவதில்லை ..
Comments
Post a Comment