ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 145
कालोSस्मि लोकक्षयकृत प्रवृद्धो ... (अध्याय ११ - श्लोक ३२)
காலோ(அ)ஸ்மி லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருததோ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 32)
Kaalo(a)mi LokaKshayaKrut Pravruddho ... (Chapter 11 - Shloka 32)
அர்தம் : அனைவரையும் அழிக்க வந்திருக்கும் காலன் நான் ...
தமிழில் காலம் .. காலன் என்று ரெண்டாக எழுதினாலும் , மூல ஸம்ஸ்க்ருத வார்தை ஒன்றுதான் .. கால ... கால - மஹாகால .. கடந்த காலம் , நிகழ் காலம் , எதிர்க்காலம் நானே . என்றார் .. விபூதி யோகத்தில் (பத்தாம் அத்யாயத்தில்) கணிக்கும் காலம் (ஸமயம்) நான் என்றார் .. பின்னர் அனைவரையும் கட்டுப் படுத்தும் யமன் நானே என்றார் . மரணத்தின் அதிபதியான யமன் வேறு என்று நாம் நினைக்க வாய்ப்பு இருப்பதால் இவ்வாறு சொல்கிறார் . காலம் , காலன் இவற்றில் வேறுபாடு எதுவும் இல்லை . ரெண்டும் ஒன்றே .. அதாவது , அழிவு நிஶ்சயம் .. காலம் அழித்து விடும் . காலப் போக்கில் அழிவு தன்னால் நிகழ்ந்து விடும் .. தேவைப்படும் காலம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம் .. ஆனால் , கால ப்ரவாஹமே அழித்து விடும் ..
இங்கு மேலும் தெளிவாக , "அனைவரையும் அழிக்க வந்திருக்கும் காலம் (ன்) நான்" என்கிறார் .. இந்த வீரர்களை நீ போரிட்டுக் கொல்ல மறுத்தாலும் .. அவர்களின் அழிவு ஏற்கெனவே நிஶ்சயம் ஆனது .. என்கிறார் .. இவ்வாறு கூறி விட்டு .. அவர்கள் அழியும் காக்ஷியைக் காட்டி விட்டு .. "நீ நிமித்தம் மாத்ரமே" .. உன் கையால் நிகழப் போவது எதுவும் இல்லை .. என் கார்யத்தில் நல்லதொரு கருவி ஆகி விடு என்று கூறுகிறார் .. அடுத்த சொற்றொடரில் பார்ப்போம் ..
ஒரு அமெரிக மனோ விக்ஞானி பாரதத்தைப் பற்றி எழுதிய கட்டுரையை ஸமீபத்தில் படித்தேன் .. "உலகத்திலேயே மிகக் குறைந்த வலி கொடுப்பதாக மரணம் இருப்பது பாரதத்தில் தான்" என்று எழுதுகிறாள் .. நிஶ்சயம் ஆனது .. தவிர்க்க முடியாதது .. காலப் போக்கில் நடந்தே தீரும் .. இதுவும் பரமனின் கார்யமே .. ஹிந்துக்கள் தம் ஆழ் மனஸில் இந்த ஸத்யத்தை உணர்ந்திருப்பதால் மரணம் இங்கு ஸஹஜமான விஷயமாகி விட்டதோ ??

Comments
Post a Comment