ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 146
निमित्त मात्रं भव सव्यसाचिन ... (अध्याय ११ - श्लोक ३३)
நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின் ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 33)
Nimitta Maatram Bhava Savyasachin ... (Chapter 11 - Shlokam 33)அர்தம் : நீ வெறும் நிமித்தம் ஆகி விடு ...
அர்ஜுனனிடம் "நீ நிமித்தம் மாத்ரம் ஆகி விடு" என்று சொல்லும் போது அர்ஜுனனை ஸ்ரீ க்ருஷ்ணன் ஸவ்யஸாசின் என்ற பெயரிட்டு அழைக்கிறார் . ஸவ்யஸாசின் என்றால் தன் வலது கையால் எவ்வளவு திறமையாக கார்யங்களைச் செய்கிறானோ , அதே அளவு திறமையுடன் இடது கையாலும் செய்யக் கூடியவன் என்று அர்தம் .. கைகள் மநுஷ்யனின் கருவிகள் .. நம் கைகள் ஆற்றல் மிகுந்தவையா ? அவற்றால் கார்யங்களை முழுத் திறனுடன் செய்ய முடியுமா ?? ரெண்டு கைகளும் ஸம அளவு திறமை கொண்டவையா ? பொதுவாக நாம் பார்க்கும் காக்ஷி இவ்வாறல்ல .. இடது கை வலது கை அளவிற்கு திறன் வாய்ந்ததாக இருப்பதில்லை .. பல கார்யங்கள் செய்வதில் இடது கை திறன் அற்றதாக இருக்கிறது .. வலது கையும் ஸாதாரண நித்ய கார்யங்களை திறமையாகச் செய்து விடுகிறது .. ஆனால் , ஆபத்து நேரங்களில் , விஶேஷ கார்யங்களைச் செய்யத் தடுமாறுகிறது ..
கருவிக்கு ஸ்வந்த யோஜனையோ திட்டமோ கிடையாது .. உபயோகப் படுத்துபவரிடம் தன்னை ஒப்படைத்து விடுதலே ஒரு கருவி செய்யக் கூடியது ..யோஜனை அவனது .. திட்டம் அவனுடையது .. கருவியின் தகுந்த உபயோகம் செய்யக் கூடியவன் அவனே ..
ஒரு மநுஷ்யன் கருவி மாத்ரம்தானா ? அவன் கையில் ஒன்றும் இல்லையா ? இந்த விஷயத்தில் ரெண்டு நேர் எதிர்மாறான கருத்துக்கள் உள்ளன . ஒன்று - எல்லாம் முடிவானதே .. எல்லாம் முன் கூட்டியே நிஶ்சயமானது .. விதிக்கப் பட்டுள்ள இந்த திட்டத்தில் தன்னை ஸமர்பித்து விடுதல் மாத்ரமே மநுஷ்யனால் செய்யக் கூடியது .. கார்யம் அவன் நிகழ்த்துவான் .. அக்கார்யத்தில் நிமித்தம் ஆகி விடுதலே மநுஷ்யன் செய்யக் கூடியது .. இதற்கு நேர் எதிர்மாறான மற்றொரு கருத்து உண்டு .. மநுஷ்யனால் இயலாதது எதுவும் இல்லை .. அவன் நினைத்ததை , அவன் யோஜித்ததை , அவன் நிஶ்சயம் செய்ததை , அவனால் செய்து முடித்து விட முடியும் ..எல்லாம் அவன் கையில் ..
இவ்விரண்டு கருத்துக்களும் ஸமுதாயத்தில் நிலவிடும் குறைகளுக்கு மற்ற கருத்தைப் பொறுப்பாக்கி , ஒன்றை ஒன்று கண்டிக்கின்றன .. மறுக்கின்றன .. முதல் கருத்தை ஏற்போர் , ஸமுதாயத்தில் படு வேகமாகப் பரவிடும் ஸ்வயநல ஓட்டம் , இரக்கம் அற்ற போட்டி , மன இறுக்கம் , அதன் விளைவான நோய்கள் ஆகிய அனைத்திற்கும் மற்ற கருத்தே (அதாவது மநுஷ்யனே எல்லாம் .. அவனை மீறி எதுவும் கிடையாது என்ற கருத்தே) காரணம் என்கின்றனர் .. ரெண்டாம் கருத்தைக் கொண்டவர் ஸமுதாயத்தில் நிலவிடும் செயல் அற்ற தன்மை , ஸ்வய உயர்வுக்கு ஊக்கம் இல்லாமை , முயற்சிகள் இல்லாமை , அபாரமான ஸாதனைகள் இல்லாமை , ஆகிய அனைத்துக் குறைகளுக்கும் மற்ற கருத்தே காரணம் என்கின்றனர் ..
ரெண்டு பக்ஷங்களும் பகுதி ஸத்யத்தைப் பேசுகின்றனர் .. வாழ்க்கையின் நிஶ்சயம் அற்ற தன்மை , எதிர்க்காலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை , அதற்கான ஸ்வந்த முயற்சிகள் , தன் திறமை மீது ஸந்தேஹம் , கடுமையான போட்டி , ஆகியவை காரணமாக மன இறுக்கம் .. தன் வாழ்க்கையைத் தானே நிறுவ வேண்டும் என்ற ஓட்டத்தில் ஸ்வந்தங்களும் பந்தங்களும் விலகி விடுகின்றனர் .. அதனால் ஆபத்து அவஸரத்தில் பொருளாதார மற்றும் மனோ ரீதியான ஆதரவு கிடைப்பதில்லை .. பௌதீக வஸதிகளும் ஸுகமும் அதீதமாக இருந்தும் வாழ்க்கை ஆனந்தம் அற்றதாய் , வறண்டதாய் மாறி விடுகிறது ..
மற்ற கருத்து ஓங்கினால் வாழ்க்கை நிம்மதி இருக்கிறது .. மன ஶாந்தி இருக்கிறது .. மநுஷ்ய மனஸில் ஸந்தோஷம் இருக்கிறது .. ஆனால் , சோம்பலும் முயற்சி இன்மையும் , ஏழ்மையும் , வளர்ச்சிக்கு ஊக்கம் இன்மையும் காணப் படுகிறது என்பது ஸத்யமே ..
ஆனால் , நிமித்தம் ஆகி விடு என்பது பரமன் ஸ்ரீ க்ருஷ்ணனே கூறிடும் யோஜனை அல்லவா ? அதே ஸ்ரீ க்ருஷ்ணன் உத்திஷ்ட - யுத்தாய க்ருத நிஶ்சய என்றும் கூறுகிறார் .. அதாவது எழுந்திரு .. யுத்தம் புரிவேன் என்று நிஶ்சயம் செய்திடு என்றும் கூறுகிறார் அல்லவா ?? எனில் , செய்ய வேண்டியது நாமே .. செயல் புரிய வேண்டியது நாமே .. ஆனால் கருவியாகி , அவனது கார்யத்தின் கருவியாகி .. அவனுக்காக நிமித்தம் ஆகி கார்யங்களைச் செய்ய வேண்டும் .. நிமித்தம் ஆகி விடு என்றால் ஒன்றும் செய்யத் தேவை இல்லை என்பதல்ல அர்தம் .. முழுத் திறனுடன் முயற்சி செய்திட வேண்டியது நாமே .. மனஸை முழுவதும் ஈடுபடுத்தி முயற்சி செய்ய வேண்டியது நாமே .. திட்டம் அவனது .. யோஜனை அவனது என்ற த்ருட ஶ்ரத்தையுடன் முயற்சி செய்தல் .. ஃபலன் அவன் விருப்பம் போல் என்ற பூர்ண நம்பிக்கையுடன் முயற்சி .. நான் நிமித்தம் மாத்ரமே என்ற ஸங்கல்பத்துடன் முயற்சி ..
Comments
Post a Comment