ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 148
संवृत्तः सचेताः प्रकृतिम गतः ... (अध्याय ११ - श्लोक ५१)
ஸம்வ்ருத்தஹ ஸசேதாஹ ப்ரக்ருதிம் கதஹ ... (அத்யாயம் 11 - ஶ்லோகம் 51)
Samvruttah Sachetaah Prakrutim Gatah ... (Chapter 11 - Shlokam 51)
அர்தம் : நான் என்னுடைய விழிப்படைந்த மனஸை , ஸ்வபாவமான நிலையை , ஸஹஜ நிலையை அடைந்தேன் ..
"தங்களது ஸௌம்யமான மநுஷ்ய ரூபத்தைக் கண்டவுடன் , நான் என் ஸஹஜ நிலைக்குத் திரும்பினேன் .. ஸ்வபாவமான நிலைக்குத் திரும்பினேன்" என்கிறான் அர்ஜுனன் .. அர்ஜுனன் எங்கு சென்று இருந்தான் ?? எங்கிருந்து திரும்பினான் ??
அவன் எங்கும் செல்லவில்லை .. யுத்த க்ஷேத்ரத்தில் தான் இருந்தான் .. ஒரு அஸாதாரண சூழ்நிலையில் தன் மனஸின் நிலை அவனுக்குப் பழக்கம் இல்லாததாக , புதியதாக , அவன் இது வரை காணாத ஒன்றாக இருந்தது .. அதில் இருந்து மீண்டும் தனக்குப் பழக்கமான மன நிலைக்குத் திரும்பியதையே 'ஸஹஜ நிலைக்குத் திரும்பினேன்' என்கிறான் ..
ஸஹஜ நிலை என்பது அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் நம் மனநிலை .. ஸாதாரண சூழ்நிலையில் நிலவும் நம் மனநிலை .. அதையே நாம் ஸஹஜ நிலை என்கிறோம் .. அதுவே நமக்குப் பழக்கமான நம் ஸ்வந்த நிலை .. அதையே நம் ஸ்வபாவமாக நாம் கருதுகிறோம் .. நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம் .. ஆனால் , அது நம் ஸ்வபாவ நிலை இல்லை .. ஒரு அஸாதாரணச் சூழ்நிலையில் தான் நம் நிஜ ஸ்வபாவம் வெளிப்படுகிறது ..
"ஸாதாரணமாக நான் கோபப் படுவதில்லை .. ஶாந்த ஸ்வரூபியாக அறியப் படுகிறேன் .. ஆனால் , கடும் ஶோதனை வரும் போது சிடு சிடுவென்று மாறுகிறேன் .. என் நிஜ ஸ்வபாவம் வெளிப்படுகிறது" .. "ஸாதாரணமாக அவர் அனைவருக்கும் உதவி செய்வார் .. வாழ்வில் ப்ரஶ்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்திருப்பார் .. அதனால்தான் மறுத்து விட்டார்" .. "என் மனைவி அகிலா பயந்தவளாகக் காணப் பட்டாள் .. பயந்த ஸ்வபாவம் என்று என்னை நினைக்க வைத்தது .. ஆனால் , கடுமையான ஶரீர உபாதை வந்த போது , மிகக் கடுமையான வலியையும் வேதனையையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டாள் .. அழுகை இல்லை .. சிடுசிடுப்பு இல்லை .. பயம் இல்லை .. வெகு ஆஶ்சர்யம் .. நேர்மாறாக , ஒரு ப்ரபல ஆன்மீக ப்ரஸங்கி , துறவி , மனஸின் ஸமநிலைப் பற்றி பேசுபவர் .. கிட்னீ கெட்டது , இனி டயாலிஸிஸ் தான் என்று மருத்துவர் அறிவித்த போது தேம்பித் தேம்பி அழுதார்".
ஸஹஜ , அன்றாட மன நிலை வேறு . ஸ்வபாவம் வேறு . அஸாதாரண சூழ்நிலையில் நம் ஸ்வபாவம் வெடித்துக் கிளம்பும் .. "அவரா இவர் !!" என்று பிறரை ஆஶ்சர்யப் பட வைக்கும் .. "நான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் ?" என்று நம்மையே திகைக்க வைக்கும் ..
அர்ஜுனன் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறான் .. ஸசேதஸ் அதாவது விழிப்பான மனஸினை அடைந்தேன் என்கிறான் .. மனஸில் பயம் , கவலை , படபடப்பு , ஶோகம் , கோபம் ஆகிய பாவனைகள் ஓங்கும் போது மனஸின் விழிப்பு நிலை தடுமாறுகிறது .. விழிப்பு நிலையில் நாம் நடந்து கொள்ளும் விதமும் விழிப்பு நிலை மாறிய போது நாம் நடந்து கொள்ளும் விதமும் ஒன்றாக இருப்பதில்லை .. மனஸின் விழிப்பு நிலை மாறாது இருந்திட , ஆழ்ந்த க்ஞானம் வேண்டும் .. ஶ்ரத்தை , அஸைக்க முடியாத ஶ்ரத்தை வேண்டும் .. த்ருட மனஸ் வேண்டும் .. நேர்மை வேண்டும் .. வைராக்யம் வேண்டும் .. தன்னைத் தானே படித்திடும் பயிற்சி வேண்டும் ..அதாவது ஸ்வாத்யாயம் வேண்டும் .. தரையில் கிடைக்கும் ஒரு அடி அகலப் பலகையின் மேல் நடப்பது மிக ஸுலபம் .. மூன்று மாடிக் கட்டிடங்கள் ரெண்டை இணைத்துப் போடப் பட்டிருக்கும் பலகையின் மேல் நடந்திட தேவைப்படும் மனஸே விழிப்பான மனஸ் , அதிக விழிப்பான மனஸ் ..

Comments
Post a Comment