ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 149
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया शक्य दृष्टवान असि माम् । (अध्याय ११ - श्लोक ५३)
நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ஶக்ய த்ருஷ்டவான் அஸி மாம் .. (அத்யாயம் 11 - ஶ்லோகம் 53)
Naaham Vedairna Tapasaa Na Daanena Na Chejyayaa Shakya Drushtavaan Asi Maam .. (Chapter 11 - Shlokam 53)
அர்தம் : என்னை வேதங்கள் மூலமோ , தபஸ் அல்லது தானம் மூலமோ , யக்ஞங்கள் மூலமோ காண முடியாது ..
"படிப்பெல்லாம் வீண் .." என்கிறான் படிக்காமல் சோம்பித் திரியும் ஒருவன் .. பள்ளிப் படிப்பு , கல்லூரிப் படிப்பு , மேல் படிப்பு , ரெண்டு PhD . வாங்கிய ஒருவர் , "புஸ்தகப் படிப்பு ஓரளவிற்குத் தான் .. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள இது உதவாது." என்கிறார் .. இதைக் கேட்ட உடனே முதலாமவன் , "நான் அதைத்தான் சொன்னேன்" என்று கொக்கரிக்கிறான் .. ரெண்டு நபர்கள் சொல்வதும் ஒன்றா ? இவர் புஸ்தகங்கள் மத்தியில் வாழ்க்கையைக் கழித்தவர் .. அவன் புஸ்தகத்தை கையால் தொடாதவன் .. இவர் ஆழமாகப் படித்தவர் .. அவரது உயர்ப் படிப்பின் காரணமாக அவருக்கு மர்யாதையோ பாராட்டோ கிடைக்கும் போது , "படிப்பு மாத்ரம் போதாது" என்கிறார் .. அநுபவம் மற்றும் சிந்தனையின் விளைவாக பிறந்த வார்தைகள் அவை ..இவனோ சோம்பல் மற்றும் அலக்ஷ்யத்தின் விளைவாகப் படிக்கவில்லை .. இது சுட்டிக் காட்டப் படும் போது , குற்ற உணர்வு , தாழ்வு மனப்பான்மை காரணமாக இவ்வாறு பேசுகிறான் .. அநுபவம் இல்லாததைப் பற்றி அறியாமையில் பிறந்த வார்தைகள் இவனுடையவை .. ரெண்டும் ஒன்றாகாது ..
"கல்லின் மேல் பாலைக் கொட்டுவதும் புஷ்பங்களைப் போடுவதும் வீண் .. கோவிலுக்குச் செல்வதே வீண் .. இல்லாத ஒருவனுக்காக பூஜை என்ற பெயரில் மணிக் கணக்காக நேரம் செலவழிப்பது வீண் ." என்கிறான் த்ராவிடக் கழகத்தில் உள்ள ஒருவன் .. காளி பூஜையில் வாழ்க்கையைக் கழித்த ஸ்ரீ ராமக்ருஷ்ண பரம ஹம்ஸ நிர்விகல்ப ஸமாதியின் அநுபவம் வேண்டுகிறார் .. ,பூரணமான ப்ரஹ்ம க்ஞானத்திற்கு விக்ரஹ ஆராதனை மாத்ரம் போதாது என்பதை உணர்த்துகிறார் .. ரெண்டும் ஒன்றா ? இவன் மற்றவர்களின் வார்தைகளை வாந்தி எடுப்பவன் .. ஸ்வந்த அநுபவம் எதுவும் இல்லாமல் , பொறாமை , வெறுப்பு , தாழ்வு மனப்பான்மை அடிப்படையில் பேசுபவன் .. ஸ்ரீ ராமக்ருஷ்ண பரம ஹம்ஸரோ அதில் ஆழ்ந்து விட்டு , இதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்ததால் அந்த மற்றொன்றைத் தேடினார் .. ரெண்டு பேர் கூற்றும் ஸமமாகாது ..
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது வேதங்களுக்கு எதிரான , யக்ஞ தானங்களுக்கு எதிரான வார்தைகள் இல்லை . வேதங்களின் பகுதியான உபநிஷதங்களும் இதே விஷயத்தைச் சொல்லி உள்ளன . பரமாத்மனை அறிவதற்கு இவை போதா என்பதுதான் தாத்பர்யம் .. பரமாத்மனை அறிவது எங்ஙனம் ?? அடுத்த சொற்றொடரில் ..

Comments
Post a Comment