ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 150
भक्त्या तु अनन्यया शक्य । (अध्याय ११ - श्लोक ५४)
பக்த்யா து அநந்யயா ஶக்ய .. (அத்யாயம் 11 - ஶ்லோகம் 54)
Bhaktyaa Tu Ananyayaa Shakya .. (Chapter 11 - Shlokam 54)
அர்தம் : அனந்ய பக்தி மூலம் மாத்ரமே என்னைக் காணலாம் ..
அந்ய - அனந்ய .. அன்ய என்றால் மற்ற .. வேறு .. அனந்ய என்றால் மற்றது எதுவும் இல்லாமல் .. வேறு எதுவும் இல்லாது .. இது ஒன்று தான் , இவன் ஒருவன் தான் ..
பக்திக்கு அவரவர் ஒரு லக்ஷணம் வைத்து இருக்கிறோம் .. நெற்றியில் சின்னங்கள் தரித்துக் கொள்வது .. கழுத்தில் மாலைகள் அணிந்து கொள்வது .. நித்ய பூஜை செய்வது .. ஆலயத்திற்குச் செல்வது .. தீர்த யாத்ரை செல்வது .. ஸமய , ஸம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்கு எடுப்பது .. ஆன்மீக தெய்வ ஸம்பந்தமான புஸ்தகங்களைப் படிப்பது .. ஆன்மீக ப்ர்வசனங்களைக் கேட்பது .. நாம் ஸ்வயமாக பக்தியின் லக்ஷணங்களை நிர்ணயிக்கிறோம் .. அதன் அடிப்படையில் நம்மை நாமே பக்திமான் என்று கருதிக் கொள்கிறோம் .. தோஸையில் ஸாதா - ஸ்பெஷல் என்பது போல பக்தியிலும் ஸாதா , உயர்ந்த பக்தி , மிக மிக உயர்ந்த பக்தி என்றும் பக்தனையும் ஸாதா , சிறந்த பக்தன் , மிகச் சிறந்த பக்தன் என்று ஸ்தரம் பிரித்துக் கொள்கிறோம் .. நெற்றியில் சிறிதாக சின்னம் இருந்தால் ஸாதா பக்தன் .. நெற்றி நிறைய .. ஶரீரம் முழுவதும் சின்னங்கள் தரித்தால் மிகச் சிறந்த பக்தன் .. சிறிது நேரம் பூஜை செய்பவன் ஸாதா பக்தன் .. மணிக்கணக்காக செய்பவன் மிகச் சிறந்த பக்தன் ..
ஸ்ரீ க்ருஷ்ணன் பக்திக்கான ஒரே லக்ஷணம் சொல்கிறான் .. கீதையில் அடிக்கடி சொல்கிறான் .. அனந்ய பக்தி .. அன்ய அல்லாத பக்தி .. வேறெதுவும் இல்லாத பக்தி .. நாம் தெய்வத்திடம் ஶரண் அடைந்து விட்டதாகச் சொல்வோம் .. அரஸியல்வாதியிடம் கார்யத்தை முடித்துக் கொடுக்கக் கெஞ்ஜுவோம் .. தெய்வ ஸந்நிதியில் , "எல்லாம் உன் இஷ்டம்" என்போம் .. வெளியே வந்து நம் இஷ்டப் படி நடக்க வேண்டும் என்று ஜ்யோதிஷக் காரனை ஸந்திப்போம் .. அவன் கூறும் பரிஹாரங்களைச் செய்வோம் .. ஓம் ஸத்ய ஸ்வரூபாய நமஹ என்று அர்சிப்போம் .. தொழிலில் தவிர்க்க முடியாது என்று பொய் பித்தலாட்டம் செய்வோம் .. 'பாலயமாம்' "என்னை ரக்ஷிப்பாய்" என்று பஜனை பாடுவோம் .. இன்ஷ்யூரன்ஸ் , மெடிக்ளெய்ம் , ஃபுல் பாடி செக் அப் .. என்று ஓடுவோம் .. "நீயே கதி ஈஶ்வரீ" என்போம் .. எதற்கும் இருக்கட்டும் என்று ராஹு கால பூஜையும் , நவக்ரஹ பூஜையும் செய்து வைப்போம் .. ஸ்ரீ க்ருஷ்ணன் கூறும் பக்திக்கான ஒரே லக்ஷணம் அனந்ய பாவம் .. வேறெதுவும் இல்லாத பக்தி ..

Comments
Post a Comment