ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 151
तेषां के योग वित्तमाः ? ... (अध्याय १२ - श्लोक १)
தேஷாம் கே யோகவித்தமாஹ ... ? (அத்யாயம் 12 - ஶ்லோகம் 1)
Teshaam Ke YogaVithTamaah ... ? (Chapter 12 - Shloka 1)
அர்தம் : ரெண்டு வகை உபாஸகர்களில் எவர் ஶ்ரேஷ்டமானவர் .. ?
அர்ஜுனனின் கேள்வி இது ,, எவர் ஶ்ரேஷ்டமானவர் ? எவர் உயர்ந்தவர் ? மநுஷ்யனின் பொதுவான ஸ்வபாவம் இது .. ஒப்பிட்டுப் பார்ப்பது .. மார்க் கொடுத்து ஸ்தரம் பிரிப்பது .. ஶ்ரேஷ்டமானது , உயர்ந்தது என்று கருதப் படுவது தன் உடைமை ஆக வேண்டும் என்று காமம் கொள்வது ... தன்னிடம் இருந்தால் பெருமிதம் கொள்வது .. இது ஒரு ஸாமான்ய மநுஷ்யனின் ஸ்வபாவம் .. அர்ஜுனன் ஒரு ஸாமான்ய மநுஷ்யன் அல்லவா ? ஒப்பிட்டு எது ஶ்ரேஷ்டமானது என்ற நிர்ணயத்தை ஸ்ரீ க்ருஷ்ணனிடம் விடுகிறான் ..
ரெண்டு வகை உபாஸகர்களில் எவர் ஶ்ரேஷ்டமானவர் என்பது அர்ஜுனனின் கேள்வி .. நிர்குண , நிராகார பரப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் . ஸகுண ஸாகார ஸ்ரீ க்ருஷ்ணனை உபாஸிப்பவன் .. இவர்கள் இருவரில் எவர் ஶ்ரேஷ்டமானவர் என்று அறிய விரும்புகிறான் .. இந்த்ரியங்களின் அநுபவங்கள் அல்லது அல்ப புத்தியின் வழிகாட்டுதல் ஆதாரத்தில் நிர்ணயம் செய்திடாமல் யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணனைக் கேட்கிறான் .. இது அர்ஜுனனின் பாக்யம் .. அவனது கேள்வியின் விளைவாக , பக்தியைப் பற்றி ... பக்தனைப் பற்றி ஸ்ரீ க்ருஷ்ணனின் அழகான விளக்கம் பிறக்கிறது .. இது நாம் செய்த பாக்யம் ..
Comments
Post a Comment