ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 154
सर्वत्र समबुद्धयः ... (अध्याय १२ - श्लोक ४)
ஸர்வத்ர ஸம புத்தயஹ ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4)
Sarvatra Sama Buddhayah ... (Chapter 12 - Shlokam 4)
அர்தம் : எங்கும் ஸம புத்தியுடன் ...
ஸர்வத்ர ஸம புத்தயஹ ... ஸர்வ இடங்களிலும் , அனைத்து சூழ்நிலைகளிலும் , அனைத்து அநுபவங்களிலும் , அனைத்து மநுஷ்யர்களிடமும் ஸம புத்தி .. நிர்குண நிராகார உபாஸனைக்கு , பரப்ரஹ்ம பரமாத்மாவின் உபாஸனைக்கு இதுவும் ஒரு precondition ..
இவ்விஷயம் ரெண்டாம் அத்யாயத்தில் ஸ்தித ப்ரக்ஞ என்ற பெயரில் சர்சை செய்யப் பட்டது .. ஆறாவது அத்யாயத்தில் மீண்டும் சர்சைக்கு வந்தது .. இங்கு மீண்டும் வந்திருக்கிறது .. ஸந்தர்பங்கள் வெவ்வேறு என்றாலும் விஷயம் ஒன்றுதான் .. கீதை ஒரு உரையாடல் இத்தகைய புனராவ்ருத்தி (ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உரைக்கப் படுதல் , சர்சை செய்யப் படுதல்) எதிர்பாராதது அல்ல ..
எல்லாவற்றையும் ஸமமாக எடுத்துக் கொள்ளுதல் .. தன் வீட்டில் , ஸ்வந்த க்ராமத்தில் , நகரத்தில் , தலைநகரத்தில் , வெளி தேஶத்தில் , விமானத்தில் , மாட்டு வண்டியில் , மேடையில் , கூட்டத்தில் , கேமரா முன்னால் என்று அனைத்து இடங்களிலும் ஸம புத்தி .. வரவேற்பிலும் , எதிர்ப்பிலும் , ஏளனம் செய்யப் படும் போதும் , அலக்ஷ்யம் செய்யப் படும் போதும் , கண்டு கொள்ள யாரும் இல்லாத போதும் , கடும் வெய்யிலிலும் , கடும் குளிரிலும் , கொஸுக்களுக்கு மத்தியிலும் , AC அறையிலும் , வறட்சியிலும் வளமையிலும் மற்ற சூழ்நிலைகளிலும் ஸம புத்தி ... வெற்றி தோல்வி , மான அபமானம் , லாப நஷ்டம் , ஸுக து:கம் , நோய் ஆரோக்யம் , ஏற்பு நிராகரிப்பு .. என்ற அனைத்துச் அநுபவங்களிலும் ஸம புத்தி ... அன்பு கொண்டவன் , வெறுப்பவன் , ஆதரிப்பவன் , எதிர்ப்பவன் , தடங்கல் செய்பவன் , உதவி செய்பவன் , சொல்வதைக் கேட்பவன் , அலக்ஷ்யப் படுத்துபவன் , கண்டு கொள்ளாமல் இருப்பவன் , ஸாது , மர்யாதைக்கு உரியவன் , பாபி , ஸாமான்யன் , ப்ரபலமானவன் , பெண் , அழகான பெண் , அழகற்ற பெண் என்று அனைத்து மநுஷ்யர்களிடமும் ஸம புத்தி ...
ஒரே போல நடந்து கொள்வது , ஒரே போன்று respond செய்வது , மனஸ் தடுமாறாமல் இருப்பது , உள்ளே பாதிக்கப் படாமல் இருப்பது ஸம புத்தி .. மேலே பட்டியல் இடைப்பட்ட இடங்களும் சூழ்நிலைகளும் அநுபவங்களும் மநுஷ்யர்களும் பொதுவாக நம்முள் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை ..
ஸர்வத்ர ஸம புத்தி என்பது ஜட நிலையா ? புற அடையாளங்களை வைத்துப் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான் .. ஆனால் ஜட நிலை இயற்கை நிலை .. தடுமாறும் ஆற்றல் கிடையாது .. உணர்வற்ற நிலை .. ஸம புத்தி தடுமாறும் ஆற்றல் இருந்தும் தடுமாறாமல் இருப்பது .. உணர்ந்திடும் ஆற்றல் இருந்தும் உணராமல் இருப்பது ..
இந்நிலைக்குத் தடையாக இருப்பது மனஸும் அஹங்காரமும் .. மனஸ் அநுபவிக்கிறது .. மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது .. அநுகூலம் ப்ரதிகூலம் என்று பிரிக்கிறது .. விரும்புகிறது .. வெறுக்கிறது .. மனோநாஶம் என்ற நிலை , அதாவது மனஸ் இல்லாமல் போனால் ஸர்வத்ர ஸம புத்தி ஏற்பட வாய்ப்பு உண்டு ..
அஹங்காரம் என்ற நான் நிமிர்ந்து நிற்கிறது .. ஸ்வ 'நானை' வேறாகப் பார்க்கிறது .. விஶேஷமாகக் கருதுகிறது .. அஹங்காரம் கரைந்து போனால் , அஹங்காரம் ஸமர்பணம் ஆனால் ஸர்வத்ர ஸம புத்தி ஏற்பட வாய்ப்பு உண்டு ..
சில ஜீவன்களுக்கு ஸர்வத்ர ஸம புத்தி ஸஹஜமாக அமைந்து விடுகிறது .. ஜன்மத்தில் உடன் வருகிறது .. ஜட பரதன் , ஶுக முனி , ஸ்ரீ ரமண மஹர்ஷீ போன்றோர் யுகங்களில் உதிக்கின்றனர் .. இது முயற்சி செய்து , பயிற்சி செய்து அடையக் கூடிய நிலை இல்லை .. அதனால்தான் ஸ்ரீ க்ருஷ்ணன் நிர்குண நிராகாரத்தின் உபாஸனை மிகவும் க்லிஷ்டமானது என்கிறார் ..
Comments
Post a Comment