ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 155
सर्व भूत हिते ... (अध्याय १२ - श्लोक ४)
ஸர்வ பூத ஹிதே ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4)
Sarva Bhoota Hite ... (Chapter 12 - Shloka 4)
அர்தம் : அனைத்து ஜீவன்களின் நன்மைக்காக ...
அனைத்து ஜீவன்களின் நன்மை விழைதல் .. அனைத்து உயிர்களின் நலன் நாடுதல் .. அனைத்திலும் ப்ரஹ்மத்தைக் கண்டிடும் உபாஸகனுக்கு அவஶயமான குணாம்ஶமாக இதைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் .. அனைத்திலும் ப்ரஹ்மன் உறைகிறார் ... அஹம் ப்ரஹ்மாஸ்மி .. நான் ப்ரஹ்மம் .. தத் த்வம் அஸி .. நீ ப்ரஹ்மமே .. என்பதை உணர்ந்த ப்ரஹ்ம க்ஞானீ மற்றும் உணர முயன்றிடும் ப்ரஹ்ம உபாஸகன் அனைத்து ஜீவன்களின் ஹிதம் நாடுபவனாகவே , நலன் விரும்புபவனாகவே இருக்க முடியும் .. தன்னை வேறாகக் கருதுபவனே அன்ய ஜீவன்களுக்கு அஹிதம் விழைவான் .. மற்ற உயிர்களைத் துன்புறுத்துவான் ...
ஹிதத்தின் மறு ரூபம் அன்பு .. ஸுகம் என்ற பதத்திற்கு து:கம் என்ற எதிர்ப்பதம் உண்டு .. மகிழ்ச்சி என்ற பதத்திற்கு துயரம் என்ற எதிர்ப்பதம் உண்டு .. ஆனந்தம் என்ற பதத்திற்கு எதிர்ப்பதம் கிடையாது .. மற்ற நிலைகளை அடையலாம் .. அந்நிலைகளில் இருந்து விலகலாம் .. ஆனந்தம் பரமனின் தன்மை .. நம் ஆதார நிலை .. அந்நிலையை நாம் மறக்கலாம் .. ஆனால் , அந்நிலையில் இருந்து விலக முடியாது .. அதே போல அன்பும் ஆதாரமான ஒரு ஸ்வபாவம் .. ஒரு செயல் இல்லை .. அதற்கு எதிர்ப்பதம் கிடையாது .. அன்பு செலுத்துவது என்று பேச்சு வழக்கில் சொன்னாலும் அது இயலாத ஒன்று .. அன்பு வெளிப்படும் .. அன்பைச் செலுத்த முடியாது . (வெறுப்பு அன்பின் எதிர்ப்பதம் அல்லவா என்று நீங்கள் கேட்கலாம் .. வெறுப்பு விருப்பின் எதிர்ப்பதம் .. நாம் செயற்கையாக ஒன்றுடன் ஒட்டுதல் , ஒன்றுடன் நம்மைப் பிணைத்துக் கொள்ளுதல் விரும்புதல் ஆகும் ..)
ஒரு நபர் மீதோ ஒரு வஸ்து மீதோ ஒரு இடத்தின் மீதோ விஶேஷமான விருப்பம் ராகம் , பந்தம் அல்லது பிணைப்பு ஆகி விடும் .. அன்பாகாது .. அருகில் பக்கத்து அகத்துக் குழந்தை இருக்கும் போது தன் குழந்தைக்கு மாத்ரம் ஊட்டி விடுவது , தன் புருஷன் தனக்கு மாத்ரமே ஸ்வந்தம் என்று கருதி அவருடைய தாய் மற்றும் ஸஹோதரிகள் மீது பொறாமை கொண்டு சண்டை போடுதல் , தான் வளர்க்கும் நாயை சங்கிலியால் கட்டி அழைத்துச் செல்லும் போது மற்ற தெரு நாயை கல்லால் அடித்து விரட்டுதல் , தன் வீட்டு வாஸலை பெரும் உழைப்புடன் பெருக்கி ஶுத்தம் செய்து , குப்பையை தெருவிலோ அடுத்த அகத்து வாஸலிலோ கொட்டுதல் .. இவை எல்லாம் இத்தகைய பிணைப்பின் வெளிப்பாடு .. இத்தகைய 'அன்பு' செயற்கையானது .. பொய்யானது .. கீழானது .. நம்மையும் தாழ்த்தி வீழ்த்தக் கூடியது ..
ஒரு புஷ்பத்தின் வாஸம் போன்றது அன்பு .. புஷ்பம் தன்னுள் வாஸத்தை நிறைத்து வைத்துள்ளது .. இல்லை .. அவ்வாறு சொல்வதும் தவறு .. வாஸம் தான் புஷ்பம் .. புஷ்பத்தின் ஸஹஜ நிலை வாஸனை .. அது ஸ்வயமாக வெளிப்படுகிறது .. வேறுபாடு எதுவும் இல்லாமல் அருகில் வரும் அனைவருக்கும் வாஸனையின் ஆனந்தம் கிடைக்கிறது .. அன்பும் அதே போலத்தான் .. அது ஸஹஜ ஸ்வபாவமாக உள்ளே நிறைந்திருக்கும் .. தன்னால் வெளிப்படும் .. அருகில் வரும் அனைவரையும் ஸ்பர்ஶித்து , ஆனந்தம் அளித்திடும் .. இத்தகைய மனஸ் கொண்டவன் அனைத்து ஜீவன்களின் ஹிதேஷியாக , நலன் விரும்பியாக இருப்பார் என்பதில் என்ன ஸந்தேஹம் ??
உலக வாழ்க்கையில் இந்நிலை மிகவும் கடினமானது என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Comments
Post a Comment