ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 156
क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम् ... (अध्याय १२ - श्लोक ५)
Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam ... (Chapter 12 - Shlokam 5)
க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5)
அர்தம் : அவ்யக்த நிராகார பரப்ரஹ்ம பரமாத்மன் மீது பற்று கொண்டு , உபாஸனை செய்து , அவனை அடைவது மிகக் கஷ்டம் ...
மிகக் கடினம் .. என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஏற்கெனவே நாம் இவ்விஷயத்தை சர்சை செய்திருக்கிறோம் .. நாம் பூ லோக வாழ்க்கையில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களுடன் இருப்பவர்கள் .. வெளிப்பட்டதையே நம்மால் அறிய முடியும் .. நம் கண்கள் ரூபங்களைப் பார்த்து அறிந்திடும் .. காதுகள் ஶப்தங்களைக் கேட்டு அறிந்திடும் .. நாஸி கந்தங்களையும் நாக்கு ருசிகளையும் தோல் ஸ்பர்ஶத்தையும் அறிந்திடும் .. மனஸ் ஸூக்ஷ்மமான கல்பனைகளையும் பாவனைகளையும் அறிந்திடும் என்பது ஸத்யம் .. ஆனால் , அவையும் வெளிப்பட்டவையே , ஸ்தூலமாக அல்லாமல் ஸூக்ஷ்மமாக .. புத்தியும் ஸூக்ஷ்மமான சிந்தனைகளை அறிந்திடும் .. அவையும் வெளிப்பட்டவையே .. கல்பனைகளும் சிந்தனைகளும் உலகத்தில் இருப்பவற்றைப் பற்றியே .. இந்த்ரியங்கள் மூலம் அநுபவித்தவற்றைப் பற்றியே .. இவ்வனைத்திலும் புற உலகத்துடன் இணைப்பு அவஶ்யம் ..
பரமனோ எவ்வகையிலும் வெளிப்படாதவர் ஆனால் அனைத்திலும் உறைபவர் .. அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் , ஆனால் , விலகி இருப்பவர் .. உலகத்தின் அணு அணுவில் இருப்பவர் ஆனால் எதுவும் இல்லாத நிலையிலும் இருப்பவர் .. அவரை கல்பனை செய்து ப்ரயோஜனம் இல்லை .. அவரைப் பற்றி சிந்தனை செய்தும் ப்ரயோஜனம் இல்லை .. அவரை , அதை உணர வேண்டும் .. அறிய வேண்டும் .. உலக பந்தம் இல்லாமல் நம் உள்ளே நோக்கி அறிந்திட வேண்டும் .. அதற்கான கருவி நம்மிடம் இல்லை .. உலகத்தில் வாழ்ந்து கொண்டு , உலகத்துடன் பந்தத்தைத் துண்டித்துக் கொள்வதே மிகக் கஷ்டம் .. அதனால் தான் நிர்குண நிராகார பரப்ரஹ்மத்தை உபாஸனை செய்து , அவனை அறிவது , அவனை அடைவது மிகக் கஷ்டம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
அதனால் ஸகுண ஸாகார உபாஸனை ஸுலபம் என்று சொல்லவில்லை .. விக்ரஹ உபாஸனை உயர்ந்தது என்றும் சொல்லவில்லை .. அதிலும் பல இடர்கள் உண்டு .. இந்த்ரியங்களின் அநுபவத்திலேயே தேங்கி விடும் வாய்ப்பு உண்டு .. விக்ரஹத்தை உபாஸிக்கிறேன் என்ற பாவனை மாறி , பரமனை உபாஸிக்கிறேன் என்ற பாவனை ஏற்படுவதே மிகக் கடினம் .. அந்த மார்கமும் கஷ்டமானது தான் .. நிர்குண நிராகாரத்தின் உபாஸனையுடன் ஒப்பிடும் போது கொஞ்ஜம் ஸுலபமானது .. அல்லது கொஞ்ஜம் குறைவான கஷ்டங்கள் கொண்டது என்று கூறலாம் ..

Comments
Post a Comment