ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 158
सर्वकर्मफलत्यागं ततः कुरु ... (अध्याय १२ - श्लोक ११)
ஸர்வ கர்ம ஃபல த்யாகம் குரு ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 11)
SarvaKarmaPhala Tyaagam tatah Kuru ... (Chapter 12 - Shlokam 11)
அர்தம் : கர்மங்களின் ஃபலன்களை த்யாகம் செய்து விடு ...
ஸகுண உபாஸனையில் ஸ்ரீ க்ருஷ்ணன் அருளும் ஒரு யோஜனை இது .. கர்மங்களை எனக்காகச் செய்திடு என்றான் .. அது இயலவில்லை என்றால் கர்ம ஃபலன்களை எனக்கு அர்பித்து விடு .. அதாவது த்யாகம் செய்து விடு என்கிறான் ..
ஃபலன் தான் கர்மத்தின் காரணம் .. ஃபலன் தான் கர்மத்தைத் தூண்டக் கூடிய உந்து ஶக்தி .. ஃபலன் கிடைக்காது என்பது நிஶ்சயம் ஆனால் , கர்மமே நடந்திடாது .. இதுதான் நம்மைச் சுற்றி நாம் பெரும்பாலும் காணும் காக்ஷி ..
ஃபலனை த்யாகம் செய்து விடு எனும் போது , ஃபலனை எடுத்துக் கொள்ளாதே என்றோ ஃபலனை நிராகரித்து விடு என்றோ அர்தம் ஆகாது .. ஃபலன் மீது பற்று வைத்து நாடாதே என்று அர்தம் .. கர்மத்தைச் செய்ததால் ஃபலன் மீது எனக்கே அதிகாரம் என்று கருதிடாதே என்று அர்தம் .. கர்ம ஃபலன்கள் மீது எனக்கு அதிகாரம் உண்டு என்று கருதியவுடன் நான் வந்து விடுகிறது .. பக்தியும் அஹங்காரமும் எதிர்மறையானவை .. பக்தியின் ஆதாரம் ஸமர்பணம் .. ஸமர்பணத்தில் அஹங்காரத்தின் ஸமர்பணமே மிகக் கடினமானது .. ஆனால் , இன்றியமையாதது ..

Comments
Post a Comment