ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 159
त्यागच्छान्तिरनन्तरम् ... (अध्याय १२ - श्लोक १२)
த்யாகாத் ஶாந்திரனந்தரம் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 12)
Tyaagacchaanthiranantharam ... (Chapter 12 - Shlokam 12)
அர்தம் : த்யாகத்தில் இருந்து பரம ஶாந்தி பிறந்திடும் ...
போகத்தில் ஸுகம் பிறந்திடும் .. த்யாகத்தில் ஶாந்தி பிறந்திடும் .. ஸுகம் .. க்ஷண நேர ஸுகம் அநுபவிக்கலாம் போகத்தில் .. தத்க்ஷண ஸுகம் , போகத்தை அநுபவிக்கும் அந்த க்ஷணத்தில் ஸுகம் தோன்றிடும் .. ஸுகம் ஒரு அநுபவம் .. ஶாந்தி ஒரு நிலை .. மன நிலை .. நிலைத்திடும் .. கால ப்ரவாஹத்தில் தன்மையாக , ஸ்வபாவமாக மாறிடும் ..
போகத்தில் ஸுகம் இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பும் , அதை அநுபவிக்க வேண்டும் என்ற விருப்பமும் தான் இந்த க்ஷண நேர ஸுகத்திற்கும் காரணம் .. ஸுகத்துடன் சேர்ந்து மனஸில் பரபரப்பும் பிறந்திடும் .. போகத்தை அநுபவிக்க முடியவில்லை என்றாலோ அதிலிருந்து எதிர்ப்பார்த்த ஸுகம் கிடைக்கவில்லை என்றாலோ ஏமாற்றமும் பிறந்திடும் .. எதிர்ப்பார்ப்பு இல்லாததால் , விருப்பம் இல்லாததால் , பரபரப்பும் கிடையாது .. ஏமாற்றமும் கிடையாது .. ஶாந்திக்கு அடித்தளம் இதுவே .. அத்துடன் விட்டுக் கொடுப்பதாலும் , மற்றவர்க்குக் கிடைத்திட முயல்வதாலும் , மற்றவர் அநுபவிப்பதைக் காண்பதால் கிடைத்திடும் ஆனந்தமும் இணைந்து விடுவதால் மனஸில் நிலைத்த ஶாந்தி பிறக்கிறது ..
ரயிலில் ஜன்னல் அருகில் அமர்ந்து ப்ரயாணம் செய்வது ஸுகமாக இருக்கிறது .. விவாஹம் செய்து கொண்டு மனைவியுடன் ப்ரயாணம் செய்யும் போது , ஜன்னல் அருகில் உள்ள இருக்கையின் மீது கொண்ட பற்றினை விட்டு விட்டால் , மனைவி அந்த ஸுகத்தை அநுபவிப்பதைக் காண்பதில் மனஸ் ஆனந்தம் அடைகிறது .. குழந்தைப் பிறந்த பின்னர் , குழந்தைக்காக ஸ்வந்த விருப்பம் காணாமல் போகும் போது மனஸில் பிறந்திடும் ஶாந்தி அலாதியானது ..
மெதுவாக அனைத்து விஷயங்களிலும் இதே மன நிலை ஏற்படும் போது ... எதிர்ப்பார்ப்பும் விருப்பமும் மறைந்து விட்டால் , மனஸில் நிரந்தர ஶாந்தி பிறந்திடும் .. எடுப்பதில் ஸுகம் என்றால் கொடுப்பதில் ஆனந்தம் .. கொடுக்கிறேன் என்ற உணர்வும் இல்லாமல் , த்யாகம் செய்கிறேன் என்ற பாவனையும் இல்லாது .. எதிர்பார்ப்பினை தொலைத்து விட்டால் , விருப்பத்தை விட்டு ஒழித்தால் .. ஶாந்தி .. நிரந்தர ஶாந்தி பிறந்திடும் .. ஶாந்தியே ஸ்வபாவம் ஆகி விடும் ...
Comments
Post a Comment