ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 160
निर्ममो निरहङ्कारः ... (अध्याय १२ - श्लोक १३)
நிர்மமோ நிரஹங்காரஹ ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 13)
Nirmamo Nirahankaarah ... (Chapter 12 - Shlokam 13)
அர்தம் : நான் எனது என்ற பாவனை இல்லாதவன் ...
இது உலக வாழ்க்கையில் நடைமுறைக்கு வரவே முடியாத ஒரு யுடோபியன் கருத்தா ? ஒரு ஜீவனுக்கு ஶரீரம் இருப்பது போலவே அஹங்காரமும் .. இருக்கிறது .. நான் 'இருக்கிறேன் பரமாத்மாவின் ஸத் என்ற ஆதாரத் தன்மைக்கு ஸமமான ஒன்று ..
தேஹம் பஞ்சபூதங்களால் ஆனது .. ப்ரக்ருதியின் வெளிப்பாடு . மறுக்கப் பட முடியாத ஒன்று .. ஆனால் , தேஹத்தைப் பற்றிய ஆஸக்தியும் (பற்றுதல்) தேஹ அபிமானமும் தேஹ உணர்வும் தவிர்க்கப் பட வேண்டியவை .. அதே போல , அஹங்காரம் மறுக்கப் பட முடியாத ஒரு ஸத்யம் .. அஹங்கார உணர்வு தவிர்க்கப் பட வேண்டியது .. நான் அஸத்யமானவற்றுடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதால் ஏற்படும் பொய்யான "நான்" அபிமானங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை .. (தேஹமே நான் ; நான் புத்திஶாலி ; போன்று) இது ஸாமான்ய "நிரஹங்கார" நிலை ..
ஆனால் , பக்தியில் இது போதாது .. நம் உடன் வந்த நான் அல்லது அஹங்காரமும் இல்லாமல் போக வேண்டும் .. உணர்வற்றுப் போக வேண்டும் .. ஸமர்பணம் ஆக வேண்டும் .. உனக்காக வாழ்ந்து , 'நீ' மாத்ரம்தான் என்று வாழ்ந்து அதன் விளைவாக நான் மறந்து போக வேண்டும் .. நான் மறைந்து போக வேண்டும் .. நிரஹங்கார என்று பறையும் போது , இதுவே ஸ்ரீ க்ருஷ்ணனின் அபிப்ராயம் .. இத்தகையவனைத் தனது பரம பக்தன் , ப்ரிய பக்தன் என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
ஜீவன் ஶரீரம் , மனஸ் , புத்தி ஆகியவற்றுடன் உலகத்தில் பிறக்கிறது .. இவை உடன் வருபவை .. இங்கு வாழ்ந்திடும் போது , பணம் , பதவி , ஸொத்து , வீடு , வண்டி , மனைவி , மக்கள் என்று பலவற்றை சேகரிக்கிறான் மநுஷ்யன் .. இவை தவிர்க்க முடியாதவை .. குறைவாகவோ , அதிகமாகவோ ஸம்ஸார வாழ்க்கையில் இவை அவஶ்யமானவை .. இவை இல்லாமல் வாழ்வதல்ல நிர்மம .. இவற்றைத் தனது என்று கருதி , இவற்றை ஸ்வந்தம் கொண்டாடி , இவற்றின் மீது அதிகாரம் செலுத்துவதைத் தவிர்ப்பதே நிர்மம .. இதையும் பக்திக்கு லக்ஷணமாக , தன் ப்ரிய பக்தனின் அடையாளமாகக் கூறுகிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment