ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 161
सम दुःख सुख ... (अध्याय १२ - श्लोक १३)
ஸம து:க ஸுக ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 13)
Sama Du:kha Sukha ... (Chapter 12 - Shlokam 13)
அர்தம் : ஸுகத்திலும் து:கத்திலும் ஸமமாக இருப்பவன் ...
து:கத்திலும் ஸுகத்திலும் ஸமம் .. பக்தன் , பகவானுக்கு ப்ரிய பக்தனின் லக்ஷணம் இது .. ஸாமர்த்யம் மற்றும் பேராற்றலால் தான் ஸம்பாதித்தது ஸுகம் என்று கருதுகிறான் மநுஷ்யன் .. து:கமோ பகவான் கொடுத்த தண்டனை என்று கருதுகிறான் .. லாபம் தன் உழைப்பால் தானே ஸம்பாதித்தது என்று கருதும் மநுஷ்யன் நஷ்டம் ஏற்பட்டால் , "என்ன செய்வது ? எல்லாம் அவன் இஷ்டப்படி நடத்துகிறான் ," என்று புலம்புகிறான் .. அடி பட்டால் அம்மா என்று அலறுகிறான் .. கையில் இனிப்பு கிடைத்தால் நினைவில் யார் வருகிறார் ? அடுத்த க்ஷணம் வாயில் போட்டு விழுங்குகிறான் , "என் பாக்யம் .. இன்று எனக்கு இனிப்பு கிடைத்தது" என்று கூறிய படி .. ஆரோக்யமாக இருக்கும் வரை ஆட்டம் போடுகிறான் .. நோய் வந்தால் தன்னை ஒரு மஹாத்மா , புண்யாத்மா என்று நினைத்து , "பாபமற்ற எனக்கு , யாருக்கும் எந்த பாபமும் இழைக்காத எனக்கு இந்த நோயைக் கொடுத்து விட்டான் பாருங்கள் .. என்ன ஒரு கொடுமை ?" என்று பகவானை வஸை பாடுகிறான் ..
து:கம் , ஸுகம் ரெண்டு நிலைகளிலும் ஸமமாக இருப்பது ; ரெண்டு அநுபவங்களிலும் பகவானை ஸ்மரித்த படி இருத்தல் ; ரெண்டையும் அவன் அருளிய ப்ரஸாதம் என்று கருதி ஏற்றுக் கொள்ளுதல் ; இவையே பக்தனின் லக்ஷணங்கள் .. ஒரு கல்பனைக் கதை .. ஸ்ரீ ராமன் ஸமுத்ரக் கரையில் அமர்ந்து , தனது அம்பறாவில் இருந்து ஒவ்வொரு அம்பாக எடுத்து மணலில் குத்தி நிறுத்தி வைக்கிறார் .. பின்னர் , ஒவ்வொரு அம்பாக மணலில் இருந்து எடுத்துத் துடைத்து மீண்டும் அம்பறாவில் வைக்கிறார் . ஒரு அம்பை எடுத்த போது அதன் முனையில் ஒரு தவளை ரக்தம் சொட்டச் சொட்ட , குத்தப் பட்டிருப்பதைக் கண்ட ஸ்ரீ ராமன் பதறிப் போகிறார் .. "அம்பு முனை உன்னை ஸ்பர்ஶித்த உடன் ஶப்தம் எழுப்பி இருக்கலாமே" என்றார் .. "ஏன் ஶப்தம் எழுப்ப வேண்டும் ? நான் பிறந்ததில் இருந்து ராம் ராம் என்று உன் நாமத்தைச் சொல்லி வந்திருக்கிறேன் .. எனக்கு வேளா வேளைக்கு புஷ்டியான போஜனம் நீ அருளி இருக்கிறாய் .. என் ஶரீரத்தைப் பார் .. நீ கொடுத்த போஜனத்தில் வளர்ந்தது இது .. அதே நீ ஒரு நாள் அம்பு முனை கொடுத்தால் , அதை நான் ஏன் மறுக்கணும் ?? நீ கொடுத்த போஜனத்தை ஏற்ற நான் நீ கொடுக்கும் அம்பு முனையை மாத்ரம் மறுக்க வேண்டுமா ?" என்று கேட்டது தவளை .. ஸுகம் மற்றும் து:கம் ரெண்டு நிலைகளிலும் ஸமம் ..
தயாராம் ஸிந்த் ப்ரதேஶத்தில் வாழ்ந்த உபன்யாஸகர் .. அவர் ஸாதுவாக மாறிய ஸம்பவம் மிக ருசியானது .. அவர் பணம் ஸம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பதற்காகவே உபந்யாஸம் செய்து வந்தார் .. பேசிய விஷயங்கள் மிக உயர்ந்த ஆன்மீக விஷயங்கள் என்றாலும் இவர் உணர்ந்து பேசவில்லை .. உதட்டளவில் தான் பேசினார் .. ஒரு முறை அவர் மூன்று நான்கு தின உபந்யாஸ நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றார் .. அந்த தினங்களில் அவரது மூன்று மகன்களும் அம்மை நோய் பாதிக்கப் பட்டு இறந்து போயினர் .. வீட்டிற்குத் திரும்பிய இவர் புதல்வர்களின் சடலங்களைக் கண்டவுடன் மூர்ச்சை அடைந்து விழுந்தார் .. மூர்ச்சைத் தெளிந்த பின் தலையைத் தரையில் மோதி மோதி அழுதார் .. மீண்டும் மூர்ச்சை , மீண்டும் அழகை .. அவர் மனைவி அவரிடம் , "குழந்தைகளை நமக்குக் கொடுத்தவன் அவனல்லவோ !! அவன் கொடுத்ததை , அவனுடையதை அவன் எடுத்துக் கொண்டான் .. இதில் ஶோகம் கொள்ள என்ன இருக்கிறது ?" மனைவியின் வார்தைகளைக் கேட்ட தத்க்ஷணம் இவரது ஆன்மீகப் பார்வைத் திறந்தது .. அந்த க்ஷணமே ஸாதுவாக மாறி விட்டார் .. இந்த விஷயம் இவருக்கு அறிமுகம் ஆனதே .. இவர் பல முறை ப்ரவசனங்களில் பேசியதே .. ஆனால் , இன்று மனைவியின் இவ்வார்தைகள் அவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .. ஸாதுவாகி விட்டார் .. து:கத்திலும் ஸுகத்திலும் ஸம நிலை ..

Comments
Post a Comment