ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 162
संतुष्ट ... (अध्याय १२ - श्लोक १४)
ஸந்துஷ்ட ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 14)
Santushta ... (Chapter 12 - Shlokam 14)
அர்தம் : பூர்ண த்ருப்தி கொண்டவன் .. மகிழ்ச்சியானவன் ..
துஷ்ட என்றால் த்ருப்தி அடைந்தவன் .. ஸந் என்றால் செம்மையாக , மிக நன்றாக .. ஸந்துஷ்ட என்றால் மிக நன்றாக , பூர்ணமாக த்ருப்தி அடைந்தவன் .. (இதைப் படித்து விட்டு "துஷ்ட என்றால் கொடுமையாளன் என்றல்லவா அர்தம்" , என்ற கேள்வி உங்கள் மனஸில் எழுகிறதல்லவா ... தமிழ் எழுத்துக்களில் உள்ள ப்ரஶ்னை இது ..) துஷ்ட என்ற வார்தையில் 'து'வை பந்து என்ற வார்தையில் வருவதைப் போல லேஸாக உச்சரித்தால் கொடுமையாளன் என்று அர்தம் ஆகும் .. 'து' வை பத்து என்ற வார்தையில் வருவதைப் போல உச்சரித்தால் துஷ்ட என்றால் த்ருப்தி என்று அர்தம் ஆகி விடும் .. ரெண்டு உச்சரிப்புகளுக்கும் வெவ்வேறு எழுத்துக்கள் இல்லாததால் இந்தக் குழப்பம் ..)
தோஷம் என்றால் த்ருப்தி .. ஸந்தோஷம் என்றால் முழுமையான த்ருப்தி .. ஸந்தோஷம் என்றால் மகிழ்ச்சியும் .. மனஸில் த்ருப்தி உதித்தால்தான் மகிழ்ச்சி தோன்றும் . மனஸில் பூர்ண த்ருப்தி இருந்தால் , மனஸை குறை கொஞ்ஜமும் இல்லாத முழு த்ருப்தி நிறைத்தால் , ஸந்தோஷமும் , துளியும் து:கம் கலப்படம் இல்லாத ஸந்தோஷம் கிடைத்திடும் .. லேஸான குறை இருந்தாலும் , அத்ருப்தி இருந்தாலும் ஸந்தோஷம் லபிக்காது .. து:கம் தான் தோன்றிடும் ..
குறை ஒன்றும் இல்லை என்று பாட்டு எழுதினார் ஸ்ரீ ராஜாஜி .. இது மிக உயர்வான மன நிலை .. மிகக் கடினமான மனநிலையும் .. மநுஷ்யன் பெரும்பாலும் குறை காணக் கூடியவன் .. குறைதான் முதலில் அவன் கண்ணில் படும் ..
ஒரு பக்தன் , பகவானுக்கு ப்ரியமான பக்தன் குறை ஏதும் இல்லாத த்ருப்தியை அநுபவிப்பவன் .. எது கிடைத்தாலும் , எவ்வளவு கிடைத்தாலும் , கிடைக்கா விட்டாலும் பரிபூர்ண த்ருப்தியே ... பரம ஸந்தோஷமே ..
Comments
Post a Comment