ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 164
हर्षामर्ष भयोद्वेगैर्मुक्तः । (अध्याय १२ - श्लोक १५)
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைஹ் முக்தஹ் ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 15)
HarshaamarshaBhayodhvegaih Muktah .. (Chapter 12 - Shlokam 15)
அர்தம் : எவன் மகிழ்ச்சி , பொறாமை , பயம் , உத்வேகம் இவற்றில் இருந்து விடுபட்டிருக்கிறானோ ...
உணர்ச்சி பொங்குதல் என்கிறோம் .. உணர்ச்சிகள் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது .. அமைதி மற்றும் ஸமநிலையே மனஸ் அடைய வேண்டிய நிலை .. இந்நிலையில்தான் சிந்தனை தடையின்றி தன் கார்யத்தைச் செய்யும் .. யோஜனை வழங்கும் தன் கார்யத்தை புத்தியும் ஸரியாகச் செய்திடும் ..
உணர்ச்சி வஶப் படுதல் என்கிறோம் .. ஸ்வயத்தின் வஶத்தில் இருக்க வேண்டிய நாம் உணர்ச்சிகளின் வஶப்பட்டு விடுகிறோம் .. உணர்ச்சிகள் நம்மை ஆட்டி வைக்கின்றன .. புத்தியின் ஆக்ஞைக்கு உட்பட்டு செயல்படும் போது உகந்த கர்மங்களைச் செய்வோம் .. உணர்ச்சிகளின் வஶப்பட்டுச் செயல்படும் போது , ஸரியான செயல்களையே செய்வோம் என்பது நிஶ்சயம் இல்லை ..
மகிழ்ச்சி என்பது ஹர்ஷ என்ற பதத்திற்கு ஸரியான அர்தம் ஆகாது .. மிகையான மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தல் , பரபரப்பு அடைதல் .. ஆங்க்லத்தில் 'euphoria' என்பார்களே , அதுவே ஹர்ஷ .. ஶோகத்தில் மூழ்கி விடுதல் அதற்கு எதிர்மறையான உணர்ச்சி நிலை .. அமர்ஷ என்ற வார்தை 'மற்றவரின் உயர்வைப் பொறுக்க முடியாத நிலை .. பயமும் ஒரு பரபரப்பான நிலை .. பயத்தின் வஶமான நிலையில் மநுஷ்யனுக்கு கண் , காது போன்ற அவனது இந்த்ரியங்களும் தம் கார்யங்களைச் செய்திட மறுத்திடும் ..
இத்தகைய உணர்ச்சி நிலைகளில் இருந்து விடுபட்டவனே எனது ப்ரிய பக்தன் என்கிறார் , ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment