ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 173
जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् ।। (अध्याय १३ - श्लोक ८)
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி து:க தோஷாநுதர்ஶனம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 8)
Janma Mrutyu Jaraa Vyaadhi Duhkha DoshaanuDarshanam .. (Chapter 13 - Shloka 8)
அர்தம் : ஜன்மம் , மரணம் , வயோதிகம் மற்றும் வ்யாதி ஆகியவற்றில் உள்ள து:கத்தையும் தோஷங்களையும் மீண்டும் மீண்டும் தர்ஶனம் செய்தல் ..
ஜன்மம் , மரணம் , வயோதிகம் மற்றும் வ்யாதி இவற்றின் சிந்தனை .. நித்ய தர்ஶனம் ..
ஜன்மம் .. அதில் உள்ள து:கம் .. அன்னையின் வயிற்றில் கழித்த மாஸங்கள் .. தலைகீழாகத் தொங்கியபடி .. தண்ணீரில் மூழ்கி இருந்து .. நாற்றத்தால் சூழப்பட்டு .. அப்பப்பா ! தனக்கும் து:கம் .. அன்னைக்கும் து:கம் .. பிறக்கும் போது அன்னைக்குக் கடுமையான வலியும் வேதனையும் கொடுத்து .. அவளுடைய உயிருக்கு ஆபத்து அளித்து ஜன்மம் ..
மரணம் து:ககரமானது .. ஶரீரத்தில் வலி என்பது ஒன்று .. அதை விட , ப்ரியமானவர்களையும் தீரா ஆஶையுடன் ஶேகரித்த அனைத்தையும் விட்டுச் செல்லும் ஶோகம் .. மனைவி , மக்கள் , வீடு , பேங்கில் போட்ட பணம் , சொத்து , வண்டி , பதவிகள் , பெருமைகள் , செல்வாக்கு , பெயர் , புகழ் போன்ற அனைத்தையும் பிரியும் ஶோகம் ..
ஜரா அல்லது வயோதிகமும் ஶோகம் நிறைந்தது .. மிகப் பெரிய ஶோகம் 'ஸ்வய ஸார்பு' என்ற ஆணவத்தை இழப்பதே .. "நானே செய்து கொள்வேன்" "என்னால் முடியும்" என்ற திமிர் தோல்வி அடைவதுதான் மிகப் பெரும் து:கம் .. காய் கால்கள் தளர்ந்து , இந்த்ரியங்கள் சோர்ந்து , நடை , உணவு உண்ணுதல் , உடை அணிதல் போன்ற அடிப்படை கார்யங்களுக்கும் பிறரை ஸார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டு .. பரிதாபம் .. சுற்றி உள்ள ப்ரியமானோர் தத்தம் கார்யங்களில் ஈடுபட்டு ஓடிக் கொண்டிருப்பதால் , "நான் வேண்டப் படாதவன் ஆகி விட்டேன் .." என்ற எண்ணம் வந்து விட்டால் மேலும் ஶோகம் ..
வ்யாதி வயோதிகத்தைப் போன்றது .. மற்றவரை ஸார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் .. வ்யாதி காரணமாக ப்ரியமானவரிடம் இருந்து விலகல் .. வ்யாதியும் து:கமயமானது ..
மநுஷ்யன் ஸாமான்யமாக ஒரு ஸ்வய ஏமாற்று நிலையில் , ஆஶைகளால் உந்தப்பட்ட ஒரு மயக்க நிலையில் வாழ்கிறான் .. தன்னை ஸுற்றி உள்ளோருக்குக் கிடைத்திடும் அநுபவம் தனக்கும் நேர வாய்ப்பு உண்டு என்று அவனுக்குத் தோன்றுவதில்லை .. பலர் மரணம் அடைவதைக் காண்கிறான் .. தானும் மரண வாஸலை நோக்கிய க்யூவில் நின்றிருப்பதை உணர்வதில்லை .. மஹாபாரதத்தில் யக்ஷ ப்ரஶ்னத்தில் யக்ஷன் கேட்ட ஒரு கேள்வி .. "உலகத்தில் மிக ஆஶ்சர்யமான விஷயம் எது ?" அதற்கு யுதிஷ்டிரன் , "தன்னை ஸுற்றிலும் பலரும் மரணம் அடைவதைப் பார்த்தும் தான் மாத்ரம் அமரத்வ வரம் வாங்கி வந்திருப்பதைப் போல வாழ்கிறான் மநுஷ்யன் .." என்று பதில் அளித்தார் .. அதே போல , வ்யாதி உற்றவர்களையும் வயோதிகர்களையும் மநுஷ்யன் ஸந்திக்கச் செல்கிறான் .. அவர்கள் மீது பரிதாபம் கொள்கிறான் .. அவர்களுக்கு சிறு சிறு உதவிகளும் செய்கிறான் .. ஆனால் , கடிகாரத்தின் ஒவ்வொரு டிக் டிக் ஶப்தமும் தன்னை வயோதிகத்தை நோக்கித் தள்ளுகிறது என்பதை உணர்வதில்லை .. தனக்குள் தத்க்ஷணம் வரை வெளிப்படாத ஒரு நோய் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை நினைப்பதில்லை ..
ஸ்ரீ கபீரின் வாழ்க்கையில் ஒரு ஸம்பவம் நிகழ்ந்தது .. அவரைக் காண வந்த அடுத்த அகத்து நபர் , "நான் எந்நேரமும் கவலையிலும் து:கத்திலும் இருக்கிறேன் .. அவ்வப்போது மின்னலைப் போல கொஞ்ஜ நேரம் ஸந்தோஷம் கிடைக்கிறது .. தாங்களோ எந்நேரமும் ஆனந்தமாக இருக்கிறீர்கள் .. அதன் ரஹஸ்யத்தை எனக்குக் கூறி அருள முடியுமா ?" என்று கேட்டார் .. முகத்தில் கவலையுடன் ஸ்ரீ கபீர் தாஸ் அவரைப் பார்த்தார் .. "ஏன் கவலையாக இருக்கிறீர் ?? ஏதேனும் அஶுப செய்தியா ?" பயத்துடன் கேட்டார் அவர் .. "இல்லை .. நீங்கள் முன்னரே வந்திருக்க வேண்டும் .. இப்பொழுது அந்த ரஹஸ்யத்தை உங்களுக்குக் கூறினாலும் ப்ரயோஜனம் இல்லை .. தங்களால் அதைச் செயல்படுத்த முடியாது .." "கூறுங்கள் .. நான் முழு மனஸுடன் முயற்சி செய்கிறேன் .." "அதில்லை .. தாங்கள் வாழ்க்கையில் ஒரு வாரம்தான் மிச்சம் இருக்கிறது .." என்றார் ஸ்ரீ கபீர் .. வந்தவருக்குப் பெரும் அதிர்ச்சி .. மௌனமானார் .. வெளியேறினார் .. ஒரு வாரம் கழித்து ஸ்ரீ கபீரை ஸந்திக்க வந்தார் .. "இந்த வாரம் எப்படி இருந்தது ?" ஸ்ரீ கபீர் கேட்டார் .. "முதல் ரெண்டு மூன்று தினங்கள் பயத்தில் இருந்தேன் .. மெதுவாக பயம் நீங்கியது .. மரணம் என்ற ஸத்யத்தை மனஸ் ஏற்றுக் கொண்டு விட்டது .. அதன் பிறகு , அனைவரிடமும் நல்லவனாக இருக்கலாம் என்று தோன்றியது .. பிறருக்கு நான் கடன் பட்டதைத் திருப்பி அளிக்கத் தொடங்கினேன் .. பிறருக்கு நன்மை செய்திட மனஸார முயன்றேன் .. மெதுவாக என் மனஸில் அமைதியும் ஸந்தோஷமும் அதிகரித்தது .. மரணத்தின் எண்ணம் வாரம் முழுவதும் எந்நேரமும் என்னுள் இருந்தது .. மரணத்தின் நித்ய தர்ஶனம் என்றாலும் மிகை ஆகாது .. நீங்கள் சொன்னது ஸரிதான் .. நான் உங்களிடம் முன்னரே வந்திருக்க வேண்டும் .." "நீங்கள் சொல்வது ஸரி .. உங்களுக்கு இன்று மரணம் ஏற்படாமல் இருக்கலாம் .. ஆனால் , எந்த க்ஷணமும் , எந்நாளும் மரணம் வரலாம் என்பது நிஶ்சயம் அல்லவா ? அதன் தர்ஶனம் நம்முள் எந்நேரமும் இருப்பது நல்லது .. இதுதான் ஆனந்தத்தின் ரஹஸ்யம் .." என்றார் ஸ்ரீ கபீர் ..
மரணத்தையும் , வயோதிகத்தையும் , வ்யாதியையும் நினைவில் வைத்திருப்பது , மீண்டும் மீண்டும் இவற்றின் தர்ஶனம் செய்வது எதிர்மறையான பான்மை இல்லை .. வாழ்க்கையின் ஸத்யங்களான இவற்றை மறுப்பதே எதிர்மறையான மனப்பான்மை .. இத்தகைய தர்ஶனம் மனஸில் த்ருப்தியையும் ஆனந்தத்தையும் மலர வைக்கும் .. அழுக்குகள் களையப் பட்டு , மனஸு தூய்மையாகும் .. தூய்மையான மனஸே ஸ்ரீ பரமாத்மன் வஸிக்க விரும்பும் இடம் ..

Comments
Post a Comment