ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 178
सर्वतः पाणिपादं तत्सर्वतोSक्षि शिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके ... (अध्याय १३ - श्लोक १३)
ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 13)
Sarvatah PaaniPaadam Sarvatah Shiromukham Sarvatah ShrutiMalloke .. (Chapter 13 - Shlokam 13)
அர்தம் : அவன் ஸர்வ இடங்களிலும் கைகளையும் , பாதங்களையும் கண்களையும் முகங்களையும் , வாய்களையும் , காதுகளையும் கொண்டவன் ..
இது நிராகார ஸகுண பரமாத்மாவின் வர்ணனை .. இதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நிர்குண நிராகார பரமாத்மாவின் வர்ணனை ஸ்ரீ க்ருஷ்ணனால் செய்யப்பட்டது .. இதுதான் ஹிந்து தர்மத்தின் பலம் .. ஹிந்து தர்மம் தன்னுள் உலகத்து எந்த ஒரு உபாஸனை முறையையும் அரவணைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது .. அனைத்து மதங்களும் , பரமாத்மனைப் பற்றிய அனைத்து கருத்துக்களும் ஹிந்து தர்மத்தில் அடங்கும் .. கருத்து , இறைதூதன் , வழிபாட்டு முறை என்ற விஷயங்களில் ஹிந்து தர்மம் தன்னை குறுகிய வட்டங்களுக்குள் ஸுருக்கிக் கொள்ளவில்லை .. கால வரம்புக்குள் சிக்கவில்லை .. தேஶம் , ஸமுதாயம் என்ற வரம்புகளுக்கு அப்பால் அனைத்து காலங்களிலும் அனைத்து தேஶங்களிலும் , அனைத்து ஸமுதாயத்தினருக்கும் பொருந்தக் ஹிந்து தர்மம் ..
ஸ்ரீ பரமாத்மன் அனைத்து இடங்களிலும் தனது கைகள் , பாதங்கள் , கண்கள் , காதுகள் , முகங்கள் மற்றும் வாய்களைக் கொண்டவர் .. பக்தனின் பாவனைதான் முக்யம் .. பரம பாவனையில் திளைத்த பக்தன் எந்த இடத்திலும் , எதைக் கொடுத்தாலும் , அதை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ பரமனின் கைகள் அங்கு இருந்திடும் .. பக்தன் ஸ்ரீ பரமனுக்கு இது' என்று வெறும் ஒரு விருப்பத்தை மனஸில் நினைத்தாலும் , அதையும் ஏற்றுக் கொள்ள , ஸ்ரீ பரமனின் கைகள் அங்கும் (மனஸினுள்) இருந்திடும் .. ஒரு பக்தன் தடுமாறினால் , அவனைத் தாங்கிட , ஷீ பரமனின் கைகள் அருகிலேயே இருந்திடும் ..
ஒரு பக்தன் பக்தியுடன் ஶிரம் தாழ்ந்து , பணிந்து எங்கு வணங்கினாலும் , அவனுடைய வணக்கத்தை ஏற்றுக் கொள்ள ஸ்ரீ பரமனின் பாதங்கள் அங்கே இருந்திடும் .. ஒரு பக்தன் ஸ்ரீ பரமனது முகத்தைப் பார்க்க விரும்பினால் , அங்கு அதே இடத்தில் புன்னகையுடன் கூடிய ஸ்ரீ பரமனது முகம் பக்தனை வாழ்த்திக் கொண்டிருக்கும் .. ஸ்ரீ பரமானது கண்கள் அனைத்து இடங்களிலும் இருக்கும் , பக்தனைக் கண்காணித்த படி , அவனை விழாமல் காத்த படி .. அவனது கண்கள் பக்தனின் மனஸின் அடியாழத்தில் புதைந்திருக்கும் ரஹஸ்ய பாவனைகளையும் கண்டு அறிந்திடும் .. குசேலன் , விதுரனைப் போல பக்தன் ஸ்ரீ பரமனுக்கு ப்ரேம பாவனையுடன் ஊட்ட விரும்பினால் , அங்கு , அதே இடத்தில் ஸ்ரீ பரமனின் வாய்கள் இருந்திடும் .. பக்தனது ப்ரார்தனைகள் , ஏன் ! அவனது மனஸில் இருக்கும் பேசப்படாத அவனது விருப்பங்களையும் கேட்கவல்ல ஸ்ரீ பரமனின் காதுகள் ஸர்வ இடங்களிலும் உள்ளன .. புருஷ ஸூக்தம் ஸஹஸ்ர ஶீர்ஷா புருஷஹ ஸஹஸ்ராக்ஷஹ ஸஹஸ்ர பாத் .. என்று ஆரம்பிக்கிறது .. ஸ்ரீ பரமன் ஸர்வ வ்யாபி .. பக்தர்களுக்காக தத் க்ஷணம் வந்து விடுபவன் , தனது ஆயிரக் கணக்கான கரங்கள் , பாதங்கள் , கண்கள் , காதுகள் , முகங்கள் , வாய்கள் , மூலம் பக்தனை அடைந்து விடுபவன் .. அவனைக் காத்திட , அவனைக் கண்காணித்திட , அவனுக்கு அருளிட , அவனிடம் இருந்து ஸ்வீகரித்திட , அவன் விருப்பத்தைக் கேட்டிட ..
ஸ்ரீ பரமன் தோலை தூரத்தில் கைலாஷ பர்வதத்திலும் , ஸ்ரீ வைகுண்டத்திலும் இருக்கிறார் என்பது ஸத்யம் .. ஸந்தேஹம் எதுவும் இல்லை .. ஆனால் , உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறார் .. எந்த இடத்திலும் , எந்த க்ஷணத்திலும் பக்தனை நினைத்த மாத்ரத்தில் வந்தடைகிறார் .. ஒலியை விட வேகமாக ஒளி ப்ரயாணிக்கும் .. இறை அநுக்ரஹம் ஒலியை விட வேகமாக வரக் கூடியது .. துர்யோதனனின் ராஜ்ய ஸபையில் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்த த்ரௌபதி , தனது கைகளை உயர்த்தி , 'ஹே பரந்தாமா !' என்று அழைத்த மாத்ரத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் அங்கு இருந்தான் , புடவைகள் ரூபத்தில் .. நெடுந்தூர த்வாரிகையில் இருந்து ப்ரயாணம் செய்ய வேண்டிய அவஶ்யம் அவனுக்கு இல்லை .. ஆரண்யத்தில் த்ரௌபதி மீண்டும் சிக்கலில் மாட்டிய போது , அவள் ஸ்ரீ க்ருஷ்ணனை நினைத்த தத் க்ஷணத்தில் வீட்டு வாஸலில் இருந்தான் ஸ்ரீ க்ருஷ்ணன் .. துர்வாஸர் மற்றும் அவரது ஆயிரம் ஶிஷ்யர்களுக்கும் வயிறாற போஜனம் அளித்து த்ரௌபதியைச் சிக்கலில் இருந்து மீட்டான் .. கஜேந்த்ரன் முதலையின் வாய்ப்பிடியில் சிக்கித் தவித்த போது , "ஹே அச்யுதா !" என்று கூவி அழைத்த தத் க்ஷணம் ஸ்ரீ மஹாவிஷ்ணு அங்கிருந்தார் , யானையைக் காத்து அருளிட ..
"ஸர்வதஹ பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷி ஶிரோமுகம் ஸர்வதஹ ஶ்ருதிமல்லோகே !!!"

Comments
Post a Comment