நேற்று
ஸ்ரீ குரு பௌர்ணமீ ... அல்லது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ .. ஆஷாட மாஸ பௌர்ணமீ ஸ்ரீ குருவிற்காக அர்பணம் .. குரு என்பவர் வெறும் டீசர் , கற்றுக் கொடுப்பவர் இல்லை .. குரு என்பவர் வெறும் லெக்சரர் .. உரை நிகழ்த்துபவர் இல்லை .. குரு ஒரு ஆற்றலைக் கற்றுக் கொடுக்கும் வெறும் பயிற்சியாளர் இல்லை .. ஆனால் இவர்களில் எவராலும் ஒரு குரு ஆக முடியும் ..
குரு என்ற வார்தை .. கு என்றால் இருள் .. ரு என்றால் அழிப்பவர் .. இருளை அழித்தொழிப்பவர் குரு .. நம்முள் நிறைந்திருக்கும் இருள் ..
குரூர்ப்ரஹ்மா குரூர்விஷ்ணுஹு குரூ தேவோ மஹேஶ்வரஹ குரூ ஒரு ஸ்ருஷ்டிகர்தா .. படைப்பாளி .. குரு பாதுகாப்பவர் .. குரு அழிப்பவர் .. குரூ எதையும் செய்யாத பரப்ரஹ்ம பரமாத்மா .. எதையும் செய்யாதவர் ஆனால் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமானவர் ..
இன்று நடந்த ஸெமினாரில் கருத்தரங்கில் சர்சைக்கு வந்த விஷயங்கள் ..
குரு ஶிஷ்ய ஸம்பந்தம் ஸ்நேஹம் மற்றும் பக்தி அடிப்படையில் அமைகிறது .. குருவின் மனஸில் ஶிஷ்யனைப் பற்றி ஸ்நேஹமும் .. ஶிஷ்யனின் மனஸில் குருவைப் பற்றி பக்தியும் ...
குரு விஶேஷமானவர் ஏனென்றால் ஶிஷ்யனுடன் ரக்த ஸம்பந்தம் ஏதும் இல்லாமலும் ஶிஷ்யன மீது அபார ப்ரேமை வைக்கிறார் .. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத ப்ரேமை .. தூய்மையான ப்ரேமை ..
தன்னிடம் உள்ள அனைத்தையும் ஶிஷ்யனுக்கு அளிக்கிறார் குரு .. ஶிஷ்யனைத் தனக்கு ஸமமாக உருவாக்குகிறார் .. ஶிஷ்யன் தன்னை விட உயர்ந்தவனாகும் போது குரு மனஸில் ஆனந்தம் ஏற்படுகிறது .. பொறாமை அல்ல ..
உபதேஶம் உப -- தேஶம் .. உப என்றால் ஸமீபத்தில் .. அருகில் .. தேஶம் என்பது சொல்லுதல் .. காட்டுதல் .. புரிய வைத்தல் .. அதாவது அருகில் இருந்து சொல்லுதல் .. குரு ஶிஷ்யனுக்கு அருகில் இருப்பதால் அவருடைய ஒழுக்கம் ஶிஷ்யனுக்குத் தெளிவுறத் தெரிகிறது ..
ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் ஶிஷ்யனிடம் மூன்று எதிர்ப்பார்ப்புகள் வைக்கிறார் .. ப்ரணிபாத .. நமஸ்காரம் அல்லது விநயம் .. பரிப்ரஶ்ன அதாவது கேள்விகள் கேட்டு ஸந்தேஹம் தெளிவது .. ஸேவா ..
குருவிற்கு ஸேவை பணிவிடை ..
குருவிற்கு ஸேவை பணிவிடை ..
இன்று நம் ஸ்ரீ காஞ்சி ஶங்கர வித்யாலயத்தில் ஸ்ரீ குரு பௌர்ணமீயை முன்னிட்டு , மூன்று நிகழ்வுகள் நடந்தன .. காலையில் குழந்தைகள் ஸ்ரீ குரு பூஜை செய்தனர் .. வேத வ்யாஸர் , ஸ்ரீ ஆதி ஶங்கரர் , மற்றும் காஞ்சி பீடத்தின் ஆசார்யர்கள் ஆகியோரின் படங்களுக்கு புஷ்பங்கள் அர்பணித்து நமஸ்காரம் செய்தனர் ..பின்னர் , வித்யாலயத்தின் புஸ்தகாலயம் (Library) திறந்து வைக்கப் பட்டது .. ஸ்ரீ கே வீ பாலக்ருஷ்ணன் (Retd Manager State Bank Of India ) மிக அழகாக , நம் வாழ்வில் புஸ்தகங்கள் என்ற விஷயத்தை விளக்கினார் .. ஸாயங்காஸம் ஆசிரியர்களுக்கான ஒரு கருத்தரங்கு , ஸ்ரீ குருவைப் பற்றிய கருத்தரங்கு நடந்தது .. இதில் மேல் வகுப்பு மாணவர்கள் , நம் வித்யாலய ஆசிரியர்களும் அருகில் உள்ள வித்யாலயத்து ஆசிரியர்கள் அழைக்கப் பட்டனர் .. அனைவரும் தத்தம் விஷயங்களை சிறப்பாக முன் வைத்தனர் .. குறிப்பாக , ரங்கா மெட்ரிகுலேஷன் ஆசிரியர் ஸ்ரீ முத்துக்ருஷ்ணன் , ஶங்கர மட வேத பாடஶாலை வாத்யார் ஸ்ரீ ஸுப்ரஹ்மணியன் , மற்றும் நம் வித்யாலயத்து மாணவிகளின் தாயார் ஸ்ரீமதி யோகாம்பாள் இம்மூவரும் மிக அழகாகப் பேசினர் .. பெரும்பாலான மாணவர்களுக்கு , ஏன் ஸில ஆசிரியர்களுக்கும் ஸ்ரீ குரு பூஜையின் இந்த அநுபவம் முதல் அநுபவம் .. உண்மையில் இந்த தினம் அதாவது ஸ்ரீ வ்யாஸ பௌர்ணமீ தான் நம் தேஶத்தில் ஆசிரியர் தினமாக அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும் ..
Comments
Post a Comment