ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 179
बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च दूरस्थं चान्तिके च तत् .. (अध्याय १३ - श्लोक १५)
பஹிரந்தஶ்ச பூதானாம் அசரம் சரம் ஏவ ச தூரஸ்தம் சாந்திகேச தத் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 15)
Bahiranthashcha Bootaanaam Acharam Charameva cha Doorastham Chaantike Cha Tat .. (Chapter 13 - Shlokam 15)அர்தம் : அனைத்து உயிர்களின் உள்ளும் வெளியும் இருப்பவர் .. வெகு அருகில் இருந்தாலும் வெகு தூரத்தில் இருப்பவர் ..
சரம் என்பவை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாறக் கூடிய ஜீவன்கள் .. ப்ராணிகள் , பக்ஷிகள் , மநுஷ்யர்கள் .. அசரம் என்பவை அசைய முடியாத ஜீவன்கள் .. மரம் , செடி கொடிகள் .. ஸ்ரீ பரமாத்மன் இவ்வனைத்து ஜீவன்களிலும் இருக்கிறான் .. க்றிஸ்தவ மதம் நேர் எதிரான கருத்தை ப்ரஸ்தாபிக்கிறது .. ப்ராணிகள் மற்றும் மரங்களை தெய்வீகமாக ஏற்றுக் கொள்வதில்லை .. பாமர ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றனர் க்றிஸ்தவ மத ப்ரசாரகர்கள் .. "மரங்களிலும் ப்ராணிகளிலும் தெய்வம் இருக்க முடியுமா ?" என்று கேள்வி கேட்டு ஹிந்துக்களைக் குழப்ப முயல்கின்றனர் .. மநுஷ்யர்களிலும் பெண்களை தெய்வீகப் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளாத ஒரு மதத்தில் வேறு எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம் .. ஹிந்து தர்மத்தை க்றிஸ்தவத்துடன் ஒப்பிடவில்லை .. ஒப்பிடவும் முடியாது .. ஹிந்து தர்மம் மிக உயரத்தில் வீற்றிருக்கிறது .. க்றிஸ்தவம் குழந்தைத்தனமான ப்ரகடனங்களுடன் மிகக் கீழ் நிலையில் உள்ளது ..
ஸ்ரீ பரமாத்மன் அனைத்து ஜீவன்களிலும் வீற்றிருக்கிறான் என்பதே ஸத்யம் .. அனைத்து ஜீவன்களும் தெய்வீகமானவை .. ஜீவன்கள் உயிர் வாழ்வதும் பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்துவதும் அவன் இருப்பதாலே .. அதே ஸமயம் , ஜீவன்களுக்கு வெளியிலும் அவன் இருக்கிறான் .. இந்தப் படைப்பில் அணு அணுவிலும் அவன் இருக்கிறான் .. நதி , மலை , ஸூர்ய சந்த்ரன் .. அனைத்திலும் அவன் இருக்கிறான் .. இவை ஜடம் , அல்லது உயிரற்றவை என்று தோன்றினாலும் .. அணு அளவில் அவன் இருக்கிறான் ..
ஸ்ரீ பரமாத்மன் வெகு ஸமீபத்தில் இருக்கிறான் .. வெகு தூரத்திலும் இருக்கிறான் .. தூர தூரத்து க்ரஹங்கள் நக்ஷத்ரங்களிலும் எல்லையில்லா இப்படைப்பு முழுவதும் அவன் இருக்கிறான் .. நாம் அழைத்த தத் க்ஷணம் நம்மிடம் வந்து விடுவதால் அவன் நமக்கு வெகு அருகில் இருக்கிறான் என்பது புரிகிறது .. நாம் உலகக் கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் போது அவன் வெகு தூரத்தில் , அடையப் பட முடியாதவன் ஆகிறான் ..

Comments
Post a Comment