ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 180
अविभक्तं च भूतेषु विभक्तमिव स्थितम् .. (अध्याय १३ - श्लोक १६)
அவிபக்தம் ச பூதேஷு விபக்தம் இவ ஸ்திதம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 16)
Avibhaktam Cha Bhooteshu Vibhaktam Iva Sthitam .. (Chapter 13 - Shlokam 16)
அர்தம் : பிளக்கப் பட முடியாதவர் .. முழுமையானவர் , எனினும் பிளவு பட்டவர் போல அனைத்து உயிர்களிலும் வீற்றிருப்பவர் ..
தேனிலும் தித்திப்பு .. பலாச் சுளையிலும் தித்திப்பு .. பழங்களிலும் தித்திப்பு .. கரும்பிலும் தித்திப்பு .. கல்கண்டிலும் தித்திப்பு .. வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் தித்திப்பு ஒன்றுதான் .. வெவ்வேறல்ல .. பல்லாயிரம் புஷ்பங்களில் தேன் இருக்கிறது .. இது வேறு தேன் , அது வேறு தேன் என்று கூறத் தோன்றினாலும் எல்லா தேனும் ஒன்றுதான் .. மண்ணில் உள்ள ஸத்து பிரிக்கப்பட்டு , மரம் , செடி , கொடிகளின் தண்டுகள் வழியாக அநுப்பப்பட்டு , பலப்பல வடிவங்கள் , பலப்பல வாஸங்கள் , பலப்பல வர்ணங்கள் உள்ள புஷ்பங்களாக உருவாக்கப்பட்டு , அவற்றில் தேனாக புதைக்கப் படுகிறது .. தேன் கிடைக்கும் இடங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒரே மண்ணில் இருந்து , தேனுக்குரிய ஸத்தில் இருந்து தயார் செய்யப் பட்டது .. மூலம் ஒன்று .. அதில் இருக்கும் ஸத்தும் ஒன்று .. தித்திப்பு என்ற அதன் தன்மையும் ஒன்று .. வெளிப்படும் இடங்கள் வெவ்வேறாக இருப்பதால் , ஒன்றல்ல .. வெவ்வேறு என்று கருதத் தோன்றுகிறது ..
ஸூர்யன் பூமியின் வெவ்வேறு இடங்களில் ஒளியாக வெளிப்படுகிறான் .. வெளிப்படும் ஒளியை நாம் பார்த்தால் வெவ்வேறாகத் தோன்றும் .. பிளவு பட்டதாகத் தோன்றும் .. மூலத்தைப் பார்த்தால் , பிளவு படாத ஒரே ஸூர்யனைக் காணலாம் ..
அதே போல .. ஸ்ரீ பரமாத்மன் .. கோடிக்கணக்கான ஜீவன்களில் வீற்றிருந்தும் அவன் ஒருவன்தான் .. பூர்ணமானவன் .. பிளவு படாதவன் .. ஜீவன்கள் அனைத்திலும் வெளிப்படுகிறான் .. வெவ்வேறாகத் தெரிகிறான் .. ஆயின் .. அவன் ஒருவனே ..
Comments
Post a Comment