ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 181
प्रभविष्णु च भूतभर्तृ च ग्रसिष्णु .. (अध्याय १३ - श्लोक १६)
ப்ரபவிஷ்ணு ச பூதபர்த்ரு ச க்ரஸிஷ்ணு .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 16)
Prabhavishnu Cha BhootaBhartru Cha Grasishnu .. (Chapter 13 - Shlokam 16)
அர்தம் : அனைத்து ஜீவன்களையும் உத்பத்தி செய்பவன் , அனைத்தையும் போஷித்து பரிபாலனம் செய்பவன் , அனைத்தையும் அழிப்பவன் ..
ஸ்ருஷ்டியில் நடந்திடும் மூன்று ப்ரதான கார்யங்கள் .. படைத்தல் அல்லது உருவாக்குதல் , பாதுகாத்தல் அல்லது பராமரித்தல் .. மற்றும் அழித்தல் .. தொழில்துறையில் இதே மூன்று கார்யங்கள் நடக்கின்றன .. தொழில்ஶாலை நிறுவப்படுகிறது .. அங்கு உத்பத்தி செய்யப் படுகிறது .. தொழில்ஶாலை பராமரிக்கப் படுகிறது .. அங்குள்ள யந்த்ரங்கள் பராமரிக்கப் படுகின்றன .. உத்பத்தி ஆனவை அவற்றை வாங்குபவர்களால் பராமரிக்கப் படுகின்றன .. கழிவுகள் , குறை உள்ளவை , ஸ்க்ரேப் (Scrap) , குப்பை , பயனற்ற உடைந்து போன யந்த்ரங்கள் , தொழில் நுட்பம் காரணமாக காலாவதியான யந்த்ரங்கள் ஆகியவை அழிக்கப் படுகின்றன .. நம் வீட்டிலும் இதே மூன்று கார்யங்கள் நடக்கின்றன .. வீடு கட்டப் படுகிறது . பராமரிக்கப் படுகிறது .. அழித்து மீண்டும் புதிதாகக் கட்டப் படுகிறது .. வீட்டில் உள்ள பொருட்களும் , அன்றாடம் தயாராகும் உணவும் , கடவுளுக்காக கோர்க்கப் படும் ஹாரங்களும் , மற்ற அனைத்துமே இம்மூன்று கார்யங்களுக்கு உட்படுத்தப் படுகின்றன .. இயற்கையிலும் இம்மூன்று கார்யங்களும் நடை பெறுகின்றன .. பெரும் நதிகளும் , ஸமுத்ரங்களும் , மலைகளும் , நகரங்களும் , தேஶங்களும் காணாமல் போய் இருக்கின்றன ..
இவை மூன்றுமே கடினமான கார்யங்கள் .. படைத்தல் அல்லது உருவாக்குதல் கடினம் .. மிக அதிக க்ஞானமும் , கடும் உழைப்பும் அவஶ்யம் .. அதனால்தான் படைக்கும் ப்ரஹ்மாவிற்குத் துணையாக இருப்பவள் க்ஞான ஸ்வரூபியான ஸரஸ்வதீ .. பராமரிப்பதும் (பாதுகாப்பது) கடினம் .. இயற்கையில் அழிவு நிஶ்சயம் என்பதால் பாதுகாப்பது இயற்கைக்கு எதிரான போராட்டம் .. பராமரிப்பதற்கு அவஶ்யமானது த்ரவ்யம் . அதனால்தான் பராமரிக்கும் விஷ்ணுவிற்குத் துணையாக இருப்பவள் செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மீ .. அழிப்பதும் மிகக் கடினம் .. இன்று நவீன தொழில் நுட்பத்தில் படைக்கப்பட்ட கம்ப்யூடர் , மொபைல் ஃபோன் , ஸேடலைட் , ப்லாஸ்டிக் , போன்ற பலவற்றை அழிப்பது பெரும் ஸவாலாக வளர்ந்துள்ளது .. அழிப்பதற்கு மிக அதிக ஆற்றல் , மஹா ஶக்தி அவஶ்யம் ஆகிறது .. ஆதலால் அழிக்கும் ஸ்ரீ பரமஶிவனுக்கு ஶக்தியே துணை ..
இம்மூன்று கார்யங்களும் ஸ்ரீ பரமாத்மனின் கார்யமே என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment