ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 182
ध्यानेन साङ्ख्येन योगेन कर्मयोगेन ... (अध्याय १३ - श्लोक २४)
த்யானேன ஸாங்க்யேன யோகேன கர்மயோகேன . (அத்யாயம் 13 - ஶ்லோகம் 24)
Dhyaanena Saankhyena Yogena KarmaYogena .. (Chapter 13 - Shlokam 24)அர்தம் : த்யான யோகம் மூலம் , ஸாங்க்ய யோகம் மூலம் , கர்மயோகம் மூலம் ..
இவை பல்வேறு பாதைகள் .. யோகத்தை எய்துவதற்கான பாதைகள் .. ஸ்ரீ பகவானுடன் இணைவதற்கான பாதைகள் .. த்யானம் , ஸாங்க்யம் , கர்மயோகம் போன்ற வெவ்வேறு மார்கங்களில் பலரும் முயல்கின்றனர் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
இப்பாதைகள் அனைத்தும் கீதையில் சர்சை செய்யப் பட்டுள்ளன .. ஆறாம் அத்யாயத்தில் த்யான மார்கம் பேசப் பட்டுள்ளது .. த்யானத்திற்கு அவஶ்யமான புறச் சூழ்நிலை , ஶரீர நிலை மற்றும் மனநிலை விளக்கப் பட்டுள்ளன .. த்யானத்திற்கு அநுகூலமான உணவும் சர்சிக்கப் பட்டுள்ளது .. மனஸை கட்டுப்படுத்தும் ரஹஸ்யத்தை விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. யோக முயற்சியில் தடுமாறி பாதை மாறி விடுபவனின் கதி என்ன என்பதையும் விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
பல இடங்களில் க்ஞானத்தின் மஹிமை பேசப் படுகிறது என்றாலும் ரெண்டாம் அத்யாயத்தில் விரிவாக பேசப் படுகிறது .. தேஹம் , தேஹினன் அதாவது தேஹம் மற்றும் தேஹத்தை அணிந்தவன் என்ற அடிப்படையில் "நான்" , கருதப் படும் நான் , நிஜ நான் .. ஆகியவை ஸ்ரீ க்ருஷ்ணனால் விளக்கப் பட்டுள்ளன .. க்ஞானத்தில் நிலைத்து நிற்பதற்கு அவஶ்யமான ஸ்திர புத்தி விரிவாகவே விளக்கப் பட்டுள்ளது .. ஸ்ரீ ரமண மஹர்ஷீ இதே மார்கத்தை அநுஸரித்தார் .. "நான் யார்" என்ற கேள்வியில் ப்ரயாணத்தை ஆரம்பிக்க வலியுறுத்துகிறார் ..
கர்மயோகம் ப்ரதானமாக மூன்றாம் அத்யாயத்தில் பேசப் படுகிறது .. கர்மங்களில் திளைப்பதே கர்மயோகம் இல்லை .. கர்மஃபலன் மற்றும் கர்மத்தின் மீது பற்று விலக்குவதே கர்மயோகம் .. மேலும் , கர்மம் என்பது ஸ்தூல கர்மம் , அதாவது வெளிப்படையாகச் செய்யப்படும் கர்மம் மாத்ரம் இல்லை .. ஸூக்ஷ்ம அளவில் , மனஸளவில் செய்யப் படுவதும் கர்மமே என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அத்யாயத்தின் இறுதியில் "நானின்" அமைப்பு .. ஸ்தூல ஶீரீரம் மற்றும் ஸூக்ஷ்ம ஶரீரங்கள் விளக்கப் படுகின்றன ..
வெவ்வேறு பாதைகளை விளக்கினாலும் எந்த ஒரு பாதையையும் ஸ்ரீ க்ருஷ்ணன் 'sponsor' செய்யவில்லை .. இதுவே உகந்தது , இதுவே சிறந்தது என்று எதையும் சுட்டிக் காட்டவில்லை .. சிலர் இந்த பாதையில் வருகிறார் .. வேறு சிலர் வேறு பாதையில் வருகிறார் என்கிறார் .. பாதைகள் பல்வேறு உண்டு .. அனைத்தும் ஸமமானவையே என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறார் ..

Comments
Post a Comment