ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 184
क्षेत्रक्षेत्रज्ञ संयोगात्सञ्जायते .. (अध्याय १३ - श्लोक २६)
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ ஸம்யோகாத் ஸஞ்ஜாயதே . (அத்யாயம் 13 - ஶ்லோகம் 26)
Kshethra Kshetragya Samyoogaat Sanjaayathe .. (Chapter 13 - Shlokam 26)அர்தம் : க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞனின் இணைப்பால் உயிர்கள் பிறக்கின்றன ..
ப்ரக்ருதி மற்றும் புருஷனின் இணைப்பால் படைப்பு தோன்றியது .. ப்ரக்ருதி என்பது மாயை .. ப்ரக்ருதியின் ஒரு அம்ஶமே ஜடம் .. ஜடம் மாறுவது .. அழியக் கூடியது .. ஸ்வயமாக இயங்காதது ..
புருஷனின் ஒரு அம்ஶம் சைதன்யம் .. ஶாஶ்வதமானது .. அழிவில்லாதது .. ஜடத்திற்கு செயல்படும் ஆற்றலைக் கொடுப்பது ..
உயிர்கள் அனைத்தும் ஜடம் மற்றும் சைதன்யத்தின் இணைப்பால் உருவானவை ,, ஶரீரம் ஜடம் .. ஶரீரம் இயங்கும் ஆற்றலைப் பெறுவது சைதன்யத்தால் ..
ஜடம் - சைதன்யத்தை ரெண்டாம் அத்யாயத்தில் தேஹம் - தேஹீ என்றார் .. இங்கு அதையே க்ஷேத்ரம் - க்ஷேத்ரக்ஞன் என்கிறார் .. க்ஷத் என்பது அழிவது .. விலகி நின்று அதைப் பார்க்கக் கூடியது க்ஷேத்ரக்ஞன் ..
Comments
Post a Comment