ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 185
समं सर्वेषु भूतेषु तिष्ठन्त: । (अध्याय १३ - श्लोक २७)
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் .. (அத்யாயம் 13 - ஶ்லோகம் 27)
Samam Sarveshu Bhooteshu Tishthantam .. (Chapter 13 - Shlokam 27)
அர்தம் : அனைத்து உயிர்களிலும் ஸமமாக இருப்பவன் ..
சைதன்யமாக அனைத்து உயிர்களிலும் ஸ்ரீ பரமாத்மன் இருக்கிறார் .. ஸமமாக இருக்கிறார் .. சில உயிர்களில் குறைவாகவும் சில உயிர்களில் அதிகமாகவும் ... சில உயிர்களில் அல்பமாகவும் சில உயிர்களில் மஹத்தாகவும் ... சில உயிர்களில் மந்தமாகவும் சில உயிர்களில் ப்ரகாஶமாகவும் இருக்கிறாரா ?? இல்லை .. அனைத்து உயிர்களிலும் ஸமமாகவே இருக்கிறார் .. அனைத்து உயிர்களுக்கும் அததன் ஶரீரத்திற்கு ஏற்ற ஆற்றல்களை அளிக்கிறார் .. உயிர் வாழ்வதற்காக உழைப்பதற்கும் போராடுவதற்கும் ஏற்ற பான்மையை அருளி இருக்கிறார் ..
நாம்தான் நம் அறியாமைக் காரணமாக சில உயிர்களை உயர்ந்தவை என்றும் சிலவற்றைத் தாழ்ந்தவை என்றும் , சில உயிர்களை உபயோகமானவை என்றும் வேறு சிலவற்றை உபயோகம் இல்லாதவை என்றும் பேதங்கள் கற்பிக்கிறோம் .. ப்ராணிகள் பூச்சிகள் மாத்ரம் இல்லை .. மநுஷ்யர்களிலும் இவ்வகை பேதங்களைப் பிறப்பித்திருக்கிறோம் .. சிலர் மஹத்தானவர்கள் .. எவ்வழியிலும் காப்பாற்றப் பட வேண்டும் .. மற்ற சிலர் அல்பர்கள் .. செத்தால் நஷ்டம் ஏதும் இல்லை .. என்ற பாவனையின் அடிப்படையில் நமது ஸமுதாய அமைப்புக்கள் பலவும் இயங்குகின்றன .. நம்முடைய அறியாமை .. ஆனால் , அவன் அனைத்து உயிர்களிலும் ஸமமாகவே வீற்றிருக்கிறான் ..

Comments
Post a Comment