ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 187
न लिप्यते .. न उपलिप्यते .. (अध्याय १३ - श्लोक ३१ , ३२)
ந லிப்யதே .. ந உபலிப்யதே
Na Lipyate ... Na Upalipyate .. (Chapter 13 - Shloka 31 , 32)
அர்தம் : ஒட்டுவதில்லை ..
இது கீதையில் பல முறை பயன்படுத்தப் பட்ட சொற்றொடர் .. ஆத்மா ஒட்டுவதில்லை .. பரமாத்மா ஒட்டுவதில்லை .. ஸர்வ இடங்களிலும் வ்யாபித்திருந்தும் அவன் எங்கும் ஒட்டுவதில்லை .. அனைத்து ஜீவன்களிலும் நிலைத்திருந்தும் அவன் எதிலும் ஒட்டுவதில்லை .. அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அவன் விலகியே இருக்கிறான் .. இருந்தும் இல்லாமல் இருக்கிறான் ..
காற்று கந்தங்களை , ஸுகந்தமோ துர்கந்தமோ , ஏற்று வருகிறது .. காற்று வீசினால் தான் , காற்று நம் நாஸியை ஸ்பர்ஶித்தால் தான் , அது ஏற்று வரும் கந்தத்தை நம்மால் உணர முடிகிறது .. காற்று இல்லையேல் கந்தம் இருந்தும் நம்மால் உணர முடியாது .. எனினும் , காற்று கந்தத்துடன் ஒட்டுவதில்லை .. கந்தம் தான் காற்றுடன் ஒட்டுகிறது ..
ஸூர்யன் தன் ப்ரகாஶக் கரங்களினால் அனைத்து இடங்களையும் தொடுகிறது .. அனைத்தும் ஸூர்யனால் ஒளிர்கின்றன .. எனினும் , ஸூர்ய ப்ரகாஶம் எதனுடனும் ஒட்டுவதில்லை ..
ஆகாஶம் அனைத்து இடங்களிலும் வ்யாபித்திருக்கிறது .. ஆனாலும் எங்கும் எதனுடனும் ஒட்டுவதில்லை ..
இவை ஸூக்ஷ்மமானவை .. ஸ்ரீ பரமாத்மாவோ அதி ஸூக்ஷ்மமானவன் .. ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶமான ஆத்மாவும் அதி ஸூக்ஷ்மமானது .. ஒட்டாது ..
நாம் நம் நிஜ ஆத்ம ஸ்வரூபத்தை மறந்து , நம்மை மாயை 'நானாகக்' கருதிக் கொள்கிறோம் .. ஜடத்துடன் பிணைத்துக் கொள்கிறோம் .. நம் அறியாமை நீங்கி விட்டால் , கருதிய 'நான்' மறைந்து நிஜ 'நானை' உணர்ந்து விட்டால் , ஜடத்துடன் , தேஹத்துடன் , மண் , ஸம்பத்து , பணம் , மற்ற பொருள்களுடன் , மனைவி , மக்கள் மற்றும் பிற ஜீவன்களுடன் ஒட்டுவதில்லை ..
Comments
Post a Comment