ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 186
यदा भूतपृथग्भावं एकस्थं .. तत एव विस्तारम् च अनुपश्यति .. (अध्याय १३ - श्लोक ३०)
யதா பூத ப்ருதக்பாவம் ஏகஸ்தம் .. தத ஏவ விஸ்தாரம் ச அநுபஶ்யதி ... (அத்யாயம் 13 - ஶ்லோகம் 30)
Yadaa Bhoota PruthagBhaavam Ekastham Tata Eva Vistaaram cha Anupashyati ... (Chapter 13 - Shlokam 30)
அர்தம் : பற்பல ரூபங்களில் பரிணமித்துள்ள பல ஜீவன்களில் ஒரே ப்ரக்ருதியைக் காணும் ஸாதகன் .. ஒரே ப்ரக்ருதியின் விஸ்தாரமாக வகை வகையான ஜீவன்களைக் காணும் ஸாதகன் ...
பலப்பல வர்ணங்களாகவும் பலப்பல ரூபங்களாகவும் காணப்படும் ஜீவ ஶரீரங்கள் அனைத்தும் ஒரே ப்ரக்ருதியின் , மஹத்தின் வெளிப்பாடு .. ஒரு ப்ரக்ருதியே பலப்பலவாக மிளிர்ந்துள்ளது .. அடுத்த அத்யாயத்தில் விளக்குகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. அனைத்து ஜீவன்களுக்கும் யோனி அல்லது கர்பம் ப்ரக்ருதியினுடையது .. பீஜம் அல்லது விதையை நான் அருள்கிறேன் என்கிறார் ..
ப்ரக்ருதியே மஹாபூதங்களாக , ப்ருத்வீ , ஜலம் , வாயு , அக்னீ மற்றும் ஆகாஶமாக வெளிப்படுகிறாள் .. மஹாபூதங்களின் அம்ஶங்களே ஜீவன்களின் ஶரீரங்களாக பரிணமிக்கின்றன ,, நம் ஶரீரங்கள் பஞ்சபூதங்களால் ஆனது .. ப்ருத்வீ (மண்) , ஆப (நீர்) , வாயு , அக்னீ மற்றும் ஆகாஶ் .. மரணத்தின் போது , ஶரீரத்தின் பூதங்கள் விஸர்ஜனம் ஆகி , ப்ரக்ருதியின் மஹாபூதங்களில் கரைந்து விடுகின்றன ..
ஏறக்குறைய 20 லக்ஷ ஸ்தாவர வகைகள் , 20 லக்ஷ ப்ராணிகள் , 20 லக்ஷ பக்ஷி வகைகள் மற்றும் 20 லக்ஷ பூச்சி வகைகள் என்று ஸுமார் 82 லக்ஷ ஜீவன்கள் .. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வர்ணங்களில் , வெவ்வேறு ரூபங்களில் ஶரீரங்கள் , ஒரே வகை ஜீவனில் பல்லாயிர , பல லக்ஷ பல கோடி உயிர்கள் , அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஶரீரம் .. இந்த பலப்பல கோடி ஶரீரங்களும் அநுதினம் , நித்யம் , ஒவ்வொரு க்ஷணமும் தேய்ந்து அழிந்து கொண்டிருக்கின்றன .. புதுஸாக உருவாகிக் கொண்டும் இருக்கின்றன .. (விக்ஞான பாஷையில் metabolism ..) தொடர்ந்து இந்த ஶரீரங்களில் இருந்து பஞ்ச பூதங்கள் வெளியேறி , மஹாபூதத்தில் கரைந்து கொண்டு இருக்கின்றன .. ஒவ்வொரு க்ஷணமும் மஹாபூதத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் ஶரீரங்களுக்குள் நுழைந்து , ஶரீரங்களைப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன .. என்ன மஹத்தான கார்யம் ..
ஸாதகன் இதைப் பார்க்க வேண்டும் .. உணர வேண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. மேலெழுந்த வாரியாகத் தெரிந்திடும் விதங்களில் , வர்ணங்களில் , ரூப பேதங்களில் மயங்கி விடக் கூடாது என்கிறார் .. பலப்பலவாகத் தெரிவதனைத்தும் ஒன்றின் விரிதலே என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் .. இருப்பதில் இல்லாததையும் இல்லாததில் இருப்பதையும் பார்ப்பதே ஸாதகனின் கண்கள் ..
Comments
Post a Comment