ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 188
तासां ब्रह्म महाद्योनिः अहं बीजप्रदः पिता .. (अध्याय १४ - श्लोक ४)
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிஹி அஹம் பீஜஹ ப்ரதஹ பிதா .. (அத்யாயம் 14 - ஶ்லோகம் 4)
Taasaam Brahma MahadYonihi Aham BeejaPradah Pitaa .. (Chapter 14 - Shlokam 4)
அர்தம் : உத்பத்தி ஆகும் அனைத்து ஶரீரங்களுக்கும் கர்பம் அளிக்கும் மாதா ப்ரக்ருதி .. கர்பத்திற்கு பீஜம் (விதை) அளிக்கும் பிதா நானே ..
இந்த ஸம்ஸாரத்தில் நம் ஜன்மம் எவ்வாறு நடக்கிறது ?? தாயின் கர்பத்தில் பத்து மாஸங்கள் நாம் இருக்கிறோம் .. அங்கு நம் ஶரீரம் உருவாகி , வளர்கிறது .. கர்பம் அளித்தவள் தாய் .. நம் ஶரீரம் உருவாவதற்கு , வளர்வதற்கு வழி வகுப்பவள் தாய் .. அவள் அருந்திடும் போஜனம் அவஶ்யமான போஷாக்குகள் அளித்து , அவளுடைய ஶரீரத்தையும் போற்றி , உள்ளே கர்பத்தில் இருக்கும் ஶிஶுவின் ஶரீரத்தையும் வளர்த்து விடுகிறது .. ஆனால் , இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது தந்தை அளித்திடும் வீர்யம் எனும் பீஜம் ..
இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் அதி அத்புதமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார் .. நம் அனைவருக்கும் ஸ்ரீ பரமேஶ்வரனே பிதா .. நம் ஶரீரங்கள் ப்ரக்ருதியின் பஞ்ச பூதக் கலவையால் உருவாகின்றன .. அதனால் ப்ரக்ருதியே நமக்குத் தாய் .. ஶரீரங்களுக்கு சைதன்யம் அளிப்பது புருஷனின் அம்ஶமான ஜீவன் .. (ஆத்மா வாஸனைகளுடன் ஓட்டும் போது ஜீவன் எனப்படுகிறது .. ஸ்ரீ பரமாத்மாவிற்கும் புருஷனுக்கும் இருக்கும் வித்யாஸமும் இதுவே .. பரப்ரஹ்மமாக இருக்கும் ஸ்ரீ பரமாத்மன் உருவாக்கி விளையாட வேண்டும் என்று விரும்பி , தன்னை புருஷனாக வெளிப்படுத்திக் கொள்கிறார் .. ப்ரக்ருதி அல்லது மாயையை ஸ்ருஷ்டி செய்கிறார் .. மாயையுடன் இணைந்து ஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டி செய்கிறார் ..) இவ்வகையில் புருஷனே , பரமனே நமக்குத் தந்தை ஆகிறார் .. மநுஷ்ய குலத்திற்கு மாத்ரம் அல்ல .. அனைத்து ஜீவன்களுக்கும் பிதா அவனே ..
ஸ்வாமி விவேகானந்தர் க்றிஸ்தவப் பாதிரிகளைப் பார்த்துச் சொல்வார் .. "மநுஷ்யன் அம்ருதத்திற்க்குப் பிறந்தவன் .. ஸ்ரீ பரமாத்மாவிற்குப் பிறந்தவன் .. அவனது அம்ஶமே ஜீவன்கள் அனைத்தும் .. அவனை பாபத்திற்குப் பிறந்தவன் என்று சொல்வதே பாபம் .. ஹே பாபிகளே என்று மநுஷ்யனை அழைப்பது மிகப் பெரும் பாபம்" .. அதன் ஆதாரம் ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் இங்கு கூறும் இந்த வார்தைகளே .. வேதத்திலும் மநுஷ்யனை அம்ருத புத்ரன் என்று சொல்லப் பட்டுள்ளது .. "அம்ருதஸ்ய புத்ரோஹம் .."
Comments
Post a Comment