ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 189
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृति सम्भवाः .. (अध्याय १४ - श्लोक ५)
ஸத்வம் ரஜஸ்தம இதி குணாஹ ப்ரக்ருதி ஸம்பவாஹ .. (அத்யாயம் 14 - ஶ்லோகம் 5)
Sattvam RajasTama Iti Gunaah Prakruti Sambhavaah .. (Chapter 14 - Shloka 5)
அர்தம் : ஸத்வம் , ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்கள் ப்ரக்ருதியில் இருந்து உத்பத்தி ஆனவை ..
ஸத்வம் , ரஜஸ் மற்றும் தமஸ் இவை முக்குணங்கள் ..ப்ரக்ருதியில் தோன்றிய இவை மூன்றும் ஸ்ருஷ்டியில் அனைத்திலும் காணப் படுகின்றன .. இம்மூன்று குணங்களின் பல்லாயிரக்கணக்கான விதக் கலவைகள் படைப்பில் உள்ள ஆயிரம் ஆயிரம் வகைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம் .. ஸ்தாவரங்கள் , பஶு பக்ஷீகள் , பூச்சி வகைகள் , மநுஷ்ய இனம் என்று அனைத்துமே முக்குணங்களின் கலவை .. ஜீவன்களின் ஸ்தூல ஶரீரங்கள் ப்ரக்ருதியில் தோன்றிய பஞ்ச பூதங்களின் கலவை என்றால் ஸூக்ஷ்ம ஶரீரங்கள் வெளிப்படுத்தும் குணங்கள் அல்லது தன்மைகள் முக்குணங்களின் கலவை எனலாம் .. முக்குணங்களின் எத்தனை கோடி கலவைகள் (Combinations) இருக்க முடியுமோ , அத்தனை கோடி மனப்பான்மைகளைக் காண முடியும் ..
முக்குணங்கள் என்பது ஹிந்துக்கள் உலகத்திற்கு அளித்த மஹத்தானதொரு பங்காற்றல் .. குறிப்பாக மனோ விக்ஞானத்தில் இந்த விவரம் புரக்ஷிகர மாற்றம் - முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம் ..
அனைத்து உயிர்களிலும் இவை மூன்றும் கலந்தே உள்ளன .. ஒன்று அதிகமாகவும் மற்ற ரெண்டும் குறைவாகவும் இருக்கலாம் ..
முக்குணங்கள் மற்றும் இம்மூன்றின் கலவைகள் வகைகளே அன்றி பேதங்கள் அல்ல .. இம்மூன்றினுள் உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் கிடையா .. குணங்கள் ப்ரக்ருதியின் அம்ஶம் ஆனதால் பரமனை அறிவதில் இவை பயன் அற்றவை .. ஆத்யாத்மீக ஸாதகர்கள் இம்மூன்று குணங்களையும் தாண்டி உயர வேண்டும் .. குணாதீதன் ஆக வேண்டும் ..
முக்குணங்களைப் படித்தவுடன் ஸுற்றி உள்ளவர்களின் குணங்களை ஆராய்ந்து , மதிப்பெண் அளிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது .. தன்னை ஆராய்ந்து அறிவதற்கு மாத்ரமே பயன்படுத்த வேண்டும் ..
Comments
Post a Comment