ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 199
अव्यभिचारेण भक्ति योगेन .. (अध्याय १४ - श्लोक २६)
அவ்யபிசாரேண பக்தி யோகேன .. (அத்யாயம் 14 - ஶ்லோகம் 26)
Avyabhichaarena BhakthiYogena .. (Chapter 14 - Shlokam 26)
அர்தம் : அசையாத பக்தியினால் ..
அஸையாத பக்தியினால் .. நிலையான பக்தியால் .. இதற்கு ஸ்ரீ க்ருஷ்ணன் உபயோகப் படுத்தும் வார்தை .. அவ்யபிசாரேண பக்தி .. வ்யபிசாரியைப் போல் அல்லாமல் .. கடுமையான உபமானம் ..
வ்யபிசாரி (வேஶி) ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளக் காரணம் என்ன ?? அவன் கொடுக்கப் போகும் பணம் .. தன் மனஸில் உள்ள ஆஶைகள் , கனவுகளை பூர்தி செய்யப் போகும் அந்தப் பணம் .. மற்றபடி , அவனைப் பற்றிய எந்த சிந்தனையும் அக்கறையும் அவளுக்குக் கிடையாது .. 'நீ இல்லை என்றால் வேறொருவன்' என்ற கருத்தே ..
பக்தி என்ற பெயரில் நாம் பகவானுடன் கொள்ளும் உறவைப் பாருங்கள் .. அவனிடம் செல்கிறோம் .. நம் மனஸு முழுவதும் நம்முடைய தேவைகள் , நம்முடைய கோரிக்கைகள் , நம்முடைய கவலைகள் தான் நிரம்பி உள்ளன .. அவன் இல்லை .. அவனது பெருமைகளோ அவனது மஹிமைகளோ இல்லை .. நம் தேவைகளை அவன் அநுப்பி வைப்பான் , நம் கோரிக்கைகளை அவன் பூர்தி செய்து வைப்பான் , நம் கவலைகளை அவன் தீர்த்து வைப்பான் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவன் ஸந்நதிக்குச் செல்கிறோம் .. பிரார்தனை என்ற பெயரில் அவனிடம் கெஞ்ஜுகிறோம் .. மன்றாடுகிறோம் .. மிரட்டி நிர்பந்தப் படுத்தவும் முயல்கிறோம் .. ஆனால் , மனஸின் அடியாழத்தில் , "நீ இல்லை என்றால் வேறொருவன்" என்ற கருத்தே இருக்கிறது ..
பக்தி என்றால் உறுதியான ஶ்ரத்தை வேண்டும் .. அவன் இருக்கிறான் என்ற ஶ்ரத்தை .. அவன் அறிவான் என்ற ஶ்ரத்தை .. அவஶ்யமானதை , அவஶ்யம் என்று அவன் நினைத்தால் , அருள்வான் என்ற ஶ்ரத்தை .. என் சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருப்பவனின் யோக - க்ஷேமத்தை நான் பூர்தி செய்கிறேன் என்ற வாக்குறுதி செய்தவன் அல்லவா அவன் !! எல்லாவற்றையும் விட்டு என்னை ஶரண் அடைந்தால் , உன்னுடைய ஸர்வ பாபங்களையும் அழித்து மோக்ஷம் அருள்கிறேன் என்ற திவ்ய வாக்குறுதியை அளித்தவன் அல்லவா அவன் ஶ்ரத்தையுடன் கூடிய , மற்ற எதைப் பற்றியும் கவலைப் படாத இத்தகைய பக்தியையே அவ்யபிசாரேண பக்தி என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..
Arumai arumai ji. அருமையாக விளக்கியுள்ளீர். இப்படித்தான் பலர் என் பெயரை rakavan என்று சொல்வார்கள். Raghavan என்று எப்படி புரிய வைப்பது?
ReplyDelete